Home சமையல் குறிப்புகள் ஆட்டுக்கறி சமோசா

ஆட்டுக்கறி சமோசா

16

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
1 வெங்காயம், நன்றாக நறுக்கியது
2 ப‌ல் பூண்டு – நசுக்கியது
2 தேக்கரண்டி சீரகம்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் காற்சில்லு சர்க்கரை
2 தேக்கரண்டி உப்பு
500g நன்றாக நறுக்கிய இளம் ஆட்டுக்கறி
1/4 கப் தண்ணீர்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1/2 கப் உறைந்த பட்டாணி
1/4 கப் கொத்தமல்லி நறுக்கியது
4 பேஸ்ட்ரி தாள்கள் (பொங்கியமாப்பசை)
1 முட்டை, நன்றாக அடித்துகொள்ளவும்
மாம்பழ சட்னி, பரிமாற‌
அனைத்து பொருட்கள் தேர்வு
செய்முறை

செய்முறை 1
ஒரு கடாயில் மிதமான தீயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, அதனுடன், வெங்காயம், பூண்டு, சீரகம், கரம் மசாலா தூள், சர்க்கரை, நன்றாக நறுக்கிய ஆட்டுக்கறி மற்றும் உப்பு சேர்க்கவும். இதை ஒரு மர கரண்டியால் 3 முதல் 5 நிமிடம் வரை நன்கு வெந்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.
செய்முறை 2
இதனுடன் தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் பட்டாணி சேர்த்து, 8 நிமிடங்கள் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். தண்ணீர் முற்றிலும் வற்றியவுடன் கொத்தமல்லி இலையை தூவி மசாலாவை நன்கு ஆறவிடவும்.
செய்முறை 3
200 ஊ சி நுண்ணலை(மைக்ரோவேவ்) அடுப்பில். 2 ம் அடுக்கு தட்டுகளில், ஒவ்வொரு தாளையும் 9 x 8cm வட்டங்களில் வெட்டி, ஒவ்வொரு வட்டத்தின் மையத்தில் கலவையை ஒரு கரண்டி வைக்கவும். பிறகு இதை அரை வட்டமாக தண்ணீர் தொட்டு மடிக்கவும்.tamil samayal.net மடித்த முனைகளை நன்றாக விரல் நுனியில் அழுத்தி விடவும். இதை மின்சார‌ அடுப்பு தட்டுக்களின் மீது வைக்கவும்.
செய்முறை 4
தட்டுகளில் வைக்கும் முன், நன்கு அடித்து வைத்துள்ள முட்டை கலவையை, சமோசா மீது தடவி 20 முதல் 25 நிமிடம் வரை நுண்ணலை(மைக்ரோவேவ்) அடுப்பில் வைக்கவும். 10 நிமிடம் ஒரு முறை தட்டுக்களை மாற்றி வைக்கவும் அல்ல‌து சமோசா நன்கு பொரிந்து பொன்னிறமாகும் வரை வைக்கவும். தொட்டுக்கொள்ள சட்னியுடன் பரிமாறவும்.