Home ஆண்கள் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா? அப்ப இத படிங்க

படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா? அப்ப இத படிங்க

285

திருமணமான ஆரம்ப காலத்தில் தம்பதிகளின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல காதல் வாழ்க்கையில் தம்பதிகளுக்கு நாட்டம் இல்லாமல், அதன் விளைவாக இருவருக்குள்ளும் இருந்த பிணைப்புக்களில் விரிசல் ஏற்பட ஆரம்பிக்கும். சில சமயங்களில் தம்பதிகளுள் ஒருவருக்கு உறவில் ஈடுபட ஆசை இருந்து, மற்றொருவருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தால், அது அந்த தம்பதிகளுக்கு பிரிவை ஏற்படுத்தும்.

ஒருவருக்கு உறவில் ஈடுபட ஆசை இருந்தும், ஈடுபட முடியாமல் போவதற்கு காரணம் குறிப்பிட்ட சத்துக்களின் குறைபாடுகள் தான். உடலில் பாலுணர்ச்சியைத் தூண்டும் குறிப்பிட்ட சத்துக்கள் குறைவாக இருக்கும் போது, உறவில் ஈடுபடுவதற்கான நாட்டம் குறையும். ஆகவே தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கவும், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்படவும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

உங்களுக்கு பாலுணர்ச்சியைத் தூண்ட உதவும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே பாலுணர்ச்சியைத் தூண்டிவிட்டு படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட எந்த சத்துக்கள் அவசியம் எனவும், எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் எனவும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ என்னும் சத்தானது, ஆண் மற்றும் பெண் செக்ஸ் ஹார்மோனின் உற்பத்திக்கு அத்தியாவசியமானது. பெண்களின் இனப்பெருக்க சுழற்சி சாதாரணமாக நடைபெற வேண்டுமானால், போதுமான அளவு வைட்டமின் ஏ தேவையாகும். அதேப் போல் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு வைட்டமின் ஏ அவசியமான சத்தாகும்.

இத்தகைய வைட்டமின் ஏ உலர்ந்த ஆப்ரிகாட், முட்டைக்கோஸ், கேரட், சிவப்பு மிளகாய், கொலார்டு கீரை, கிரேப்ஃபுரூட், லெட்யூஸ் கீரை, ரொமைனி லெட்யூஸ், மாம்பழம், மிளகு, பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி மற்றும் தர்பூசணி போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் பி3

வைட்டமின் பி3
உடலின் ஆற்றலுக்கு வைட்டமின் பி3 அவசியமான சத்தாகும். உடலில் போதுமான ஆற்றல் இருந்தால் தான், உறவில் நீண்ட நேரம் சிறப்பாக ஈடுபட முடியும். மேலும் வைட்டமின் பி3 நொதிகளின் செயல்பாடு, சருமம் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். முக்கியமாக வைட்டமின் பி3 இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உறவின் போது உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும்.

இத்தகைய வைட்டமின் பி3 கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை பிரட், சூரை, ஈரல், மிளகாய், வேர்க்கடலை, தோல் நீக்கப்பட்ட கோழிக்கறி, தோல் நீக்கப்பட்ட வான்கோழி, வெயிலில் உலர்த்திய தக்காளி போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் பி6

வைட்டமின் பி6 பாலுணர்ச்சியை மேம்படுத்தும். ஏனெனில் இது புரோலாக்டினில் உள்ள ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்த உதவும். அதோடு இச்சத்து ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டிற்கு உதவுவதோடு, இரத்த சிவப்பணுக்கள், செரடோனின் மற்றும் டோபமைன் உற்பத்திக்கும் உதவும். ஆண்களுள் யாருக்கு வைட்டமின் பி6 குறைவாக உள்ளதோ, அவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். எனவே விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால், வைட்டமின் பி6 உணவை அதிகம் சாப்பிடுங்கள்.

இத்தகைய வைட்டமின் பி6 வாழைப்பழம், அவகேடோ, வறுத்த மாட்டிறைச்சி, முலாம்பழம், காட்டேஜ் சீஸ் மற்றும் தக்காளி போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், நரம்பு செல்களின் சீரான செயல்பாட்டிற்கும், ஆற்றலை மேம்படுத்தவும் அவசியமானதாகும். வைட்டமின் பி12 ஆணின் ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்து, உறவின் போது நீண்ட நேரம் விறைத்திருக்கச் செய்து, பாலுணர்ச்சியை மேத்படுத்தும். மேலும் இந்த வைட்டமின் உச்சக்கட்ட இன்பத்தை அடையத் தேவையான ஹிஸ்டமைன் உற்பத்தியைத் தூண்டும்.

இத்தகைய வைட்டமின் பி12 கடல் சிப்பி, ஈரல், ஆக்டோபஸ், கானாங்கெளுத்தி, சால்மன், சூரை, நண்டு, மாட்டிறைச்சி, முட்டை போன்றவற்றில் ஏராளமான அளவில் உள்ளது.

வைட்டமின் சி

வைட்டமின் சி பாலியல், கருவளம் போன்றவற்றின் ஹார்மோன்களின் தொகுப்பிற்கு முக்கியமானதாகும். இந்த ஹார்மோன்களாவன ஆன்ட்ரோஜென், ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் ஆகும். வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, மூட்டு இணைப்புக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மன அழுத்தத்தினால் ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பளிக்கவும் அவசியமானதாகும்.

இத்தகைய வைட்டமின் சி ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப்ஃபுரூட், சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, கிவிப்பழம், முலாம்பழம் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ செக்ஸ் வைட்டமின்களாக கருதப்படுகிறது மற்றும் இது பாலியல் வாழ்க்கைக்கு சுவையூட்டும். வைட்டமின் ஈ உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அனைத்து உறுப்புக்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்யும். அதோடு வைட்டமின் ஈ செக்ஸ் ஹார்மோனின் உற்பத்திக்கு உதவி, பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கும்.

இத்தகைய வைட்டமின் ஈ வால்நட்ஸ், முட்டை மஞ்சள் கரு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பசலைக்கீரை, அஸ்பாரகஸ், கொண்டைக்கடலை, ப்ராக்கோலி, தக்காளி, ஆம்லெட், முழு தானிய பிரைட் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.

ஃபோலிக் அமிலம்

இனப்பெருக்கம் என்று வரும் போது ஃபோலிக் அமிலம் என்னும் வைட்டமின் மிகவும் முக்கியமானது. அதுவும் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் இந்த வைட்டமின் அவசியமாகும். ஏனெனில் இச்சத்து ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

அவகேடோ, சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை, பாதாம், பசலைக்கீரை, கொலார்டு கீரை, முள்ளங்கி, அஸ்பாரகஸ், ப்ராக்கோலி, வெண்டைக்காய், காலிஃப்ளவர், பீட்ரூட், சோளம், செலரி மற்றும் கேரட் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.

மக்னீசியம்

மக்னீசியம் என்னும் கனிமச்சத்தானது செக்ஸ் ஹார்மோன்களான ஆன்ட்ரோஜென் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்திக்கு உதவும். இந்த சத்து ஒருவரது உடலில் போதுமான அளவு கிடைத்தால், அது பாலுணர்ச்சியை மேம்படுத்தி, படுக்கையில் சிறப்பாக செயல்பட செய்யும்.

இந்த மக்னீசியம் அரிசி, கோதுமை, மல்லி விதைகள், சேஜ், பூசணி விதைகள், தர்பூசணி விதைகள், டார்க் சாக்லேட், ஆளி விதைகள், எள்ளு விதைகள், சூரியகாந்தி விதைகள், பிரேசில் நட்ஸ், பாதாம், முந்திரி போன்றவற்றில் அதிகமாக உள்ளது.

செலினியம்

செலினியம் விந்தணுக்களின் உற்பத்திக்கு அத்தியாவசியமானதாகும். பொதுவாக ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றும் போது வெளிவரும் விந்தணுவின் வழியே செலினியம் சத்தை இழப்பார்கள். உடலில் செக்ஸ் ஹார்மோனான ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும் வைட்டமின் ஈ-யின் பணியில் செலினியம் முக்கிய பங்கை வகிக்கிறது.

இந்த செலினியம் பிரேசில் நட்ஸ், சூரியகாந்தி விதைகள், சூரை மீன், சால்மன், கடல் சிப்பி, இறால்கள், மாட்டிறைச்சி, ஈரல், ஆட்டுக்கறி, பன்றி இறைச்சி, வான்கோழி, சிக்கன், முட்டை, காளான், அருகம்புல், பார்லி, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் மற்றும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது.

ஜிங்க்

ஜிங்க் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மற்றும் விந்தணுவின் உற்பத்திக்கு அவசியமாகும். ஆண் மற்றும் பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆரோக்கியமான அளவில் இருந்தால் தான் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜிங்க் ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆண்களின் உடலில் புரோஸ்டேட் சுரப்பிக்கு தான் ஜிங்க் அதிகமான அளவில் தேவைப்படும். ஒருவரது புரோஸ்டேட் சுரப்பி ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் இருக்காது. எனவே ஜிங்க் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜிங்க் சத்து கடல் சிப்பி, பூசணி விதைகள், டார்க் சாக்லேட், பூண்டு, அருகம்புல், இறால், நண்டு, மாட்டிறைச்சி, வான்கோழி, பசலைக்கீரை, ஆட்டிறைச்சி, காராமணி, வேர்க்கடலை, ஆளி விதைகள், பன்றி இறைச்சி, கைக்குத்தல் அரிசி போன்றவற்றில் அதிகமாக உள்ளது.