Home பெண்கள் தாய்மை நலம் ஆண்களே உங்கள் மனைவி கர்ப்பமா?இதை நீங்க தெரிஞ்சுக்கணும்

ஆண்களே உங்கள் மனைவி கர்ப்பமா?இதை நீங்க தெரிஞ்சுக்கணும்

68

தாய்நலம்:கர்ப்பகாலம் என்பது மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். ஆனால், கர்ப்பமான பெண்கள் அப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அடிக்கடி மாறும் மனநிலைகளை தினமும் சந்தித்து தான் ஆகா வேண்டும். ஒரு ஆணுக்கு இது கன்னிவெடியின் மேல் கால் வைப்பது போல் இருந்தாலும், உங்கள் மனைவி சந்திக்கும் பிரச்சனைகளை நீங்கள் புரிந்து கொண்டால் அனைத்தும் சுலபமாகிவிடும்.

இங்கே கர்ப்பகாலம் குறித்து ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நினைவில் கொள்ளுங்கள், பிரசவம் என்பது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.

1 வலி தவிர்க்க முடியாதது

கர்ப்பகாலம் மற்றும் பிரசவம் குறித்து நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் மனைவியின் தொடர் புலம்பல்கள் மிகைப்படுத்துவது போல் இருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. அவர் ஒரு உயிரை அவருள் சுமக்கிறார். அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கி, குழந்தை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். அவருக்கு பல நாட்களில் முதுகு வலி, வாந்தி, தலைவலி என பல பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் அவரால் படுக்கையில் இருந்து எழ கூட முடியாமல் இருக்கும். அவர் நேராக நிற்கும் போது, அவரது காலை பார்க்க முடியாததை நினைத்து அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறாகும்.

ஒரு ஆணாக அவர் அனுபவிக்கும் வலிகள் கஷ்டங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், உங்களால் முடிந்த வரையில் இந்த ஒன்பது மாதங்கள் அவரை சந்தோஷமாக வைத்திருங்கள். அவரது காலை பிடித்து விடுங்கள், வீட்டு வேலைகளில் உதவி புரியுங்கள், அவரின் பைகளை சுமக்கலாம், கதவை திறந்து விடலாம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் செய்தாலே போதுமானது.

2 ஹார்மோன் மாற்றங்கள்

கர்ப்பகாலத்தில் மட்டும் தான் நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும், அதற்கு ஹார்மோன்கள் தான் காரணம் என்று அதன் மீது பழி சுமத்தலாம். ஒரு நிமிடம் நன்றாக சிறிது பேசிக்கொண்டிருப்பார், அடுத்த நொடியே அவரின் மனநிலை மாறும். ” நீ இன்று மிகவும் அழகாய் இருக்கிறாய் ” , என்று சொன்னால், பல நேரங்களில் அது உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்தியிருக்கும். ஆனால் இப்போதோ, ” இன்றைக்கா?” , ” இன்றைக்கு மட்டும் தான் நான் நன்றாக உள்ளேனா? “, ” மற்ற நாட்களில் அசிங்கமாக இருக்கிறேனா? ” என்று கோபப்பட்டு, அழ ஆரம்பித்துவிடுவார். இந்த அழுகை எங்கே இருந்து வருமோ தெரியாது. இதற்கு ஹார்மோன்கள் தான் காரணம் என்று நீங்கள் சொல்ல கூடாது. ஆனால் உங்கள் மனைவி சொல்லலாம். இது ஒரு பொன் விதி.

3 உணவு

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும். எனவே, இதற்காக ஆராய்ச்சி செய்வதையெல்லாம் விட்டுவிட்டு இதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதாவது உணவை எப்போதும் அவருக்காக வைத்திருங்கள். அவருக்கு உணவு கொடுத்துக்கொண்டே இருங்கள். அவரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு இது தான் மிகச்சிறப்பான வழி. ஒரு பாப்கார்னை நீங்கள் இருவரும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறு. அதையும் மீறி செய்தால், மேற்கூறிய ஹார்மோன்களால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

4 சிறுநீர் கழிக்கும் பிரச்சனை

நீங்கள் உங்கள் கர்ப்பமான மனைவியை எங்கேயாவது வெளியே அழைத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்தால், அந்த இடத்தில் கழிவறை உள்ளதா என்று ஒருமுறை சோதித்து பார்த்துவிடுங்கள். உங்கள் கருப்பையில் இருந்துகொண்டு உங்களை யாராவது உதைத்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். இதை தான் கர்ப்பமான பெண்கள் சந்திக்கிறார்கள். எனவே, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவர் கழிவறை செல்ல வேண்டும் என்று சொன்னால் எரிச்சலடைய வேண்டாம். இது அவர் வேண்டுமென்றே செய்வதில்லை. செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

5 பயம்

என்னதான் பெண்கள் தைரியமாக தங்களை காட்டிக்கொண்டாலும், உண்மையில் கர்ப்பகாலத்தில் அவர்கள் மிகவும் பயப்படுவார்கள். ” நான் ஒரு நல்ல தாயாக இருப்பேனா? ” , ” குழந்தை நன்றாக உள்ளது என்று நினைக்கிறன் ” , ” பிரசவம் மிகவும் வலி மிகுந்ததாக இருக்குமா? ” என பல கேள்விகள், சந்தேகங்கள், பயம் அவர் மனதில் எழும். அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் மனைவி வாய் திறந்து நீங்கள் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று சொல்லமாட்டார். நீங்கள் தான் அதை புரிந்து கொண்டு, இருவரும் சேர்ந்து இதை எதிர்கொள்வோம் என்று நம்பிக்கையளிக்க வேண்டும்.

6 கவனம்

உங்களின் முழு கவனத்தையும் உங்கள் மனைவியின் மீது செலுத்துங்கள். அவர் உடல் பெரிதாக பெரிதாக, அதை பற்றிய எண்ணங்கள் அவர் மனதில் அதிகமாக எழும். இதற்கு மேலும் அழுத்தம் சேர்க்கும் வகையில், மாதா மாதம் மருத்துவமனையில் எடை பரிசோதிக்கும் நிகழ்வு இருக்கும். எனவே, ஒரு நல்ல கணவனாக அவர் எப்படி இருக்கிறாரோ அதை பாராட்டுங்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலுறவு ஆசையை குறைத்து மதிப்பிட வேண்டாம். இன்னும் சொல்ல போனால், இந்த நேரத்தில் தான் அவர்களின் ஆசை அதிகமாக இருக்கும். இதற்கு நீங்கள் ஹார்மோன்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இதை நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் தானே?