Home உறவு-காதல் ஒவ்வொரு பெண்ணும், தனது வாழ்க்கையில் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

ஒவ்வொரு பெண்ணும், தனது வாழ்க்கையில் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

40

நமது சமூகம் முன்னேறினாலும் கூட, அதில் நமது பழக்க வழக்கத்தில் முன்னேற்றம் ஆகியிருக்கிறதா? என்பது பெரிய கேள்வி. இன்றளவும் ஆண் குழந்தை வளர்ப்பு, பெண் குழந்தை வளர்ப்பு என்பதில் பலர் வேறுபாடு காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படியே ஒரு சிறந்த பெற்றோர் சமமாக ஆண், பெண்ணை வளர்த்தலும், அந்த பெற்றோரையும், அந்த பெண்ணியம் வேறுவிதமாக பேசும் இந்த சமூகம். சில சமயங்களில் பெற்றோர் தவறு செய்கின்றனர். சில சமயங்களில் சமூகம் தவறு செய்கிறது. இந்த இரண்டுக்கும் இடையே பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் இவை….

முடிவு! எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அது பற்றி நன்கு அறிந்து, தெரிந்து, புரிந்துக் கொண்ட பிறகு முடிவு எடுக்கவும். மற்றவர் பேச்சை கேட்டு முடிவு எடுப்பதும், சில செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பெற்றோர்! பெற்றோர்கள் உங்களை வழிநடத்த தானே தவிர, உங்கள் வாழ்வில் முடிவுகளை எடுக்க அல்ல. அது உங்கள் படிப்பில் இருந்து, இல்வாழ்க்கை வரை என அனைத்திலும் பொருந்தும்.

வேலை! எந்த ஒரு விஷயத்திற்காகவும் வேலையை மட்டும் விட்டுவிட வேண்டாம். இந்த மல்டி-டாஸ்கிங் உலகில், அவரவர் வேலை, தொழிலை சிறப்பாக செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இல்லையேல் உங்கள் நிழல் கூட உங்களருகில் இருக்காது.

திருமணம்! நீங்களாக தயாராகாமல், உங்களுக்காக விருப்பம் இல்லமால், விரும்பாமல் திருமண பந்தத்தில் இணைய வேண்டாம். அவர் கூறுகிறார், இந்த சமுதாயம் என்ன சொல்லும், சொந்தபந்தம் கேள்வி கேட்கும் என தயாராகாமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம்.

குழந்தை வளர்ப்பு! குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு வேலை அல்ல. அது ஒரு ஆகசிறந்த கடமை.நீங்கள் வேலைக்கு செல்வது கட்டாயம் என்றாலும் அதே தருணத்தில் குழந்தைகள் மீது அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். காசு கொடுத்து டே கேர் (Day Care) போன்ற இடங்களில் செர்தொமா, நமது வேலையை பார்த்தோமா என்று இருந்தால், கடைசி நாட்களில் உங்களுக்கும் இதே நிலைமை உண்டாகலாம்.

சமூகமும் – பெண்களும்! ஒரு சமூகத்தின் நிலை, மதிப்பு உயர்வதில் பெண்களின் வளர்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது. இதனால், சமூகம் உங்கள் மீது ஒரு பார்வை வைத்துள்ளதை உணர்ந்து செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தில் சிலர் (அந்த நான்கு பேர்) வாய்க்கு வந்ததை பேசுவார்கள். எனவே, அதை காதில் வங்கிக் கொள்ளாமல் முன்னேற வேண்டும்.