Home இரகசியகேள்வி-பதில் உறவின்போது சுக்கிலப்பாயம் வெளியேறும்போது விலகிவிடுவோம். இது சரிதானா?

உறவின்போது சுக்கிலப்பாயம் வெளியேறும்போது விலகிவிடுவோம். இது சரிதானா?

176

கேள்வி: நான் ஒரு பெண். எனக்கு வயது 23. காதல் திருமணம் முடித்து ஒரு வருடம். வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபின் பெற்றுக்கொள்ளலாம் என்று குழந்தைப் பேற்றைத் தள்ளிவைத்திருக்கிறோம்.

உறவின்போது சுக்கிலப்பாயம் வெளியேறும்போது விலகிவிடுவோம். இது சரிதானா?

இதில் பிரச்சினைகள் எதுவும் வருமா? மற்றொரு கேள்வி. உறவில் முன்னிருந்த ஈடுபாடு இப்போது இல்லை. முன்பு விரைவாகவே நான் உச்சநிலை தொட்டுவிடுவேன்.

இப்போது அப்படியில்லை. மேலும் விருப்பமில்லாத நிலையில் உறவுகொள்ளும்போது வலியெடுக்கிறது. ஈடுபாடு இல்லாததற்கு பெண்ணுறுப்பு விரிவடைந்ததுதான் காரணமா?

இதுபற்றிக் கணவரிடம் தெரிவிக்கவில்லை. அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

பதில்: நல்ல முடிவு எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் வயது இன்னும் இருப்பதால் நீங்கள் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவதில் தவ றில்லை. குழந்தைப் பேற்றைத் தடுப்பதற்காக நீங்கள் கடைப்பிடிக்கும் முறை சரியானதுதான். ஆனால், உங்கள் பிரச்சினைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
மணமுடித்த புதிதில் தினந்தினம் புது அனுபவங்கள் உங்களை விரைவிலேயே உச்சநிலைக்கு இட்டுச் சென்று விடும். அதுவே பழகிவிடுவதால், அதற்கு மேலும் தேவைப் படுகிறது. நீங்கள் இயற்கையான முறையில் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவதால் கணவரின் முழுமையான வேகத்தை உங்களால் உணர முடியாது போயிருக்கிறது. இந்த நிலையில் ஆணுறையைப் பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களது உறவு முழுமையடையும். நீங்களும் திருப்தியடையலாம்.
உடலுறவில் திருப்தியில்லாதவிடத்து ஆர்வம் குறைந்துவிடும். கடந்த ஒரு வருடத்தில், ஆறுமாத காலத்தின் பின்னரான உறவு உங்களுக்குத் திருப்தி ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதன் அடிப்படையில்தான் உங்களுக்கு உறவில் ஆர்வம் குறைந்திருக்கிறது. எனவே ஆணுறையைப் பயன்படுத்தி னால் இந்த இரண்டு பிரச்சினைகளும் தீரும்.
குழந்தைப் பேற்றுக்குப் பின்னரே, அதுவும் சுகப் பிரசவமாக, இயற்கையான முறையில் குழந்தை பிறந்தால் பெண்ணுறுப்பு தளர்ச்சியடையலாம். உங்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லாத நிலையில் உங்கள் பெண்ணுறுப்பு விரிவடைந்திருக்க வாய்ப்பில்லை.
உறவில் ஆர்வமோ, விருப்பமோ இன்றி ஈடுபட்டால் நிச்சயமாக அது வலிதரும் அனுபவமாகவே அமையும். இந்த நிலையில், உங்கள் கணவரிடம் இதுபற்றிக் கலந்து பேசி, அவரை ஆணுறை அணியச் செய்வதன்மூலம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

——————————–

கேள்வி: நான் பதினான்கு வயதில் பருவமடைந்தேன். அதன் பிறகு கடந்த நான்கு வருடங்களாக மாதவிடாய் வரவில்லை. எல்லா மருத்துவமும், சமயம் சார்ந்த சில விடயங் களையும் செய்துவிட்டோம்.

ஆனால் இன்னமும் எனக்கு மாத விடாய் வரவில்லை. இதற்கு நான் என்ன செய்வது?

பதில்: மிகச் சில பெண்களுக்கு இதுபோன்று நடப்ப துண்டு.

தொடர்ந்து மருத்துவ ரீதியாக சிகிச்சைகளைப் பெறுவதன் மூலமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடி யும்.
—————————————————–

கேள்வி: நான் ஒரு ஆண். வயது 34. திருமணம் ஆகிவிட்டது. என் மனைவியுடன் உறவு கொள்கையில் விரைவாகவே விந்து வெளியாகிவிடுகிறது.

மேலும் சிறுநீர் கழித்த ஓரிரு நிமிடங்களின் பின் சில துளிகள் சிறுநீர் வெளியாகிறது. இது என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. வைத்தியரிடம் செல்லவும் சங்கடமாக இருக்கிறது.

இதற்கு தீர்வு தரவேண்டும்.

பதில்: திருமணமான ஆண்களில் பலருக்கும் உள்ள பிரச்சினைதான் விந்து முந்துதல்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உங்களது பணியிடச் சூழல், வாழ்க்கை நிலை, உட்கொள்ளும் உணவு என்று பல கார ணங்கள் இருக்கின்றன.

இதற்கு மருந்துகள் ஏதும் இல்லை. உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

உறவில் நீங்கள் உச்சநிலையை அடையும் முன்னதாக சிறு இடைவெளி விடுவதன் மூலம் உறவை இன்னும் நீளப்படுத்தலாம்.

உங்களது சிறுநீர் பிரச்சினையைப் பொறுத்தவரை உங்களது சிறுநீர் தாரையில் ஏதேனும் சிறு பிரச்சினை இருக்கலாம்.

இதுபோன்ற பிரச்சினைகளை நிச்சயமாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறத்தான் வேண் டும்.

தயங்கிக்கொண்டிருந்தால் பிரச்சினை பெரிதாகி விடலாம். எனவே உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

———————————————
சாப்பிட்ட உடன் உடலுறவில் ஈடுபடுவது நல்லதா?: வைத்தியரின் ஆலோசனை…!

மனித வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களில் ஒன்று உடலுறவு. அப்படிப்பட்டதை எந்த நேரத்தில் செய்தால் சரியாக இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

நன்றாக சாப்பிட்ட உடன் உடலுறவில் ஈடுபட்டால், நீங்கள் அந்த சிறப்பான தருணத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியாது.

உண்ட உடன் உறவில் ஈடுபட்டால், உடலில் உள்ள ரத்தங்கள் விறைப்புத்தன்மைக்கு செல்வதா அல்லது உணவு செரிமானத்துக்கு செல்வதா என குழப்பமடையும்.

ஆய்வறிக்கையின் படி பெண்கள் உணவு உண்பதற்கு முன் செக்ஸில் ஈடுபட்டு சுகத்தை அனுபவிக்கவே விரும்பிகின்றனர். அல்லது வயிறு முழுவதுமாக நிரம்பாமல் இருக்கும் போது தான் விரும்புவதாக கூறுகிறது.

நன்றாக சாப்பிட்ட உடன் உடலுறவு தவறு. அதே சமயம் மிகவும் பசிக்கின்ற அல்லது பட்டினியாக உள்ள வயிறுடன் உறவு வைப்பது தவறு.

Previous articleவிந்து நிறம் வைத்து, ஒரு ஆணின் ஆரோக்கியம் பற்றி அறிவது எப்படி?
Next articleஉடலுறவுக்கு நீங்கள் அடிமை என்பதை உணர்த்தும் 10 விஷயங்கள்!