Home ஆண்கள் ஆண்களில் ஆண்குறியை அதிகம் தாக்கும் புற்றுநோய் ஆண்களே அவதானம்

ஆண்களில் ஆண்குறியை அதிகம் தாக்கும் புற்றுநோய் ஆண்களே அவதானம்

409

ஆண்குறி புற்றுநோய் என்பது ஆண்களின் ஆண்குறியின் சரும செல்களில் ஏற்படும் புற்றுநோயாகும். இது அரிதாக ஏற்படும் புற்று நோய் என்றாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் சிகச்சை அளிக்க இயலும்.

அமெரிக்க மருத்துவர்கள் கூறும் கருத்துப்படி பார்த்தால் ஒவ்வொரு வருடமும் 2100 ஆண்கள் இந்த நோயால் பாதிப்படைகின்றனர். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

விளைவுகள் இந்த நோயால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்களுக்கே சரியாக புரிவதில்லை என்கின்றனர். உடலிலுள்ள கெட்ட நீர்மங்கள் வெளியேற்றப் படாமல் இருந்தால் அவை புற்றுநோய் செல்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. சில ஆராய்ச்சிகளின் கருத்துப்படி எச்பிவி (மனித பாப்பிலோமாவைரஸ்) போன்றவை ஆண்குறி புற்றுநோயை உருவாக்குகிறது. அதே மாதிரி 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பும் இந்த வகை புற்றுநோய் வர காரணமாக அமைகிறது.

அறிகுறிகள் ஆண்குறியின் தோலில் ஏற்படும் சில மாற்றங்கள் இந்த புற்று நோயின் ஆரம்ப அறிகுறியாகும். ஆண்குறி சருமத்தில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுதல் அசாதாரண அறிகுறிகள் போன்றவை தென்படும். ஆண்குறி மீது தோலின் தடிமன் மாறுதல் அல்லது நிறம் மாறுதல் ஆண்குறியில் கட்டி சொறி அல்லது புடைப்புகள் தென்படுதல், ஆறாத புடைப்புகள் பழுப்பு தோற்றமுள்ள ஆண்குறி வளர்ச்சி துர்நாற்றம் உடைய விந்தணு திரவம் ஆண்குறியில் புண் மற்றும் இரத்தக்கசிவு ஆண்குறியின் முனையில் வீக்கம் ஏற்படுதல் க்ரைன் பகுதிக்கு அடியில் கட்டி ஏற்படுதல் இந்த மாதிரியான அறிகுறிகள் ஆண்குறி புற்றுநோயால் மட்டும் ஏற்படுவதில்லை. ஆண்குறி தொற்றால் கூடும் ஏற்படும். எனவே அசாரண அறிகுறிகள் தென்படும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

கண்டறிதல் ஆண்குறியில் அறிகுறிகள் தென்படும்போது மருத்துவரை அணுகி சரியான பரிசோதனை மேற்கொள்வது நல்லது. ஆண்குறி யில் உள்ள கட்டியிலிருந்து சில திசுக்களை எடுத்து ஆய்வு பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பை கண்டறிவர்.

படம் எடுத்தல் X-ray, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், காந்த அதிர்வு இமேஜிங் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை படம் எடுத்து புற்றுநோயின் வீரியத்தை கண்டறிதல்.

சிகிச்சைகள் உங்கள் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருந்தால் கீழ்க்கண்ட சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் ஸ்க்ரீம் போன்றவற்றை ஆண்குறியில் பயன்படுத்துதல் புற்றுநோய் செல்களை குளிராக்கி உறைய வைத்து அழித்தல்

அறுவை சிகிச்சை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சரும திசுக்களை நீக்கி அறுவை சிகிச்சை செய்தல். இதை செய்த பிறகு ஆரோக்கியமான சரும திசுக்கள் அங்கே வளர ஆரம்பித்து விடும். லேசர் சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்களை வெட்டி எடுத்தல் ஆண்குறியை சுற்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல்

புற்றுநோய் தீவிரமடைந்தால் புற்றுநோய் செல்கள் பரவ ஆரம்பித்து விட்டால் கீழ்க்கண்ட சிகச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. புற்று நோய் பரவ ஆரம்பித்து விட்டால் நிணநீர் முடிச்சு வரை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும். கீமோதெரபி /கதிரியக்க தெரபி மூலம் உடலில் பரவியுள்ள புற்றுநோய் செல்களை நீக்கலாம்.

பெனக்டோமி ஆணுறுப்பில் சில பகுதிகளை நீக்கம் செய்தல், ஆரம்ப நிலையிலேயே இந்த புற்றுநோயை கண்டறிந்து விட்டால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கை பாதிப்படையாது.

மருத்துவ பரிசோதனைகள் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த மருந்துகளை கண்டறிந்து வருகின்றனர். இது குறித்து நிறைய சம்பந்தப்பட்ட விஷயங்களை தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் http://www.cancer.gov/about-cancer/treatment/clinical-trials என்ற வலைத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஆதரவு இந்த புற்றுநோய் குறித்து ஏகப்பட்ட விழிப்புணர்வு மக்களிடையே ஆன்லைன் கருத்துக்கள் வழியாகவும் கொடுக்கப்படுகிறது. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட மக்களின் கஷ்டங்களையும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.