Home பாலியல் கர்ப்பமாக உள்ளபோது பெண்கள் சுயஇன்பம் கொள்ளலாமா?

கர்ப்பமாக உள்ளபோது பெண்கள் சுயஇன்பம் கொள்ளலாமா?

214

பெண்கள் பாலியல்:பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது உடலுறவு கொண்டாலும் சரி, சுய இன்பம் கண்டாலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; இந்த இரண்டில் எந்தவொரு செயலில் ஈடுபடும் முன்னும் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று ஈடுபடுதல் வேண்டும். இதை எப்படி மருத்துவரிடம் கேட்பது என்று நீங்கள் தயங்கினால், நீங்கள் கொள்ளும் தயக்கத்தால் பாதிக்கப்பட போவது உங்கள் குழந்தை தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

ஆகையால், கர்ப்பகாலத்தில் மருத்துவ ஆலோசனை பெற்று எந்தவொரு செயலை செய்வதும், உணவை உண்பதும் முக்கியம். இந்த பதிப்பில் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் சுய இன்பம் காண்பது கருவிற்கு ஆபத்தை விளைவிக்குமா? கருவை பாதிக்குமா என்று படித்து அறியலாம்.

சுய இன்பம் பாதுகாப்பானதா? கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது முதல் 3 மாத காலங்களில் சுய இன்பம் காண்பது மிகவும் ஆபத்தானது; உடலுறவு கொள்வதும் கூட ஆபத்தானது தான்! மீறி கொண்டால் கருக்கலைப்பு கூட ஏற்பட்டு விடலாம். ஆகையால் இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக உடலுறவோ சுய இன்பம் காண்பதோ கூடாது. மேலும் கர்ப்பத்தின் மீதி மாதங்களில் உடலுறவு கொள்வதாய் இருப்பினும், சுய இன்பம் காண்பதாய் இருப்பினும் மருத்துவரிடம் கண்டிப்பாக இது குறித்து ஆலோசனை செய்து பின், செயலில் இறங்குவது நல்லது! மருத்துவ ஆலோசனை உங்கள் உடல் நிலையை பற்றிய சரியான தகவலை மற்றும் ஆரோக்கியம் குறித்த சரியான நிலையை உங்களுக்கு புரிய வைக்கும். அதைக் கேட்டறிந்த பின்னர் நீங்கள் ஒரு தெளிவான முடிவை பயமில்லாமல் எடுக்கலாம். மேலும் கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதும், சுய இன்பம் காண்பதும் பாதுகாப்பானது தான் – மருத்துவ ஆலோசனையுடன் ஈடுபட்டால்! ஆலோசனை இன்றி செயலில் ஈடுபாட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உண்டு.!

கருப்பை சுருங்குமா? சுய இன்பம் காணும் பொழுதும், உடலுறவு கொள்ளும் போதும் பெண்ணின் உடலில் ஆக்சிடோசின் எனும் ஹார்மோன் வெளிவிடப்படும். இது கருப்பை சுருங்குவதை ஊக்குவிக்கும் ஹார்மோன் ஆகும்! கர்ப்பகாலத்தில் மட்டுமல்ல எப்பொழுது இந்த செயல்கள் புரிந்தாலும், அப்பொழுது ஆக்சிடோசின் வெளிப்பட்டு கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும். கர்ப்பகாலத்தில் குழந்தை வயிற்றினுள் இருக்கும் பொழுது கருப்பை சுருங்கினால், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் மற்றும் குழந்தை குறைபாடுடன் பிறக்கவும் வாய்ப்பு உண்டு!

ஏன் இன்பம் அதிகமாக ஏற்படுகிறது? கர்ப்ப காலத்தில் உடலுறவோ சுய இன்பமோ கொண்டால், அப்பொழுது ஏற்படும் இன்பம் மிகவும் அதிகமாக இருக்கும்; அதாவது சாதாரண நாட்களில் ஏற்படுவதை விட மிகவும் அதிகமாக இருக்கும்! ஏனெனில் கர்ப்பம் காரணமாக பெண்ணின் உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் தான் இந்த அதிக இன்ப மாற்றம் நடக்கிறது!

யாருக்கு அதிக இன்பம்! இந்த நிகழ்வில் பெண்ணானவள் தான் அதிகமான இன்பத்தை உணர்வாள்; பெண்ணின் உடலில் அதிக களைப்பும் ஏற்படும்! அதிக இன்பம் கிடைக்கிறது என்று அடிக்கடி ஈடுபடுதல் கருவிற்கு கவலைக்கிடமான நிலைமையை கொடுத்து விடலாம்! ஆகையால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியது அவசியம்! இதுவே கர்ப்பத்தின் கடைசி கால கட்டமான 7-9 வது மாதங்களில் சுய இன்பம் மற்றும் உடலுறவு கொண்டால் மிகக் குறைந்த இன்பமே கிடைக்கும் – இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

உதிரப்போக்கு ஏற்படுமா? ஆம்! சில நேரங்களில், சில பெண்களுக்கு சுய இன்பம் காண்பதால் உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு! கர்ப்ப காலத்தில், உங்கள் உடலில் இரத்தத்தின் ஓட்டம் அதிகமாக காணப்படும்; பிறப்புறுப்பு பகுதியில் கூட இரத்தம் உறைந்து இருக்கும். நீங்கள் சுய இன்பம் காணும் பொழுது, உள்ளுறுப்புகளில் எதையேனும் கீறி விட்டால் அல்லது அதிக அழுத்தம் கொடுத்து விட்டால் அப்பொழுது ஆட்டோமேட்டிக்காக உதிரப்போக்கு ஏற்படும்!

வயிற்றின் வடிவம் மாறுமா? ஆம்! கண்டிப்பாக நீங்கள் சுய இன்பம் காணும் பொழுது கர்ப்பகாலத்தில் உங்கள் வயிற்றின் வடிவம் மாறுபடும். ஏன் தெரியுமா? சுய இன்பத்தால் உருவாகும் ஆக்சிடோசின் கருப்பையை சுருங்க வைப்பதால், அதன் விளைவாக வயிற்றின் வடிவம் மாறுபடும். இது நிலையானதல்ல; ஆனால், தொடர்ந்து அதிகமாக சுய இன்பம் கண்டால் வடிவம் நிலையாக மாறுபடும் வாய்ப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பெண்ணின் கடமை உடலுறவு கொள்ளவோ, சுய இன்பம் காணவோ எந்த நிலை நல்லது என்று கேட்டால், முடிந்த வரை கர்ப்பகாலத்தில் எதையும் செய்யாமல், எந்த நிலையிலும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது; அதிலும் குறிப்பாக கர்ப்ப காலத்தின் 14 வது வாரத்தில் கண்டிப்பாக எதையும் செய்யக் கூடாது! ஏனெனில் குழந்தையின் முக்கிய உறுப்புகள் வளர்ச்சி பெறும் காலம் இது! கர்ப்பகாலத்தில் உங்கள் வாழ்க்கை கனவான, உங்கள் வாழ்க்கையின் அர்த்தமான குழந்தை வளரும் நேரத்தில் எந்தவித தவறும் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது தம்பதியரின் கடமை! அதிலும் முக்கியமாக தாயாக மாற போகும் பெண்ணின் கடமை! எனவே, சிந்தித்து செயலாற்றுங்கள்!

எந்த நிலை நல்லது? கர்ப்பகாலத்தில் உடலுறவு மற்றும் சுய இன்பமே வேண்டாம் என்று கூறும் பொழுது, எந்த நிலையில் உடலுறவு கொண்டால் நல்லது, எந்த நிலையில் சுய இன்பம் கண்டால் நல்லது என்று கேட்டால் என்ன செய்வது? இருப்பினும் இந்த கேள்விக்கான விடை – தீவிர உள்நுழைத்தல் இல்லாமல் சாதாரண நிலையில் உடலுறவும் சுய இன்பமும் காணலாம்; அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு!