Home ஆரோக்கியம் பொண்ணுங்க பிறப்புறுப்பிலேயே பரு வந்தா என்ன அர்த்தம் தெரியுமா? இனியாவது சீரியஸா எடுத்துக்கங்க

பொண்ணுங்க பிறப்புறுப்பிலேயே பரு வந்தா என்ன அர்த்தம் தெரியுமா? இனியாவது சீரியஸா எடுத்துக்கங்க

1208

இந்த பிறப்புறுப்பு கேன்சர் என்பது பெண்களுக்கு வரும் புற்றுநோய் ஆகும். இது வுல்வல் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பெண்களின் பிறப்புறுப்பை தாக்கி உயிருக்கு உலை வைக்கும் அரிதான புற்றுநோய் இது. வுல்வா என்பது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும் மற்றும் யோனி பகுதிக்கும் இடையே காணப்படும் ஒரு வகை சருமம்.

இதில் யோனியின் உட்புற வெளிப்புற பகுதியும், க்ளிக்டோரிஸ், யோனி திறப்பு போன்றவை அடங்கும். இந்த புற்றுநோய் பெரும்பாலும் வெஜினாவின் வெளிப்புற வாய் பகுதியில் பரவக் கூடியது. 0.6 % வளரக் கூடியதாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்புறுப்பு கேன்சர்

பிறப்புறுப்பு கேன்சர்
அதே மாதிரி இந்த புற்று நோய் ஆரம்பமான இடத்திலேயே நிற்பதில்லை. அப்படியே வளர்ந்து மற்ற பகுதிகளையும் தாக்க கூடியது. இந்த புற்றுநோய் செல்கள் மெதுவாக தன் வேலையை தொடங்கினாலும் வுல்வரின் உள் வாயில் ஆரம்பித்து வுல்வா வை சுற்றியுள்ள சருமம் முழுவதையும் பரவி விடும். பார்ப்பதற்கு கட்டி போன்றோ அல்லது புண்ணாக அரிப்புடன் காணப்படும்.

இதன் அறிகுறிகளை வைத்து இதனை உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அப்படி சிகிச்சை அளிக்க தாமதமாகி விட்டால் அசாதாரண செல்கள் புற்றுநோய் கட்டிகளாக மாறி விடும்.

MOST READ: இணையத்தில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்கள்… பார்த்து விசில் அடிங்க…

வகைகள்

இந்த புற்றுநோய் 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது.

க்யூமாஸ் செல் கால்சினோமா

இது முதலில் சரும செல்களை பாதிக்க கூடியது. இதில் 90% புற்று நோய் செல்கள் உயிரணு செல்களாக இருக்கிறது. இது யோனி பகுதியில் உள்ள வெளிப்புற சருமத்தை பாதிக்கிறது. ஆனால் என்ன பல வருடங்கள் ஆகியும் இதன் அறிகுறிகள் தெரிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இது பாப்பிலோமாவைரஸ் உடன் தொடர்புடையது. இது பெரும்பாலும் இளம் பெண்களை தாக்க கூடியது.

வுல்வர் மெலோனாமா

10% வுல்வர் கேன்சர் வுல்வர் மெலோனாமா வகையைச் சார்ந்ததாக கூறுகின்றனர். இந்த வகை கேன்சரில் அந்த பகுதியில் உள்ள சருமத்தின் நிறம் மாறுதல் அடைகிறது. இது பெரும்பாலும் 50-80 வயதை பெண்களுக்கு ஏற்படுகிறது. இது இளம் பெண்களையும் தாக்க கூடியது. இதை மூன்று வகைகளாக பிரிக்கலாம். மேலோட்டமான பரவல், நொதிலர் மற்றும் அட்ரல் லெண்டிஜினஸ் மெலனோமா. மெலனோமா உடலின் பிற பாகங்களுக்கு பரவுவதால் அதிக ஆபத்து நேர வாய்ப்புள்ளது.

சர்கோமா

எலும்பு, இணைப்பு திசு செல்கள் போன்றவற்றில் வரக் கூடியது. சர்கோமா பெரும்பாலும் வீரியமிக்கவை. இந்த வகை கேன்சர் எந்த வயதிலும் வரக் கூடியது. ஏன் குழந்தை பருவத்தில் கூட வருகின்ற அபாயம் இருக்கிறது.

வெரிகொஸ் கார்சினோமா

இது க்யூமாஸ் செல் கால்சினோமாவின் ஒரு வகை ஆகும். இது பார்ப்பதற்கு மரு போன்று ஆரம்பித்து படிப்படியாக வளரக் கூடியது.

அடெனோகார்சினோமா

இது பெண் பிறப்பிறுப்பில் உள்ள சுரப்பிகளில் வரும் புற்றுநோயாகும். இது அரிதாக தாக்க கூடியது.

அறிகுறிகள்

இந்த புற்றுநோய் ஆரம்பித்த காலத்தில் அரிப்பு, கட்டி அப்புறம் இரத்தம் கசிவு போன்றவை ஏற்படும்.

மரு வளர்ந்து கொண்டே போகுதல்

வெஜினாவில் அதிக இரத்த போக்கு

வலி மற்றும் எரிச்சல்

உடலுறுவின் போது வலி ஏற்படுதல்

வலியுடன் சிறுநீர் கழித்தல்

வுல்வர் பகுதியில் அதிக அரிப்பு

அதிக வலி உணர்திறன்

தோலின் நிறம் மாறுதல் (மெலோனாமா)

அல்சரேசன்

தடினமான சருமம்