Home பெண்கள் பெண்குறி செக்ஸ் இல்லையேல் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடுமா?

செக்ஸ் இல்லையேல் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடுமா?

82

சில சமயங்களில் இருசக்கர வாகனத்தை விட காரில் செல்வது வசதியாக இருக்கும். சில சமயங்களில் பீனட் பட்டரை விட ஜெல்லி சுவையானதாக இருக்கும். அதே போல், செக்ஸ் இல்லாமல் சில சமயங்களில் இருப்பது நன்றாக தோன்றும்.

ஆனால், செக்ஸ் எனும் அற்புதமான விஷயம் இல்லாமல் இருந்தால், பெண்ணுறுப்பு இழுவை தன்மை குறைந்து இறுக்கமாகி விடுமோ என்ற அச்சமும் கூடவே வந்து சேரும்!!

அது உண்மையா? இல்லையா? என்பதை பெண்நல மருத்துவர் ஜெனிபர் வைடர் விளக்கியுள்ளார்.

செக்ஸ் செய்ததற்கு பின்னரும், குழந்தை பிறப்பிற்கு பின்னரும் இழுவை நிலைக்கு செல்லும் பெண்ணுறுப்பு மீண்டும் அதே நிலைக்கு வந்து சேரும் என்று ஜெனிபர் கூறுகிறார்.

அதேபோல், செக்ஸ் இல்லாமல் இருக்கும் போதும் இறுக்கமடையாமல் சாதாரணமாகவே இருக்கும் என்றும் மருத்துவர் விளக்குகிறார்.

மேலும், பெண்ணுறுப்பின் வடிவம் இரண்டு முறை மட்டுமே மாறுகிறது. ஒன்று, குழந்தை பிறந்த பின்னர். இரண்டு, வயதான பின்னர்.

ஆனால், குழந்தை பிறந்த பின்னர் வடிவம் மாறும் பெண்ணுறுப்பு மீண்டும் பழைய நிலைக்கு 6 மாதங்களில் வந்துவிடும் என்று சில நிரூபணங்கள் மூலமும் விளக்குகிறார்கள்.

வயதான பின்னர் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்ணுறுப்பின் வடிவம் மாறுகிறது. ஆனால், அதையும் சில உடற்பயிற்சியினால் சரி செய்ய முடியுமாம்.

செக்ஸில் ஈடுபடும் போது, பெண்ணுறுப்பு இறுக்கமாக இருந்தால், அதற்கு செக்ஸில் ஈடுபடாமல் இருப்பது தான் காரணம் என்று நினைத்து விட வேண்டாம். செக்ஸுக்கு முன்னர் விளையாடப்படும் முன்விளையாட்டுகள் தான். அதிக முன்விளையாட்டுகளில் ஈடுபட்டால் பெண்ணுறுப்பு விரிவடைந்து உடலுறவு கொள்ளுவதற்கு எதுவாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.