Home பெண்கள் தாய்மை நலம் பிரசவ காலம் நெருங்கும்போது ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவது எதற்கான அறிகுறின்னு தெரியுமா?..

பிரசவ காலம் நெருங்கும்போது ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவது எதற்கான அறிகுறின்னு தெரியுமா?..

39

தாய்மை என்பது ஒரு அழகான தருணம். அதிலும் பத்து மாதங்கள் ஒரு குழந்தையை சுமந்து கனவு கண்டு இறுதியில் அதன் பிஞ்சு விரல்கள் நம் கைகளை வருடும் போது கிடைக்கும் இன்பமே தனி தான்.

ஒவ்வொரு அம்மாவும் தன் பிஞ்சு குழந்தையை மார்போடு அணைத்து முத்தமிடும் அந்த தருணத்தை தான் எதிர்நோக்கி காத்திருப்பாள். இதற்காக இந்த பத்து மாதங்களும் அவளின் உடல் அமைப்பு செயல்கள் எல்லாம் மாற்றமடைந்து குழந்தை வளர ஏதுவாக அமையும்.

அறிகுறிகள் இருப்பினும் இறுதி பிரசவ நாட்கள் நெருங்க நெருங்க குழந்தையை காண அவள் படும் தவிப்பும், நன்றாக பெற்றெடுக்க வேண்டும் என்ற பயத்துடனே அவர்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு கூட உள்ளாகி விடுகின்றனர். மேலும் இறுதி நாட்களில் நிறைய மாற்றங்களையும் பிரசவ வலிகளையும் அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதற்காகத்தான் நீங்கள் சந்திக்கும் இறுதி பிரசவ அறிகுறிகளை பற்றி இங்கே கூறயுள்ளோம். தெரிந்து கொண்டு உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள்.

பிரசவ தேதி உங்கள் பிரசவ தேதியை பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தை இன்றைக்கு பிறந்து விடும் என்று ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் சில சமயம் குழந்தையின் கர்ப்ப காலம் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. 42 வாரங்கள் வரை குழந்தை கருவினுள் இருந்து வளரலாம். . கர்ப்ப பை சுருங்கி விரிதல், பிரசவ வலி போன்ற அறிகுறிகள் தென்படாமல் அநாவசியமாக கவலை கொள்ளாதீர்கள். நிம்மதியாக இருங்கள். உங்கள் குழந்தையை காண இன்னும் நேரம் இருக்கிறது.

பொறுமை இழத்தல் பத்து மாதங்கள் வரை உங்கள் குழந்தையை கருவில் வளர்த்து சுமந்துள்ளீர்கள். கடைசி நாட்களில் உங்கள் பொறுமையை இழந்து விடாதீர்கள். வலியை பொறுத்து கொள்ள முற்படுங்கள். மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது.

ஆசனவாயில் வலி கர்ப்பப்பை குழந்தையை தாங்கி அதை சுற்றிலும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி இருக்கும். இந்த மாதிரியான சமயங்களில் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் மாற்றங்களால் மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, நமைச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை சமாளிக்க மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

எடை அதிகரித்தல் உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் குழந்தையை மட்டும் வளர்க்கவில்லை அமினோடிக் திரவம், நஞ்சுக்கொடி போன்றவையும் ஆரோக்கியமாக செயல்பட நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்ஸோமினியா உங்கள் குழந்தையை காணும் தருணங்களை நினைத்து தூக்கமில்லாமல் மகிழ்ச்சியில் அவதியுறுவீர்கள். நிறைய தலையணைகளை வைத்து படுத்தால் கூட உங்களுக்கு நிம்மதியான உறக்கம் வராமல் தவிர்ப்பார்கள்.

அடிக்கடி பாத்ரூம் செல்லுதல் பிரசவ அழுத்தம் காரணமாக சிறுநீர் பையில் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி பாத்ரூம் செல்வீர்கள். எனவே சீக்கிரமாக உங்கள் குழந்தை வெளியே வர விரும்புகிறேன் என்பதை வெளிப்படுத்துகிறது. பிரசவ கால நீரிழிவ பிரச்னை உள்ளவர்களுக்கு பிரசவ தேதி நெருங்கும்போது மட்டுமல்ல, மூன்று மாதத்தில் இருந்தே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஆரம்பித்துவிடும்.

பிரசவ வலிகள் பிடிப்பு, பிராக்ஸ்டன் ஹிக்ஸ், சீரணமின்மை,பாதம் மற்றும் கால்களில் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். இதனால் நீங்கள் களைப்படைந்தாலும் இறுதியில் உங்கள் குழந்தையை கைகளில் தாங்க போறீர்கள்.