Home குழந்தை நலம் 9 பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பிற்கான இலக்குகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள்…

9 பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பிற்கான இலக்குகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள்…

27

நாம், இளமை பருவத்தில் புதிய வருடத்தில் ஒரு தீர்மானம் எடுப்போம். அதே போல், திருமணத்திற்கு பிறகு, குழந்தை வளர்ப்பு பற்றி தீர்மானத்தை எடுப்பீர்கள். அதாவது இது உங்கள் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க, அதனால் பிற்காலத்தில் அவர்கள் நல்ல மனிதர்களாய் வளர நீங்கள் செய்யும் ஒரு சிறு முயற்சியாகும். இதோ சில பெற்றோர்களால் அமைக்கப்பட்ட குழந்தை வளர்ப்பு இலக்குகள்.

1. உடற்பயிற்சியை ஓர் விளையாட்டு ஆக்குதல்:
பெரும்பாலான குழந்தைகள் ஓடுவதும் குதிப்பதும் என சுட்டியாக இருப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைக்கிறது. ஆனால், நிறைய குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்வது பிடிக்காது. இக்குழந்தைகளின் சில பெற்றோர்கள், உடற்பயிற்சியை இன்னும் வேடிக்கை ஆக்க முடிவெடுத்தனர். அதனால் தங்கள் பிள்ளையுடன் சேர்த்து தாங்களும் இதில் பங்கெடுத்தனர். நீங்களும் இதை ஈடுபாட்டுடன் செய்தால் உங்கள் குழந்தையும் உங்களை பின்பற்றுவார்கள்.

2. இல்லை என்று சொல்லாதீர்கள்:
“இல்லை” என்றும் “அதை செய்யாதே” என்றும் “இதை செய்யாதே” என்று கூறுவது உங்கள் குழந்தையின் வாழ்வில் ஒரு எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்கும். இது அவர்களுக்கு உங்களை வருத்தமடைய வைத்ததாக உணர வைக்கும். எனவே எக்காரணத்தை கொண்டும் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, அவர்களை வேறு வழியில் திசை திருப்பி அவர்கள் செய்யும் தவறை அவர்களாகவே உணரும்படி செய்யுங்கள்.

3. பிளே-ஸ்கூல் வெளிப்பாடு
மற்றொரு வழி, உங்கள் குழந்தையை பிளே-ஸ்கூல் அனுப்புதல். அங்கே பலதரப்பட்ட மக்கள் இருப்பர். அது அவர்களை வேறுபட்ட மக்களிடம் மற்றும் கலாச்சாரத்திடமும் வெளிப்படுத்தும். இதனால் பள்ளி பருவம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இங்கே நிறைய விளையாட்டுகளை பயில்வதால் நீங்கள் அதன் மூலம் உங்கள் குழந்தையுடனான பிணைப்பை அதிகப்படுத்தலாம்.

4. வரைதல்
உங்கள் அலமாரிகளும் குளிர்பதன பெட்டிகளும், காந்தங்கள் மற்றும் சுவரொட்டிகள் சேகரிப்புக்கு பதிலாக இப்பொழுது புதிய அலங்காரங்கள் இருக்கும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கை வண்ண திறமைகளை வீடு எங்கும் தொங்க விட வேண்டும். இது அவர்களை பாராட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்கும். அதனால் அவர்கள் தங்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் மற்றும் வெளிப்படுத்தவும் உதவும்.

5. கைவினை
உங்கள் குழந்தையின் கற்பனை திறனை அதிகரிக்கவும், உங்கள் குழந்தையோடு இருக்கும் பிணைப்பை அதிகமாக்கவும் கலை மற்றும் கைவினை சார்ந்த வேலைகளை திட்டமிட்டு நீங்களும் அவர்களுடன் சேர்ந்து செய்யுங்கள். இது ஓவியம் வரைதலாகவும் இருக்கலாம் அல்லது மண் அல்லது காகிதம் கொண்டு செய்யும் நகையாக கூட இருக்கலாம். இந்த அனுபவம் உங்களை உங்கள் குழந்தை பருவத்திற்கு அழைத்துச்செல்லும்.

6. சமையல்
உங்கள் குழந்தைக்குள் இருக்கும் சமைக்கும் திறனை வெளியே கொண்டு வாருங்கள். சின்ன சின்ன சமையலை உங்கள் குழந்தையுடன் சேர்ந்து பண்ணலாம். இது அவர்களுக்கு சமையலில் இருக்கும் ஈடுபாடை அறிந்து கொள்வதற்கு உபயோகமாக இருக்கும். அவர்கள் சமையல் நன்றாக வரும் போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்க்கும் போது ஏற்படும் இன்பம் அலாதியானது.

7. தேர்வு
பெற்றோராகிய உங்கள் மற்றொரு இலக்கு என்னவென்றால் குழந்தைக்கு தேவையானதை அவர்களே தேர்வு செய்ய அனுமதிப்பது. இது, அவர்கள் எங்கே செல்ல ஆசைப்படுகிறார்கள், என்ன சமைக்க ஆசைப்படுகிறார்கள், விடுமுறையை எப்படி கழிக்க ஆசைப்படுகிறார்கள் என்பது வரை அவர்கள் விருப்பப்படி செய்யுங்கள். இதன்மூலம் மூன்று விஷயங்கள் நடக்கும் – முதலில் அவர்கள் இந்த குடும்பத்தில் முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும், இரண்டாவது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், அதுமட்டுமல்லாது அவர்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை என்றால் உங்கள் மீது பழி போட மாட்டார்கள், மூன்றாவதாக இது அவர்களின் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும்.

8. விடுமுறை
விடுமுறை நாட்களை உங்கள் குழந்தைகளோடு செலவிடுங்கள். அதுவும் பண்டிகை நாட்களாய் இருந்தால் அந்த பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். இதனால் நம் கலாச்சாரம் பற்றி குழந்தைகள் அறிந்துகொள்வார்கள். தவறாமல் உங்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள்.

9. ஒத்துப்போவது
இது மிகவும் ஒன்று. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏதாவது விஷயத்தில் ஒத்துப்போகவில்லை எனில் சமரசமாக போக முயற்சி செய்யுங்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருக்கும் ஏற்ற ஒரு முடிவை எடுங்கள். நீங்கள் பெற்றோர் என்ற காரணத்தினாலோ அல்லது பெரியவர் என்ற காரணத்தினாலோ உங்கள் விருப்பப்படி தான் உங்கள் குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.