Home பாலியல் நோ‌ய்களு‌ம் பாலியல் பிரச்சனைகளு‌ம்

நோ‌ய்களு‌ம் பாலியல் பிரச்சனைகளு‌ம்

48

dollar-colony-movie-lip-lock-sceneபாலியல் பற்றி மனிதனின் மனதில் பல்வேறு கருத்துக்களும், குழப்பங்களும் உள்ளன. அதிலும் உடல் நலம் குன்றியவர்களுக்கு இந்த‌க் கவலைகள் அதிகம். கீழே சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன…

நீரிழிவு நோயாளி…

நீரிழிவு நோயாளிகளிடையே பாலியல் குறைபாடு பரவலாகக் காணப்படுகிறது. குருதி நாளம் சார்ந்த, நரம்பியல் சார்ந்த, மனவியல் சார்ந்த கோளாறுகள் இவர்களுக்கு ஏற்படக்கூடும். நீரிழிவு நோயாளிகளுக்கு உறவு கொள்ளும் வேட்கை அதிகரிக்கும். ஆனால் விரைப்புத்தன்மை ஏற்படாது. விரைவில் விந்து வெளியாகிவிடும்.

நீரிழிவு உள்ள பெண் நோயாளிகளுக்கு உராய்வுத் திரவத்தின் சுரப்பளவு குறைவாக இருக்கும். உச்சக்கட்டப் பரவசம் அடைவதும் கடினம். உறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு உறவின் இன்பத்தைக் குலைக்கும்.

ஆனால் “நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும்” என்று நிலவும் கருத்து அறிவியல் பூர்வமானதல்ல. சிலர் இக்கருத்தினால் மனப்பாதிப்புக்கு உள்ளாகி பாலியல் ஆர்வம் அற்றவராகின்றனர்.

இதய நோயாளி…

இது நோயாளியைப் பொறுத்து மாறுபடக்கூடும். கூசநயன ஆடைட என்ற இதயநோய் அறிகருவி மூலம் அறிந்து மணிக்கு 3 மைல் என்ற அளவில் நடக்க இயலும் நோயாளிகள், மருத்துவர் ஆலோசனை பெற்ற பின் பாலுறவில் ஈடுபடலாம். ரத்த அழுத்தமும், ஈ. சி. ஜி. அளவீடுகளும் கண்காணிக்கப்பட வேண்டும்.

பாலுறவில் ஈடுபட்டாலும், ஈடுபடாவிட்டாலும் அதற்கு எல்லை என எதுவும் இல்லை. புள்ளி இயல் விவரங்களின் படி 200-இல் ஒரு நோயாளிக்கு பாலுறவின் போது இதய அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பாலுறவின் போதுதான் என்றில்லை – சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது கூட இதய அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதய நோய் ஒருவருக்கொருவர் வேறுபடுவதால் மருத்துவ நிபுணரே இது பற்றிய சரியான ஆலோசனையை வழங்க முடியும். பின்வரும் தடுப்பு முறைகள் இதய நோயாளிகளுக்கு உதவக் கூடும்.

முறை கேடான பாலுறவில் ஈடுபட வேண்டாம். இது வழக்கத்தை விட உங்கள் இதயத் துடிப்பை எகிறச் செய்யும்.

அளவிற்கதிகமான உணவு, மது ஆகியவற்றை பாலுறவிற்கு முன் அருந்த வேண்டாம். இதன் செரிமானத்திற்காக அதிக ஆற்றலும், ரத்த ஓட்டமும் தேவைப்படும்.

இதய நோயாளிகள் காலை வேளையில் உறவு கொள்வது நல்லது. அவ்வேளையில் நோயாளி சோர்வில்லாமல் காணப்படுவார்.

மருத்துவர் ஆலோசனை பெற்று தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

ஆஸ்துமா நோயாளி…

பாலுறவு என்பது தொல்லை தரக்கூடியது அல்ல. ஆஸ்துமா நோயாளிகளுக்கு பாலுறவின்போது மூச்சுவிடச் சிரமமாக இருப்பது இயற்கையான ஒன்று தான். அதிக வேட்கையுடன் ஈடுபடும்போது இது இன்னும் அதிகரிக்கும். பாலுறவிற்கு முன் Bronchodilator பயன்படுத்துவது உதவியாய் இருக்கும்.

சிறுநீரகக் கோளாறு நோயாளி…

பாலியல் வேட்கை குறைவாக இருக்கும். விரைப்புத் தன்மை ஏற்படுவது அனீமியா, யுரேமீயா அல்லது விந்துப்பைகளின் இயக்கமின்மை காரணமாக கடினமாக இருக்கும். டெஸ்டோஸ்டிரான் சுரப்பு குறைய இது காரணமாகும். மனத்தளர்ச்சி ஏற்படுவதால் ஆர்வம் குறையும்.

வயதானால் முடியாதா?

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்நோய் ஏற்படக் கூடும். தசை நார் வீக்கம் போல ஏற்பட்டு, ஆணுறுப்பு விரைப்பின்போது வளைந்த தோற்றம் பெறும். இதனால் பாலுறவின் போது வலி ஏற்படக் கூடும். தானாகவே இது சரியாகிவிடுமென்பதால் சிகிச்சை தேவையில்லை.

விந்துடன் ரத்தம் வந்தால்…

சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பி மற்றும் விந்துப்பைகளில் அழற்சி ஏற்படும்போது விந்துடன் ரத்தம் கலந்து வருகிறது. விபத்துக் காயம், சிறுநீர் வடிகுழாய் அழற்சி ஆகியவற்றினாலும் இது ஏற்படக் கூடும்.

மஞ்சள் காமாலை நோயாளி…

மஞ்சள் காமாலை, இது பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது. பாலியல் நோய்கள் பரவ வழி வகுக்குமோ என்ற எண்ணத்தினாலும் வேட்கை அற்றுப் போகிறது. இது ஹெபாடைடிஸ் நோய்க்கான காரணம் மற்றும் அதன் தன்மையை பொறுத்து மாறுபடும். பரவக்கூடிய ஹெபாடைடிஸ்ஸாக இல்லாமலிருப்பின் பாலுறவில் ஈடுபடலாம். வைரஸினால் ஏற்பட்ட ஹெபாடைடிஸ்ஸாக இருப்பின் இது பாலுறவின் மூலம் பரவக்கூடும்.

மூட்டுவாத நோயாளி…

மூட்டுவாதம் உள்ளோருக்கு ஏற்படும் வலி பாலுறவின்போது தொல்லைதரக்கூடும். கோபம், எண்ணம் அல்லது செயல் குறைவு, பிறரைச் சார்ந்திருத்தல், தன் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஆகிய மனவியல் காரணங்கள் சோர்வடையச் செய்கின்றன. ஸ்டீராய்டின் பக்க விளைவான பருமன் போன்றவற்றினாலும் பிரச்சினை ஏற்படும்.

தன் துணைவரோடு மாற்று முறைகள் மற்றும் வசதியான பாலுறவு நிலை பற்றி ஆலோசிப்பதே சிறந்த தீர்வாக அமையும்.

Previous articleதாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?
Next articleமூளை பொரியல் செய்வது எப்படி