Home பெண்கள் அழகு குறிப்பு முக பருக்களால் உங்கள் முகம் அழகு கெடுகிறதா?

முக பருக்களால் உங்கள் முகம் அழகு கெடுகிறதா?

37

பெண்கள் அழகு:முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதனை போக்குவதற்கு இயற்கையில் கிடைக்கும் பொருள்களை கொண்டு தீர்வு காணலாம்.

வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்லை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்கும்.

ஒரு உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்து முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி, காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.

ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.

சிறிது வெந்தயக்கீரை இலைகளை மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்

Previous articleஉங்களுக்கு அடிக்கடி கரு கலைகிறதா காரணம் என்ன?
Next articleபெண்கள் பாலியல் தொடர்பான டாக்டர் சொல்லும் சில செய்திகள்