Home குழந்தை நலம் பெண்பிளைகளை அதிக அக்கறையுடன் பெற்றோர் பார்துகொள்ளவேண்டும்

பெண்பிளைகளை அதிக அக்கறையுடன் பெற்றோர் பார்துகொள்ளவேண்டும்

27

பெண்கள் தகவல்:மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

ஆனால், நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பார்த்தால், இந்த சமுதாயம் எங்கே போகிறது? என்ற கேள்வி எழுகிறது. பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

* அறிமுகம் இல்லாதவர்கள் குழந்தைகளை கொஞ்சவோ, பேசவோ அனுமதிக்கக்கூடாது.

* உறவினர்கள், தெரிந்தவர்கள் என்றாலும் யாரையும் முழுமையாக நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கக்கூடாது.

* பிற ஆண்களுடன் குழந்தை பேசும் போதும், பழகும் போது பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும்.

* நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* தெரிந்தவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது தனியாக அழைத்தால் அவர்களுடன் செல்லக்கூடாது என்று சொல்லி வைக்க வேண்டும்.

* யாராவது தேவை இல்லாமல், தவறான நோக்கத்தில் பேசினாலோ, தொட்டாலோ அதுபற்றி எந்த தயக்கமும் இன்றி கூறுமாறு சொல்லி வைக்க வேண்டும்.

* விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் குழந்தைகளை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறரை மதித்தல் போன்ற நல்ல பழக்க வழங்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பையன் எங்கே போகிறான்? யார்-யாருடன் பழகுகிறான்? என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துகிறான்? என்பதை கண்காணிக்க தவறக்கூடாது.

இன்றைய செடிதான் வளர்ந்து நாளை மரமாகி சுவையான கனியை தரவேண்டும். எனவே, குழந்தை பருவத்திலேயே பிள்ளைகளை பக்குவப்படுத்தி நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும்.