Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களைக் கவரும் ஆணாக இருக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்..

பெண்களைக் கவரும் ஆணாக இருக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்..

27

captureமாதந்தோறும் பார்லருக்கு ஒரு சொற்ப தொகையைச் செலவு செய்து தான், சருமத்தை மெரூகூட்ட வேண்டும் என்ற அவசியமெல்லாம் ஏதுமில்லை. வீட்டில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டே, ஸ்கிரப், ஃபேஷ் பேக் தயாரித்து உபயோகப்படுத்தலாம். என்ன மாதிரியான ஸ்கிரப்களை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

வாழைப்பழ ஸ்கிரப்

நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது சர்க்கரையும் சிறிது தேனும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.

முகத்தை தண்ணீரில் கழுவிவிட்டு, ஈரமான சருமத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் வரை வைத்திருந்தாலே போதும். பேஸ்ட் காய்ந்தவுடன் முகத்தில் சுறுசுறுவென பிடிக்க ஆரம்பிக்கும். அப்போது, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடலாம்.

லெமன் ஸ்கிரப்

லெமன் எப்போதுமே சருமத்துக்கு சிறந்தது. கோடைகாலம், மழைக்காலம் என எல்லா நேரங்களிலும் லெமனை முகத்துக்குப் பயன்படுத்தலாம். சைனஸ் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மழைக்காலங்களில் மட்டும் லெமனை முகத்தில் போட்டு, நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. மற்றபடி, எலுமிச்சை மிகச்சிறந்த ப்ளீச்.

எலுமிச்சை பழத்தை வட்டமாக வெட்டிக் கொண்டு, அதை சர்க்கரையில் தோய்த்து எடுத்து, முகத்தில் தேய்க்க, முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள் காணாமல் போகும். முகம் பளிச்சென இருக்கும்.

தயிர் மற்றும் பப்பாளி ஸ்கிரப்

அரை கப் பப்பாளி பழத்தை எடுத்து நன்கு கூழ் போல மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அதில் நான்கு துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி, 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விடவும்.

தேன் மற்றும் ஆரஞ்சு ஸ்கிரப்

ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் ஆரஞ்சு தோல் பவுடர் கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகப்படுத்தலாம். ஆரஞ்சு தோல் பவுடருடன் ஓட்ஸ் பவுடரைக் கலந்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் பவுடருடன் தக்காளி ஜூஸையும் சேர்த்து, முகத்துக்குப் பயன்படுத்தலாம்.