Home பெண்கள் உடல் கட்டுப்பாடு PCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா? (Does PCOS Cause Weight Gain?)

PCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா? (Does PCOS Cause Weight Gain?)

30

பெரும்பாலான பெண்களுக்கு எடை குறைப்பது கடினமாக உள்ளது. ஆனால் PCOS உள்ளவர்களுக்கு, உண்மையிலேயே இது மிகவும் போராட்டமாக இருக்கும்.   PCOS என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு ஹார்மோன் பிரச்சனையாகும். இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் என்பதன் சுருக்கமாகும். பல பெண்கள் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள், இதனால் இதய நோய்கள், நீரிழிவுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் அபாயம் இவர்களுக்கு அதிகம்.

உடல் எடைக்கும் PCOS பிரச்சனைக்கும் இடையேயான தொடர்பு சிக்கலானது, ஆனால் கூர்ந்து பகுத்தாய்ந்தால் புரிந்துகொள்ளக்கூடியது தான். இன்சுலின் அதிகமாக இருப்பது ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாக வழிவகுக்கலாம். . இதனால் இடுப்புப் பகுதியில்  எடை அதிகரிக்கிறது, இந்த ஹார்மோன்களால் பொதுவாக ஆண்களுக்கு இடுப்புப் பகுதியில் தான் எடை அதிகரிக்கும். கொழுப்பிலேயே, அடிவயிற்றுக் கொழுப்பு மிகவும் ஆபத்தான வகைக் கொழுப்பாகக் கருதப்படுகிறது, இது பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயத்தை ஒருவருக்கு உண்டாக்குகிறது.

உங்களுக்குத் தெரியுமா? (Did you know?)

உடல் எடையைக் குறைக்க வகை வகை 2 நீரிழிவு, உயர் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல், மற்றும் கருவுறாமை போன்ற உடல் . மிகவும் உடனடியாக ஏற்படக்கூடிய அபாயம் இதய நோய்கள் என்று கூறப்படுகிறது.

எப்படி எடையைக் குறைப்பது? (How do I lose weight?)

முதலில், உங்களுக்குள்ள இந்தப் பிரச்சனை பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள், அது உங்களை எப்படிப் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான விதத்தில் உடல் எடையைக் குறைப்பது மொத்த உடல்நலத்திற்கும் நல்லது, உங்கள் தோற்றத்தையும் நம்பிக்கையையும் கூட அது மேம்படுத்தும். எடையைக் குறைப்பது இன்சுலினுக்கு எதிர்வினைபுரியும் தன்மையை மேம்படுத்துகிறது.

PCOS இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடிய சில வழிமுறைகள்:

மருந்து: உடல் எடையைக் குறைப்பதற்கு என்று மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் எடையைக் குறைக்க உதவக்கூடும். ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு மருந்துகள், நீரிழிவுநோய் வராமல் தடுக்க உதவுகின்ற மெட்ஃபார்மின் ஆகியவை பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளாகும்.
புரதம் உள்ளெடுத்துக்கொள்ளும் அளவை அதிகரியுங்கள்: உணவில் மாவுச்சத்தைவிட புரதங்கள் அதிகம் சேர்த்துக்கொண்டால், விரைவில் எடை குறைய உதவும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளும் மிகவும் உதவக்கூடும்.
உங்கள் கலோரிகளைக் கண்காணியுங்கள்: PCOS உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க, நாளொன்றுக்கு 1200-1500 கிலோகலோரி என்ற வரையறை கொண்ட உணவுத்திட்டம் உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி உடலின் ஒட்டுமொத்த நன்மைக்கும் உதவும், அத்துடன் திட்டவட்டமான கலோரி உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்றினால் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.
PCOS உள்ளவர்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைப்பதே சிறந்த வழி, ஆனால் பிரச்சனை தீவிரமாக இருந்தால் அதற்கேற்ப தீவிரமான நிவாரணம் தேவைப்படும், அந்நிலையில் மருந்துகளே சிறப்பாக உதவக்கூடும். PCOS இருக்கும்போது எடையைக் குறைப்பது கடினம்தான், ஆனால் அசாத்தியமல்ல! முயற்சி செய்யுங்கள்!