Home பாலியல் பிரசவத்தால் பெண்களின் பாலியல் நாட்டம் பாதிக்குமா?

பிரசவத்தால் பெண்களின் பாலியல் நாட்டம் பாதிக்குமா?

45

captureகணவன் – மனைவி உறவின் அர்த்தம் குழந்தையால் தான் உண்டாகிறது என்றாலும்கூட குழந்தை பிறந்தபிறகு, தாம்பத்யத்தில் ஈடுபடும் கணவன் – மனைவிக்கு இடையே போதிய இன்பம் கிடைக்காமல் அதிப்ருதியே அடைகிறார்கள். தாய்மை என்னும் பொறுப்பால் உண்டாகும் புதிய மன அழுத்தமுமே இதற்கு முக்கிய காரணம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
குழந்தை பிறந்த 12 மாதங்களுக்குப் பிறகு கணவன் – மனைவிக்கு இடையேயுள்ள தாம்பத்திய உறவில் ஏற்படும் மனதிருப்தி பற்றி கேட்டறியப்பட்டது. அதில் பெண்கள் மிகக் குறைவாகவே திருப்தியடைவதாகக் கூறப்படுகிறது. கணவன் – மனைவிக்கு இடையே உடலுறவில் உண்டாகும் திருப்தி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகிறது.

கணவன் – மனைவி நிலையில் இருந்து பெற்றோர் என்ற நிலைக்குப் போகும்பொழுது, அதனால் உண்டாகிற மன அழுத்தம் இருவருக்குமிடையேயான நெருக்கத்தையும் உடலுறவில் உண்டாகும் இன்பத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்னும் ஆய்வு மிகத்தேவையாக இருக்கிறது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ஒரு சுவாரஸ்யமான முடிவைத் தந்திருக்கிறது. அதாவது, ஆணுக்கு உண்டாகிற தந்தை என்ற பொறுப்பு மனஅழுத்தம் ஒருபோதும் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் உண்டாகும் திருப்தியை பாதித்ததில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுக்குழுவானது, பாலியல் உறவில் அதிக எதிர்பார்ப்பு கொண்ட 169 ஜோடிகளிடம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், குழந்தை பிறந்த ஆறு மாதத்துக்குப் பின், அவர்களுடைய உடலுறவு அனுபவம் எப்படியிருந்தது என்பதைக் கேட்டறிந்தது.

புதிதாகத் தாய்மை அடைகிற பெண்கள் தாய் என்னும் பொறுப்புணர்வினால் பிற வேலைகளில் ஈடுபட முடியாமல் களைப்படைந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுடைய பாலியல் விருப்பமானதும் குறைந்துவிடுகிறது. ஆனால் பெண்களுக்கு உண்டாகும் இந்த மன அழுத்தத்தால் ஆண் – பெண் இருவருக்குமே உடலுறவில் உண்டாகிற திருப்தியைப் பாதிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

பாலியல் விருப்பம் என்பது ஒருவருக்கு மட்டுமே விளைகிற தனிப்பட்ட விருப்பம் கிடையாது. அது ஆண் -பெண்ணுக்கு இடையே ஒருவரையொருவர் சார்ந்து தோன்றுவது. அதனால் பெண்களுக்கு உண்டாகிற தாய் என்னும் மன அழுத்தம் அவளுடைய பாலியல் விருப்பத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் கணவருடைய பாலியல் விருப்பத்தையும் சேர்த்தே பாதிக்கிறது.

இந்த ஆராய்ச்சியானது, புதிதாக தாய் – தந்தை என்னும் பொறுப்பை ஏற்கிற காலகட்டத்தில் கணவன் – மனைவி இருவருக்குமிடையே எவ்வாறு ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதை கணவன் – மனைவிக்கும் மருத்துவர்களுக்கும் அறிவுறுத்துவதாக அமைகிறது.