Home பெண்கள் உடல் கட்டுப்பாடு நீங்கள் குண்டுப் பெண்ணா? உடல் எடை குறைக்க இலகுவான டிப்ஸ்

நீங்கள் குண்டுப் பெண்ணா? உடல் எடை குறைக்க இலகுவான டிப்ஸ்

102

உடல் கட்டுப்பாடு:அதிக உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதிக உடல் பருமனுக்கு எதிரான தினம் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உடல் பருமன் அதிகரிப்பு உலக அளவில் மிகப்பெரிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் 15-49 வயதுடையவர்களில் 20.7 % பெண்களும், 18.6% ஆண்களும் அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் அதிகரிப்பது, இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

இந்நிலையில், உடல்பருமன் அதிகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 11 ஆம் தேதி உடல் பருமன் அதிகரிப்புக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உடல் எடையை குறைக்கும் எளிமையான 10 வழிகள் என்ன என்பதை இங்கு அறிவோம்.

1.பலவகையான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் எடுத்துக்கொள்ளவும். அவற்றில் கலோரி மிகவும் குறைவாக உள்ளது. மேலும், நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

2.காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்

3.பீன்ஸ், நட்ஸ், தானியங்கள் உள்ளியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்

4.அசைவத்தில் மீன், முட்டைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளவும்

5.குறைந்த கொழுப்புக் கொண்ட பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ளவும் (2 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு கொழுப்புக் குறைவான பாலைக் கொடுக்கக் கூடாது)

6.கொழுப்பு, உப்பு மற்றும் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட துரித உணவுகளைத் தவிர்க்கவும்

7.தினமும் அதிகளவு நீரைப் பகிரவும்

8.எப்போதும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது

9.நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன் அளவை கண்காணித்து, அதைக் கட்டுப்பாட்டில் வைக்கவும்

10.தினமும் நன்றாக தூங்கவும், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது.