Home பெண்கள் பெண்குறி பெண் இனப்பெருக்க மண்டலம்

பெண் இனப்பெருக்க மண்டலம்

148

பெண் இனப்பெருக்க மண்டலம் அக மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகளை உள்ளடக்கியது.

புற இனப்பெருக்க உறுப்பு – பெண்குறி

பெண் இனப்பெருக்க மண்டலத்தின் வெளிப்புறப் பகுதி பெண்குறி என அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கால்களை அகட்டி வைத்த நிலையில், பெண்குறியின் பின்வரும் பகுதிகள் காணப்படும்:

பூப்பெலும்பு மேடு (மான்ஸ் ப்யூபிஸ்): இது பெண்குறியின் மேல் பகுதியில் இருக்கும் மென்மையான தசைப் புடைப்புள்ள மேடாகும் (இது பூப்பெலும்பின் மேல் பகுதியில் மெல்லிய கொழுப்புப் பட்டை போன்று அமைந்துள்ளது). இது உடலுறவின் போது இதற்கு அடியில் இருக்கும் எலும்புக்கு (பூப்பெலும்பு) பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது. இது வயது வந்த பெண்களுக்கு அந்தரங்க முடிகளால் மூடப்பட்டிருக்கும்.
மேலிதழ்கள்: பெண்குறியின் வெளிப்புற இதழ்கள் மேலிதழ்கள் (லாபியா மேஜரா (லாபியா = உதடு, மேஜரா = பெரிய) என்று அழைக்கப்படுகின்றன. இது பூப்பெலும்பு மேட்டிலிருந்து பெரினியம் (பெண்குறிக்கும் ஆசனவாய்க்கும் இடையில் சிறு தோல் பகுதி) வரை நீண்டுள்ளது. இந்த வெளி இதழானது பெண் இனப்பெருக்க உறுப்பின் உள்பாகங்களை முழுவதுமாக அல்லது பகுதியளவு மூடியுள்ளது. இது பொதுவாக அந்தரங்க முடிகளால் மூடப்பட்டிருக்கும், பல எண்ணெய் மற்றும் வியர்வை சுரப்பிகளைக் கொண்டிருக்கும்.
கீழிதழ்கள்: பெண்குறியின் உள் இதழ்கள் கீழிதழ்கள் (லாபியா=இதழ், மைனரா= சிறிய) என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற இதழ்களை விரித்தால் இவை தென்படும். இவை தோல்மடிப்புகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உட்புற பாகங்களை (சிறுநீர்த்திறப்பு மற்றும் பிறப்புறுப்பு) பாதுகாக்கவும் மூடுவதற்கும் பயன்படுகின்றன. கீழிதழ்களில் முடிகள் இருப்பதில்லை, ஆனால் எண்ணெய் சுரப்பிகள் காணப்படுகின்றன. கீழிதழ்கள் இரண்டும் இணையும் மேல் பகுதியில், ஒரு சிறிய பை இருக்கிறது. இது கிளிட்டோரிஸ் பை (ப்ரிப்யூஸ்) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பையின் உள்ளே பெண்குறிக்காம்பு (கிளிட்டோரிஸ்) என்று அழைக்கப்படும் மொட்டு வடிவ உறுப்பு உள்ளது. இதுவே பெண்களின் விறைப்பு உறுப்பு ஆகும்.
பெண்குறிக்காம்பு (கிளிட்டோரிஸ்): இது பெண்குறியின் மேற்பகுதியில் காணப்படும் சிறிய இளஞ்சிவப்பு நிற பொத்தானைப் போன்ற நீட்சியாகும். இது கீழிதழ்கள் இணையும் இடத்தில் உள்ள கிளிட்டோரிஸ் பைக்குள் அமைந்துள்ளது. இது மிகவும் உணர்ச்சி மிகுந்த பகுதியாகும். இது தூண்டப்படும் போது விறைப்புத் தன்மை அடையக்கூடிய விறைப்புத் திசுவினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியைத் தொடுவது பெண்களுக்கு மிகவும் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டிவிடக்கூடும். பாலியல் ரீதியான தூண்டலின் போது, பெண்குறி (கிளிட்டோரிஸ்) விறைப்படைந்து, அதனை மூடியிருக்கும் தோல் பையை விட்டு வெளியே நீண்டு நன்கு தெரியும்.
சிறுநீர்க்குழாய்த் திறப்பு: சிறுநீர்க்குழாய்த் திறப்புக்கு இனப்பெருக்க மண்டலத்துடன் தொடர்பு இல்லை, இது சிறுநீர் மண்டலத்துடன் தொடர்புடையது. சிறுநீர்க்குழாய் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை எடுத்துச் செல்கிறது. இதன் திறப்புப் பகுதியை (சிறு துவாரம்) பெண்குறிக் காம்புக்கு சற்று கீழ் இருக்கும்.
யோனி திறப்பு (பிறப்புறுப்பு): யோனியின் திறப்பானது கீழ்ப்பகுதியில் காணப்படும் இடைவெளி அல்லது துளை ஆகும். இது யோனிக் குழாய்க்குச் செல்லும். உடலுறவின் போது, ஒரு ஆண் தனது ஆண்குறியைச் செருகும் துளை இதுவே.