Home பாலியல் அந்தரங்க பாலியல் உறவை பலப்படுத்தும் ஒரு தகவல்

அந்தரங்க பாலியல் உறவை பலப்படுத்தும் ஒரு தகவல்

384

பாலியல் உறவு :வெற்றிலை என்பது நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருளாகும். வீட்டில் நடக்கும் சுப காரியமாய் இருந்தாலும் சரி, துக்க காரியமாய் இருந்தாலும் சரி வெற்றிலை

தாம்பூலம் இன்றி நடக்காது. வீட்டிற்கு வந்தவர்கள் எந்தவித மனக்கசப்பும் இன்றி செல்வதற்காக வெற்றிலை பாக்கு கொடுப்பது நமது பண்பாடாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வெற்றிலை கொடுப்பது பாரம்பரியம் மட்டுமல்ல அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. வெற்றிலை செரிமானத்திற்கு மட்டுமே என்று அதன் பலன்கள் சுருக்கப்டுகிறது,

அதன் முழு பயன்பாடும் தெரிந்தால் நம்முடைய தினசரி உணவில் கட்டாயம் வெற்றிலையை சேர்த்திவிடுவோம். வெற்றிலை சாப்பிட வேண்டியதன் மகத்துவத்தை இங்கு பார்ப்போம்.

வலி நிவாரணி
வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணி ஆகும். வெட்டுக்கள், சிராய்ப்புகள், வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையை பயன்படுத்தலாம். வெளிப்புற காயங்களுக்கு

வெற்றிலையை அரைத்து பசையாக்கி காயங்களின் மேல் தடவலாம், உட்புற வலிகளுக்கு வெற்றிலையை மென்றோ அல்லது சாராகவோ குடிக்கலாம். இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரைப்பை வலி வெற்றிலை கெர்ட் (GERD) எனப்படும் இரைப்பையில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்துகிறது. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் சிறிதளவும் இல்லை. மேலும் சமநிலையற்ற பிஹெச்(PH) ஆல் ஏற்படும் அமிலத்தன்மையை குறைக்கிறது. இது பிஹெச்(PH) அளவை சீராக்குவதோடு இரைப்பையை சுத்திகரிப்பு செய்வதிலும் உதவுகிறது. எனவே இரைப்பை வலி ஏற்பட்டால் உடனடியாக வெற்றிலையை சாப்பிடுங்கள்.

பசியை அதிகரித்தல் எடை குறைக்க விரும்புவர்கள் வெற்றிலையை சாப்பிட வேண்டாம் ஏனெனில் வெற்றிலை உங்களுக்கு அதிக பசியை ஏற்படுத்தும். உங்கள் உடலின் பிஹெச்(PH) அளவு குறைவதே பசியின்மைக்கு காரணமாகும். வெற்றிலை உங்கள் பிஹெச்(PH) அளவை சீராக்குவதால் பசியை தூண்டக்கூடிய ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது. இது பசியை அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

பற்களை வலுப்படுத்துகிறது வெற்றிலை வாய்வழி ஏற்படும் கிருமிகள் மற்றும் பாக்டீரிய தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. வெற்றிலை மெல்வது உங்கள் வாயினை சுத்தப்படுத்தும். இது பல் சிதைவை தடுப்பதோடு ஈறுகளையும் பாதுகாக்கிறது. தினமும் ஒருமுறை சூடான தண்ணீரில் வெற்றிலையை போட்டு வாய் கொப்பளிப்பது உங்கள் பற்களுக்கும், ஈறுகளுக்கும் பாதுகாப்பு கவசமாய் அமையும் மேலும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவை கட்டுப்படுத்தும். உங்களுக்கு வாய்ப்புண் இருந்தால் வெற்றிலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் விரைவில் வாய்ப்புண் குணமாகும்.

இருமல் இருமலை குணப்படுத்துவதற்கு வெற்றிலை ஒரு அற்புத மருந்தாகும். இதிலுள்ள ஆன்டிபையாட்டிகள் இருமலை கட்டுப்படுத்துவதோடு இருமலால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. வெற்றிலையை நீரில் கொதிக்கவைத்து அதில் கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்துவர இருமல் விரைவில் குணமாகும்.

சுவாசப்பிரச்சினை இது இருமல் மற்றும் குளிரால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தக்கூடும். மேலும் நெஞ்சு சளி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் வழங்குகிறது. இது சுவாச பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும், கடுகு எண்ணெயை வெற்றிலையில் தடவி அதனை சூடு செய்து மார்பின் மீது வையுங்கள். இல்லையனில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை கொதிக்கவைத்து அதில் சில வெற்றிலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று முறை குடித்து வந்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

மூச்சுக்குழல் வெற்றிலையின் மிகசிறந்த பயன்களில் ஒன்று மூச்சுகுழல் அடைப்பை சரிசெய்வதாகும். இது மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் வீக்கத்தை குறைக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வர மூச்சுக்குழல் செயல்பாடு சரிசெய்ய படுவதோடு நுரையீரல் வீக்கமும் குறையும்.

மந்தநிலை நீங்கள் மந்தமாக உணருபவராகவோ அல்லது நரம்பு தளர்ச்சி உடையவராவோ இருந்தால் வெற்றிலை உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். வெற்றிலை சாறை தேனில் கலந்து தினமும் குடித்து வந்தால், அது உங்கள் மூளையை சுறுசுறுப்படைய செய்யும். இதன் மூலம் உங்கள் மன செயல்பாடு அதிகரிப்பதோடு உங்களை உற்சாகமா வைத்திருக்கவும் உதவுகிறது.

தலைவலி தலைவலி இருப்பவர்கள் நெற்றியில் வெற்றிலையை ஒட்டிக்கொள்வதை நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். உண்மையில் இது பலன் தரக்கூடிய எளிய வழியாகும். வெற்றிலைக்கு பதிலாக வெற்றிலை எண்ணெயையும் பயன்படுத்தலாம்

யோனி சுகாதாரம் யோனி அரிப்பு மற்றும் பிற அலர்ஜிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணமாகும். வெற்றிலை கொதிக்கவைத்து அந்த தண்ணீரால் பிறப்புறுப்பை கழுவினால் நாகு ஏற்பட்டுள்ள அலர்ஜிகள் விரைவில் குணமடையும். மேலும் இது பெண்களின் பாலியல் ஆசையையும் தூண்டும்.

ஆண்மை அதிகரிப்பு இயற்கை முறையில் ஆண்மை அதிகரிப்பில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. படுக்கையறையில் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆண்கள் தினமும் வெற்றிலை சாப்பிட வேண்டும். இதில் உள்ள அமிலங்கள் உங்கள் காம உணர்ச்சியை அதிகரிப்பதோடு விரைவில் விந்து வெளியேறுவதையும் தடுக்கிறது. வெற்றிலை நமது பண்பாட்டின் அடையாளம் மட்டுமல்ல நமது ஆரோக்கியத்தின் அடிப்படையும்தான். இனிமேலாவது வெற்றிலை சாப்பிடுவதை கௌரவ குறைச்சலாக நினைக்காமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாங்கி மெல்லுங்கள். வீட்டில்எந்நேரமும் வெற்றிலை இருப்பது நல்லது.