Home உறவு-காதல் இந்தமாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் அந்த பெண் உங்களை ஏமாற்ற மாட்டார்

இந்தமாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் அந்த பெண் உங்களை ஏமாற்ற மாட்டார்

39

உங்கள் காதல் துணை உங்களை விட்டு பிரியாமல், நீண்ட நாள் உறவில் இனைந்து இருப்பார்கள் என்பதை எப்படி அறிவது?

இதோ! இந்த அறிகுறிகள் உங்கள் உறவில் தென்பட்டால், உங்கள் காதல் உறவு கண்டிப்பாக திருமணத்தில் தான் முடியும் என்பதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

நேரத்தை வீணடிக்காமல் எதிர்கால திட்டங்கள் குறித்து எப்போதும் பேசுவார்கள். மேலும் அவர்கள் பேசும் எதிர்கால திட்டத்தில் உங்களுக்கான பங்கு அதிகம் இருக்கும். உங்களை அதில் சேர்க்காமல் எந்த ஒரு திட்டத்தையும் இடமாட்டார்கள்.

மேலும், நீங்கள் ஒவ்வொரு செயலில் ஈடுபடும் போதும், எதிர்கால திட்டங்களை நினைவில் வைத்து செயல்படு, இது உன் நாளைய வாழ்க்கையில் எந்த விதமான தாக்கத்தை உண்டாக்கும் என்பதை புரிந்து நடந்துக் கொள் என அறிவுரைதுக் கொண்டே இருப்பார்கள்.

இன்று நீ இப்படி இருக்கிறாய், பத்து அல்லது இருபது வருடங்களுக்கு பிறகு நீ எந்த நிலையில் இருப்பாய். அதற்கு நீ எப்படி உன்னை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும், பிள்ளைகள், வீடு, வாசல் என முழுமையான எதிர்கால துணையாய் உங்கள் அருகில் நிற்பார்கள்.

நம்பிக்கை இல்லாத உறவுகள் என்றும் நிலைக்காது. உங்கள் வாழ்வில் எதிர்மறை தாக்கங்கள் நிறைந்திருந்தாலும், உங்களுடன் துணை நிற்பார்கள்.

உங்கள் தோல்வியில் தோள் கொடுப்பார்கள். அவர்களது இதயம் என்றும் உங்களுக்காக துடித்து கொண்டே இருக்கும்.

அவர்களுடைய பண்பு உங்களுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டே இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவர்கள். ஒரு துளி கூட சந்தேகம் இன்றி, உங்களை நல்வழி நடத்துவார்கள்.

மூன்றாம் நபர்கள் உங்களை பற்றி தவறாக அல்லது கிசுகிசு பேசினால் கூட, அதை அப்படியே வந்து உங்களிடம் கூறி, இப்படி தன்னிடம் கூறுகிறார்கள், இந்த வகையிலான நட்பு வைத்துக் கொள்ளாதே என அறிவுரை கூறி செல்வார்கள்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே உங்களை ஏற்றுக் கொள்வார்கள். தனக்காக இதையெல்லாம் நீ மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி இருந்தால் தான் நான் ஏற்றுக் கொள்வேன் என எந்த விதிகளோ, கட்டுப்பாடுகளோ விதிக்க மாட்டார்கள்.