Home சூடான செய்திகள் உங்கள் தாம்பத்திய இல்வாழ்க்கை உறவை இப்படி மேம்படுத்தலாம்!

உங்கள் தாம்பத்திய இல்வாழ்க்கை உறவை இப்படி மேம்படுத்தலாம்!

143

சூடான செய்திகள்:காதல் / இல்லற உறவில் சண்டைகள் எழுவது இயற்கை. ஆனால், அது தற்காலிகமாக இருக்க வேண்டும் தவிர, நிரந்தரமாக உறவிலேயே தங்கிவிட கூடாது.

இன்றைய தலைமுறையில் பலரும் செய்யும் தவறு யாதெனில், சீக்கிரமாக இணைந்து விடுகிறார்கள். இணைந்த வேகத்தில் பிரிந்துவிடுகிறார்கள். கேட்டால், திருமணம் ஓல்ட் ஃபேஷன், அவுட் ஆப் டேட் என்று கூறுகிறார்கள்.

நீரின்றி மட்டுமல்ல காதல் இன்றியும் இந்த உலகில் எதுவும் அமையாது. இந்த ஐந்து டெக்னிக்கை நீங்கள் சரியாக பின்பற்றினால் நிச்சயம் இல்வாழ்க்கை உறவை ஆரோக்கியமாகவும், வலுமையகவும் மேம்படுத்தலாம்…

குறுக்கீடு! குறுக்கீடு என்பது தவறான ஒன்று. எந்த ஒரு விஷயத்தின் நடுவேயும் குறுக்கிடுவது தவிர்க்க வேண்டியது என பள்ளிக்கூடத்தில் இருந்து அலுவலகம் வரை நாம் கற்றவை தான். ஆனால், இங்கே நாம் குறுக்கிடலாம். முள்ளை, முள்ளால் எடுப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். உறவில் பெரும்பாலும் ஒருவர் பேசுவது மற்றொருவர் முழுமையாக கேட்காமல் குறுக்கிட்டு பேசும் போதுதான் சண்டையே பிறக்கிறது. வேலை முடித்து மனைவி சோர்வாக வரும் போது, கணவரை பார்த்து ஏதோ கூற, அவர் சோர்வாக இருப்பதால் தான் அலுத்துக் கொண்டு பதில் கூறுகிறார் என்பதை அறிந்துக் கொள்ளாமல், மனைவி தன் மீது வெறுப்பை கொட்டுவது போல கணவன் உணர்ந்து அவர் பதிலுக்கு ஏதோ பேச இனிமையாக துவங்க வேண்டிய மாலை, கொடுமையாக துவங்கும். இங்கே தான் நீங்கள் எதிர்மறை எண்ணம் எழும் போது, குறுக்கிட்டு… நேர்மறை எண்ணத்தை புகுத்த வேண்டும். துணையின் முகத்தை, உடல் பாவனையை வைத்து அவர் அலுப்பாக இருக்கிறார் என்பதை அறிந்துக் கொண்டு, எதிர்மறை எண்ணங்கள் எழாத வண்ணம் உரையாடலை துவக்கினால் உங்கள் இருவருக்கும் பிரச்சனையே வராது. உறவு ஆரோக்கியமாக இருக்கும். எனவே, உங்கள் துணை சோர்வாக இருக்கிறார் என்று அறிந்தால்… அவரை கேள்விக்கேட்டு நச்சரிக்காமல்… அவருக்கு எது பிடிக்குமோ அதை செய்யுங்கள். கொஞ்சம் ரெஃப்பிரெஷ் ஆனவுடன் மொபைலை நோண்டி கொண்டிருக்காமல் அவரை அழைத்துக் கொண்டு பத்து நிமிடம் வாக்கிங் செல்லுங்கள். நிச்சயம் அந்த வாக்கிங் குறைந்தது ஒரு மணிநேரம் நீடிக்கும். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரே அந்த சோர்வுக்கு என்ன காரணம், அன்றைய தினம் எப்படியாக அமைந்திருந்தது என்று மொத்த கதையும் கூறிவிடுவார். அப்போது நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, அவருக்கு ஆறுதலாக சில வார்த்தை பேச வேண்டியதே ஆகும்.

உணர்ச்சி! முதல் கட்டம் எதிர்மறை எண்ணங்களை தகர்த்து உருவாகாமல் தடுப்பது. எதிர்மறை வட்டத்தில் இருந்து வெளியேறிய பிறகு நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த காரியம். உங்கள் துணையின் உணர்ச்சிகளை சரியாக அறிந்து, உணர்ந்து அதற்கு ஏற்ப நடந்துக் கொள்ள வேண்டியது. உறவு என்பது உங்களுக்கு பிடித்தது, உங்களுக்கு வேண்டியது, உங்களுக்கு வேண்டிய போது இணைவது, மகிழ்ந்து பேசுவது என்பதல்ல. உறவு என்பது உங்கள் துணையை பற்றி அறிந்து, அவருக்கு ஏற்ப நீங்களும், உங்களுக்கு ஏற்ப அவரும்… ஒருவருக்கு ஒருவர் பலமாக இருப்பது. ஃபார்முலா தெரியாமல் கணக்கில் விடை அறிய முடியாது என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை உங்கள் துணையின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளாமல் ஒரு ஆரோக்கியமான உறவை உண்டாக்குவது. உணர்வுகளை, உணர்ச்சிகளை சரியாக புரிந்துக் கொண்டால் அதற்கு ஏற்ப நமது பேச்சும், உடலும் இயங்கும். அதனால் உறவு ஆரோக்கியமானதாக உருமாறும். சிரித்த முகமாவே இருப்பினும், துணையின் மனம் வருத்தத்தில் இருக்கிறது என்ற உண்மை உணர்ச்சியை நீங்கள் அறிந்தால்… நிச்சயம் அவர் முன் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். அவர் கைகளை கோர்த்து என்ன ஆச்சு சொல்லு என்று கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.

வேண்டியவை, தேவைகள்! துணையின் உணர்ச்சிகளை புரிந்துக் கொண்டாயிற்று… இதனால் மட்டும் உறவை வலிவாக வழிநடத்திவிட முடியுமா? நிச்சயமாக இல்லை. முதலில் யார் ஒருவன் தன்னை தானே சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லையோ, அவனால் நிச்சயம் பிறரை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது. எனவே, உங்களுக்கு என்ன தேவை, நீங்கள் வேண்டுபவை என்ன, விரும்புவது என்ன? உங்கள் வாழ்வின் அத்தியாவசியங்களை முதலில் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். உறவு என்று வரும் போது, உங்களுடைய தேவை, துணையின் தேவை.. இரண்டும் சேர்ந்து முடிவில் நமது தேவை என்ன? என்பதில் சேர்கின்றன. இருவருக்குமே தேவையானது என்னென்ன, ஒருவரது தேவை மற்றவரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனில், அதை நிச்சயம் இருவரும் சேர்ந்து பரிசீலிக்க வேண்டும். மனைவி அதிகம் நகை, உடை வாங்குகிறார், கணவன் அதிகம் மது, புகையில் பணம் செலவு செய்கிறார் எனில் நிச்சயம் உறவில் சண்டை வர தான் செய்யும். இது பண விவகாரத்தில் மட்டுமல்ல, வேறு எந்த உருவில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, தேவை என்பதை உன்னது, என்னது என்று பிரித்து பாராமல், நம்முடைய தேவை என்ன என்று தேர்வு செய்யுங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். மேலும், இது உணர்வு ரீதியாகவும் ஒருவருடன் ஒருவர் நெருக்கம் அடைய உதவும்.

உறுதுணை! உறவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முதல் தேவை இந்த உறுதுணை. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். உதவி என்று கேட்கும் முன்னரே, அவரது தேவை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் நீங்கள் உறுதுணையாக இருக்கும் பட்சத்தில்… நீங்கள் உணர்ச்சி ரீதியாக உங்கள் துணையை நன்கு புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என்பதை பிரதிபலிக்கும். கணவன், மனைவி உறவில் திருப்தி எதில் தெரியுமா இருக்கிறது… ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொண்டு, அவரது சூழலுக்கு ஏற்ப நடந்துக் கொள்வதில்.

வெளிபடுத்துங்கள்! பலரும் செய்யும் தவறு என்ன தெரியுமா? தங்கள் துணையை நன்கு புரிந்து வைத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் மீது போதுமான அளவு, அவர்கள் அறியும் வகையில் அந்த காதலை வெளிப்படுத்த மாட்டார்கள். காதல் என்ன சேமிப்பு கணக்கா வங்கியில் போட்டு வைத்துக் கொள்ள… இங்கே வெளிப்படுத்தினால் தான் வட்டி (பாசம், இணைப்பு) அதிகமாகும், அதனால் இன்பம் உறவில் பெருகும். எனவே, உங்கள் காதலை வயது, நிலைமை, சூழல், கவலை என்று எதையும் காரணம் காட்டாமல் வெளிப்படுத்துங்கள். உறவு என்றென்றும் இளமையாக இருக்கும்.