Home ஜல்சா பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண்- படிச்சு பாருங்க… கண்ணீரே வரும்…

பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண்- படிச்சு பாருங்க… கண்ணீரே வரும்…

111

சில பொய்கள் சிரிக்க வைக்கும். சில சிரிப்புக்கு பின் போலியான வாழ்க்கை இருக்கும். போலியான சிரிப்பை ஏந்தி வாழ்க்கை நடந்தும் நபர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் தான் முன்னின்றுக் கொண்டிருப்பார்கள்.

நாம் அறிந்த வரை அவர்கள் காசுக்காக உடலை விற்பவர்கள். ஆனால், அவர்கள் பின்னணியில் இருக்கும் சூழல்களை நாம் அறிய வாய்ப்புகள் இல்லை.

நான் கடந்து வந்த பாதையில் இன்று….

ஓர் உயர்ந்த பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்க சேர்ந்து, நடுவழியில் பாதை மாறி விபசாரத்தில் விழுந்து ஒரு அபலைப் பெண்ணின் துயரமான வாழ்க்கை.

மோசமான மனநலம்!

“எனது மனநலம் மிகவும் மோசமானது. எப்படியாவது எனது டிகிரியை முடித்து விடவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தேன். ஆனால், அது முடியாது என்றும் எனக்கு தெரியும்.

முடியாத என்ற நிலையில் மேற்படிப்பை பாதியில் விட்டு, நான் இளங்கலை பட்டம் பயின்ற லண்டனுக்கு மீண்டும் திரும்பினேன். அமெரிக்கவை விட லண்டனில் தங்குவதற்கும், ஒரு வேலை தேடுவதும் எளிதானதாக தோன்றியது எனக்கு.”

வேலை தேடவில்லை…

“லண்டனில் இறங்கியதும் நான் வேலை தேடவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக போதைக்கு அடிமையானேன். நிறைய குடித்தேன், போதை… எனது சேமிப்புகள் மெல்ல, மெல்ல கரைந்தன.

ஒருநாள் பணம் இல்லாத காரணத்தால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியே வீசப்பட்டேன். பிறகு அங்கிருந்து எனக்கு போதை பொருள் அளித்து வந்த டீலரின் இடத்திற்கு சென்றேன்.”

பாதை மாறியது!

“அந்த டீலர் ஏதாவது போதை பொருள் வாங்க வந்தாயா? என கேட்டார், இல்லை என்பதே என்னிடம் இருந்த ஒரே பதில். பணம் இல்லை, தங்க இடம் இல்லை என்பதை விளக்கினேன்.

அந்த டீலர் உதவுவதாக கூறி ஆபாச விடுதிக்கு அனுப்பி வைத்தார். அங்கு நான் சந்தித்த ஒரு நபரின் சேர்க்கை தான் என்னை விபச்சாரத்தில் தள்ளியது.”

200 யூரோக்கள்!

“மிகவும் பிரம்மாண்டமான இடம், வசதியான வாழ்க்கை, ஒரு நாள் இரவிற்கு 200 யூரோக்கள். ஏறத்தாழ இந்திய பணத்தின் மதிப்பில் ரூ.14,000. பெரிதாக அச்சம் ஏதுமின்றி எனது விபசார பயணம் இனிதே ஆரம்பித்தது.

அந்நபர் என்னிடம் மிகவும் இனிமையாக தான் அண்டந்துக் கொள்வார். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால் எனக்கு இது பணம் சம்பாதிக்கும் இடமாக மட்டுமே தெரிந்தது.”

ஆக்கிரோஷமாக மாறியது….

“வரிசையில் நிற்க வேண்டும். உடல் அமைப்பை வைத்து தான் தேர்ந்தெடுப்பார்கள். சிலர் அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்தும் கூட. கொஞ்சம் கொடுமையானது தான். ஆனால், இது பழகிவிட்டது.

சில இரவுகளில் போதுமான பணம் சம்பாதித்து ஓய்ந்துவிட்ட பிறகும் கூட வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முடியாது என்பது அகராதியில் இல்லாத சொல். சொல்லக் கூடாத சொல்.”

வெவ்வேறு பருந்துகள்!

“வாடிக்கையாளர்களின் பார்வை வெவ்வேறு மாதிரியானது. யார் எதை தேர்வு செய்வார்கள் என அறிய முடியாது. என்னை தேடி வந்த ஆண்கள் எல்லாம் நன்கு சம்பாதிக்கும் நடுவயது திருமணமான ஆண்கள் தான். ”

அந்த ஒரு நாள்…

“ஒரு நாள், ஒரு வாடிக்கையாளர் கோக் மற்றும் கோகைன் எடுத்து வந்தார். ஓவர்டோசான அந்த கோகைனை எனது பிறப்புறுப்பில் செலுத்தி போதை கொண்டார். நிற்காமல் உடலில் வியர்வை கொட்ட ஆரம்பித்தது. அறையை விட்டு வெளியேற எண்ணினேன். ஆனால், அரை பூட்டப்பட்டிருந்தது.

விபச்சாரம் நடத்தும் அந்த பெண்மணி அந்த நபரிடம் அடுத்த ஒரு மணிநேரத்திற்கும் பணம் பெற்றிருந்தார். நேரம் கொடுமையின் உச்சத்தை எட்ட ஆரம்பித்தது. அச்சம் என்பதை முழுமையாக நான் உணர்ந்த தருணம் அது.”

பால்வினை நோய்கள்!

“இருப்பதிலேயே பெரிய அச்சம் பால்வினை நோய்கள். பல சமயங்களில் ஆணுறை கிழிந்து போகும். கிளமீடியா எனும் பால்வினை நோய் தாக்கத்திற்கு ஆளானேன்.

24 வயதில் பணத்திற்காக ஆண்களுடன் படுக்கையை பகிர துவங்கியது ஒரு உறவின் மீதான பார்வை என்னிடம் முற்றிலுமாக மாறுபட்டு இருந்தது.

ஏனெனில், என்னை தேடி வரும் ஆண்கள் அனைவரும் அவர்களது மனைவிக்கு துரோகம் செய்பவர்கள். இங்கு வருபவர்கள் யார் தான் உத்தமன். நான் மோசமானவள் என்றால், அவர்கள் என்னைவிட மோசமானவர்கள் தானே?

செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்ற பார்வை கொண்டிருந்த ஆண்கள் மட்டுமே எனக்கு பரிச்சயம் ஆனவர்களாக இருந்தனர்.”

வெறுப்பு, அவமானம், தர்மசங்கடம்!

“ஒரு நிலையில் நான் என்ன வேலை செய்கிறேன் கூறும் நிலை ஏற்படும் போது, என்னிடம் பதில் ஏதும் இருக்காது. வெறும் வெறுப்பு, அவமானம், தர்மசங்கடம் மட்டுமே இருக்கும்.

அனைவருக்கும் விடியல் சுறுசுறுப்பாக இருக்கும். நான் மட்டுமே கைகளில் பணத்துடன் சோர்வாக, தளர்ந்து போய் காணப்படுவேன். நிறைய நிறைய பணம் ஆனால் பதட்டம் அதை விட நிறைந்த காணப்பட்டது.”

மெல்ல, மெல்ல…

“மெல்ல, மெல்ல எனது விபச்சார நேரத்தை குறைத்துக் கொண்டேன். கால் செண்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். வேறு இடத்தில் தங்கினேன்.

இன்று பி.எச்.டி முடித்து, எனது தோழர் ஒருவருடைய ட்ராவல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். வாழ்க்கையில் பலமுறை நமது பாதைகள் மாறும். ஆனால், தவறு என உணர்ந்த பிறகும் அதே பாதையில் பயணத்தை தொடர்வது தான் நாம் செய்யும் பெரிய தவறு. இதை திருத்திக் கொண்டாலே நாம் மனிதராகிவிடலாம்.”

Previous articleபெண்களே உங்கள் பொடுகு தொல்லையைப் போக்க மருந்து
Next articleபெண்ணின் ஒரு முழுமையான உச்சகட்ட உணர்வு ஆய்வு தகவல்