Home சூடான செய்திகள் பெண்கள் உங்களிடம் இதையெல்லாம் நோட்டமிடுகிறார்களாம்! ஆண்களே உஷார்!

பெண்கள் உங்களிடம் இதையெல்லாம் நோட்டமிடுகிறார்களாம்! ஆண்களே உஷார்!

39

முதல் சந்திப்பு என்பது மிகவும் சுவாரசியமானது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தால் உலகில் ஒரு மூலையில் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உலகின் மற்றொரு மூலையில் உள்ள ஆணை அல்லது பெண்ணை டேட்டிங் செய்கிறார்கள். திருமணம் செய்யப்போகும் பெண்ணை பெரியவர்களுடன் வீட்டிற்கு சென்று பார்த்து தீர விசாரித்து சம்மதம் செய்யும் காலம் மாறிப் போய் தற்போது வெறும் கணினியிலேயே பெண் பார்க்கும் விடயம் முடிந்து விடுகின்றது.

அது சரி, இந்த பெண்கள் ஆண்களிடம் அப்படி என்ன தான் அவதானிக்கிறார்கள் என்பது ஆண்களின் கேள்வியாக உள்ளது. பலருக்கு இது தொடர்பில் இன்னும் போதிய விளக்கம் இல்லை. ஆம், முதல் முறை ஒரு ஆணை சந்திக்கும் போது ஒரு பெண் ஆணிடம் உள்ள அனைத்து விடயங்களையும் கணினியைப் போல் தனது மனதில் பதிவு செய்துகொள்வாள். நடை, உடை, பாவனை, பேச்சு, சிரிப்பு என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை.
பெண்கள் எவற்றை எல்லாம் நோட்டமிடுகிறார்கள் என கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே!

01. கண்கள்
கண்களை வைத்தே ஆண்களை எடை போட்டு விடுகின்றனர் இந்த பெண்கள். ஆம் பல பெண்கள் ஒரு ஆணை முதலில் சந்திக்கும் போது முதலாவதாக கண்களிலேயே தங்களது கவனத்தை செலுத்துவர். ஆண்களின் கண்களின் நிறம் மற்றும் வடிவம் என்பன பெண்களை வெகுவாகக் கவர்கின்றன. ஒரு சில பெண்கள் ஆண்களை சந்திக்கும் போது அவர்களின் கண்களை உற்று நோக்கி என்ன சிந்திக்கின்றார்கள் என்பதை கூட அறிய முயற்சிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

02. உடற் சைகைகள்
ஒரு ஆண் எவ்வாறு கையை அசைக்கிறார், எவ்வாறு அமர்கிறார், நிற்கும் போது கைகள் எவ்வாறு உள்ளன, மற்றும் அவர் தொடும் விதம் என்பவற்றை பெண்கள் டேட்டிங்கின் போது அவதானிக்கிறார்கள். இந்த ஒவ்வொரு விடயத்திலும் அவர்கள் மார்க் போட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். அதனால் பதட்டம் இன்றி சரளமாக பழகும் ஆண்களுக்கு பெண்கள் அடிமை.

03. புன்னகை
ஒரு ஆணை சந்தித்தவுடன் நீங்கள் முதலில் எதை அவதானிப்பீர்கள் எனும் கேள்விக்கு பல பெண்கள் அளிக்கும் விடை தான் புன்னகை. ஆம், அழகான புன்னனை பெண்களை கவரும் விடயங்களில் ஒன்று. அதனால் கவர்ச்சிகரமான புன்னகை கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். அதிலும் எதிர்பாராத விதமாக பெண்களை அடிக்கடி சிரிக்க வைக்கும் ஆண்களை அவர்களுக்கு மிக மிக பிடிக்குமாம்.

04. ஆடை அணியும் விதம்
இப்போது பெண்கள் ஆண்களின் ஆடை தொடர்பிலும் அக்கறை கொள்கிறார்கள். ஆம். இடத்திற்கு தகுந்தவாறு ஆடை அணிகிறார்களா என்பது இக்காலத்து பெண்களின் எதிர்பார்ப்பு. கடற்கரையில் நடக்கும் டேட்டிங் ஒன்றிற்கு ஆண் ஒருவர் ஒபிஸ் சூட் அணிந்து வந்தால், அவ்வளவு தான். அதற்கு பிறகு அந்த ஆணை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். ஆண்களே கவனம்!

05. வாசம்
ஆண்களிடம் என்ன வாசம் வீசுகிறது என்பதை கூட பெண்கள் விட்டு வைப்பதில்லை. நல்ல வாசம் வீசுகிறதா இல்லையா என்பதை கூட பெண்கள் அவதானிப்பார்கள். அதனால் நல்ல வாசைன திரவியங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். டேட்டிங் போவதற்கு முன் உபயோகப்படுத்துங்கள்.

06. ஹெயார் கட்
சூப்பர் ஹிட் திரைப்படங்களில் உள்ள ஹீரோக்களைப் போல் ஆண்கள் தலை முடியை வெட்டிக் கொள்ளும் போது அதை பெண்கள் ரசிப்பார்கள். ஆனால் தனக்கு வரப்பொகும் வாழ்க்கைத் துயையை தேர்ந்தெடுக்கும் போது அதனை ஏற்க மாட்டார்கள. முகத்திற்கு ஏற்ற விதத்தில் நல்லெண்ணம் ஏற்படக்கூடிய விதத்தில் தலை முடியை வெட்டுபவர்களுக்கு அதிக மார்க் கொடுப்பார்கள்.

07. சுத்தம்
சுத்ம் சுகம் தரும் என்பதற்கு இணங்க, ஆண்களின் சுத்தம் தொடர்பிலும் பெண்கள் அக்கறை கொள்கிறார்கள். ஒரு ஆண், நகங்களை அழகாக வைத்துள்ளாரா? அவற்றில் அழுக்கு உண்டா, தாடி மற்றும் மீசை என்பன ஒழுங்காக உள்ளதா? பற்கள் எவ்வாறு உள்ளது போன்று பெண்கள் அவதானிப்பார்கள். அதனால் இவை அனைத்து தொடர்பில் ஆண்களும் அக்கறை கொண்டால் நன்று.

08. பணத்தை செலவழிக்கும் விதம்
டேட்டிங்கின் போது ஒரு ஆண் எவ்வாறு பண் செலவழிக்கின்றான் என்பதும் அவர்களின் பட்டியலில் உண்டு. நீங்கள் செலவழிக்கும் விதத்தை பார்த்தே உங்களை எடை போடுகிறார்கள் தற்காலப் பெண்கள்.

09. நடத்தை
ஆண்களின் நடத்தை என்பதும் பெண்கள் முக்கிய கவனம் செலுத்தும் விடயங்களில் ஒன்றாகும். தெரிவித்த நேரத்திற்கு வருகிறார்களா? அல்லது நேரம் பிந்துகிறதா என்பதை பெண்கள் அவதானிக்கிறார்கள். நல்ல நடத்தை உள்ள ஆண் ஒருவன் எப்போதும் பெண்களுக்கு முதலிடம் அளிப்பான். அத்துடன் அவர்களின் வசீகரமான நடத்தை பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளவும்.