Home அந்தரங்கம் புதுமணத் தம்பதிகள் உடலுறவுக்கு எப்படித் தயாராக வேண்டும்?

புதுமணத் தம்பதிகள் உடலுறவுக்கு எப்படித் தயாராக வேண்டும்?

1657

உடலுறவு என்பது கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் நிறைந்த விஷயம். உடலுறவில் எந்த அனுபவமும் இல்லாதவர்கள் அதற்காக எப்போது வரும், எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தோடு இருக்கலாமே தவிர, என்ன ஆகும்? என்ற பயத்தை முதலில் விட்டுவிட வேண்டும். காதல் திமணமோ வீட்டில் பார்த்து நடத்தி வைத்த திமணமோ எதுவாக இருந்தாலும் காதல் என்பது வேறு. குடும்ப வாழ்க்கை என்பது வேறு அல்லவ? அதனால் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். பயத்தைக் களைந்துவிட்டு, எப்படி முதல் முறை உடலுறவுக்குத் தயாராக வேண்டும்? அதற்காக மனதளவில் சிறுசிறு விஷயங்களில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டாலே போதும்.

மன அழுத்தம்

புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம் என்றதும் பொறுப்புகள் கூடுவதால் ஆண், பெண் இரண்டு பேருக்கும் அதிக அளவிலான மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதனால் வாழ்க்கையைத் தொடங்க சௌகரியமான நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் உடலளவிலும் நீங்களும் உங்கள் துணையும் முதலில் தயாராக வேண்டும். இருவருக்கும் எந்தவிதமான மன அழுத்தமும் இருக்கக்கூடாது.

பாதுகாப்பு உபகரணங்கள்

முதல் முறையாக உறவில் ஈடுபடுகிற போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகமிக அவசியமான ஒன்று. அதனால் தேவையில்லாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும். ஆணுறை, கருத்தரிப்பு மாத்திரைகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்கள் ஆணுறை வாங்கி வைத்திருப்பார்கள் என்று உங்கள் துணையை நம்பிக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் ஆணுறைகளை வாங்கி வைத்திருப்பது நல்லது. ஆணுறை, மத்திரைகள் இரண்டையும் பயன்படுத்துவது இன்னும் கூடுதல் பாதுகாப்பைத் தான் தருமேயொழிய ஆபத்து எதுவும் இல்லை.

ரத்தப்போக்கு

பெரும்பாலானோர் பெண் கன்னித்தன்மையடன் இருக்கிறாள் என்பதை முதல் முறை உறவின் போது வெளிப்படும் ரத்தத்தை வைத்தே முடிவு செய்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. அந்த காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்ததால் கன்னித் திகை்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் பெண்கள் அப்படியில்லை. விளையாடும்போது, ஓடும்போது, வேகமக நடக்கும் போது, பயணங்களின் போது என எப்போது வேண்டுமானாலும் கன்னித்திரை உடைந்திருக்கும்.

எல்லா பெண்களுக்கும் இதுபோல் ரத்தப்போக்கு உண்டாவதில்லை. பெண்கள் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல். குதித்தல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது கூட கன்னித்திரை கிழிந்துவிடும். அதனால் முதல்முறை உண்டாகும் ரத்தப்போக்குக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது.

அதிக வலி

முதல் முறையாக உறவு கொள்ளும்போது வலி உண்டாவது இயல்பு தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக வலி ஏற்படும். அவர்களுடைய பிறப்புறுப்பு சிறிதாக இருக்கும். அதனால் வலியை அதிகமக உணர்வார்கள். அதற்காக பெரிதாகக் கவலையோ தேவையில்லாத பயமோ கொண்டிருக்கத் தேவையில்லை. கொஞ்ச நேரத்திலேயே வலி குறைந்து சுகமாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் வலியைக் கண்டு பதட்டப்படாமல் இருப்பது தான் சுகத்தைக் கொடுக்கும்.

ஈரப்பதம்

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் இது அவசியம் தான். குறிப்பாக பெண்கள் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி வறட்சியாக இருந்தால் தான் உறவின் போது வலி அதிகமாக இருக்கும்.

முதல் முறை உறவு கொள்வதற்கு முன் ஓரளவு எதிர்பார்ப்டன் இருங்கள். பதட்டத்தையும் பயத்தையும் குறைக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டாலே முதல் முறை உடலுறவை நீங்கள் என்ஜாய் பண்ண முடியும். உங்கள் துணையை உங்கள் பக்கம் கவர்ந்து இழுக்க முடியும்.