Home இரகசியகேள்வி-பதில் சூழ்நிலை என்னை தவறு செய்ய வைத்துவிட்டது.

சூழ்நிலை என்னை தவறு செய்ய வைத்துவிட்டது.

61

sddefaultஅன்புள்ள அம்மாவுக்கு —
நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்; வயது 28. என் கணவரும், நடுத்தர குடும்பத் தைச் சேர்ந்த வர்தான்; தனி யார் நிறுவனத்தில் பணிபுரிகி றார். பிளஸ் 2 முடித்த சில மாதங்களிலேயே, எனக்கு திரு மணம் நடந்து விட்டது. இப் போது, நான் மீண்டும் படிக் கிறேன். என் கணவர் தான், என் னை படிக்க வைக்கிறார். கணினி வகுப்பு படிக்கிறேன். எங்கள் திருமணம், காதலித்து, பெற் றோரால் நிச்சயிக்கப் பட்ட திருமணம். எனக்கு, இர ண்டு ஆண் குழந்தைகள்.

எல்லா கணவன், மனைவி யைப் போல, எங்களுக்குள்ளும் சிறு சிறு சண்டைகள் வரும். ஆனால், சில மணி நேரம் கூட, எங்கள் இருவருக்குமே கோபம் நிலைக்காது; விரைவில், சமாதானம் ஆகி விடுவோம். திரும ணமான புதிதில், நான் மிகவும் கோபக்காரி; எதற்கெடுத்தாலும் சண்டை போடுவேன். ஆனால், என் கணவர், மிகப் பொறுமை யாக, நல்லது, கெட்டது எது என, புரிய வைத்து, முழுதாக மாற் றினார்.
அந்த அளவிற்கு, என் கணவர் நல்லவர். என்னிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அவருக்கு, அவருடைய அம்மா என்றால் உயிர். அந்த குணம், எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், தாயை நேசிப்பவன், மனைவியையும் நேசிப்பான் என்று சொல் வர். அவருக்கு, எந்தவித தீய பழக்கங்களும் கிடையாது. அவரும், அவருடைய உடன்பிறந்த அக்கா மற்றும் தங்கையும், என்னு டைய மாமியாரும், என் மேல் பிரியமுடன் இருப்பர்; நானும் அப்படித்தான்.

சரி… என் பிரச்னைக்கு வருகிறேன்… கணவருடைய வேலை காரண மாக, வெளியூரில் தங்கியிருந்தோம். அப்போது, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்தவர்களுடன் நட்புடன் பழகினோம். அவர் களும், எங்கள் வயதை ஒத்தவர்கள் தான். நாங்கள் குடி போன போது, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது. நான் பக்கத்து வீட்டு ஆணை, அண்ணன் என்றும், அவர், என்னை தங்கை என்றும் நினைத்து, நட்பாக பழகினோம்.
ஆனால், என்னுடைய கணவரும், பக்கத்து வீட்டுப் பெண்ணும் அப்படி நினைக்கவில்லை போல. சில வருடங்கள் நன்றாக இருந்தோம். அவ ள், இரண்டாவது முறையாக தாயானாள். அவளுக்கு நல்ல, சகோத ரியாக பல பணிவிடைகளைச் செய் தேன். அவள் பிரசவத்திற்கு, தாய் வீட்டுக்கு சென்ற போது கூட, அவளுடைய முதல் குழந்தையை பார்த்துக் கொள்வதும், பள்ளிக்கு அனுப்புவதும் நான் தான். அவளுடைய கணவர் வேலைக்குச் சென்று விடுவார்.

எங்கள் வீட்டின் விசேஷங்களுக்கு அவர்களும், அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு நாங்களும் தவறாமல் செல்வோம். நாங்கள் , எங்கள் இரு வீட்டாரும் அப்படித்தான் நட்பாக இருந்தோம்.
என் கணவருடைய வேலை காரணமாக, நாங்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றோம். அதன் பிறகும் பள்ளி விடுமுறைக்கு, அவர்கள், எங்கள் வீட்டுக்கும், நாங்கள், அவர்கள் வீட்டுக்கும் செல்வோம். என் கணவரும், அவர்களின் குழந்தை மேல் மிகவும் பாசமாக இருப்பார்.
சில நாட்களுக்குப் பிறகு, திடீரென்று அவளுடன் தொலை பேசியில் உரையாடுவதையும், அவளைப் பார்ப்பதையும் தவிர்த் தார். நான் பேசினாலும், அவர் பேச மாட்டார். நான் அவரைத் திட்டுவேன்; சண்டை போடுவேன்.
“இவ்வளவு நாள் நட்பாக இருந்துவிட்டு, இப்போது இப்படி அவளை வெறுக்கும் அளவுக்கு ஏன் மாறி விட்டீர்கள்?’ என கேட்டேன். அதற்கு, அவர், “என்றாவது ஒரு நாள் உனக்கு காரணம் புரியும்…’ என்று சொல்லி, என்னை சமாதானப்படுத்துவார்; என்ன காரணம் என்று புரியாமல் தவித்தேன். அந்த அளவிற்கு, அவள் மேல் நான் பிரியமாக இருந்தேன்.

என் வாழ்க்கையைத் திருப்பிப் போடும் அளவிற்கு, துயரமான அந்த நாள் வந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது, அவள், என் கணவருக்கு எழுதிய, பெயரிடாத கடிதம் கிடைத்தது. அதில், ஒரு காதலியைப் போல, மனைவியைப் போல, நானே வெட்கப்படும் அளவிற்கு, சில வாசகங் களும் எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்து, என் கண்கள் இருண்டன.

என் கணவர் வீட்டிற்கு வந்ததும், கண்ணீருடன் அந்த கடிதத்தை காட்டினேன். பெயர் இல்லாத கடிதம் என்பதால், ஏதாவது பொய் சொல்லி, என்னை ஏமாற்றி இருக்கலாம்; ஆனால், அவர் அப்படி பொய் சொல்லவில்லை. என் கண்ணீர், அவருக்கு, கவலையைக் கொடுத்தது.
அதனால், அவருக்கும், அவளுக்கும் உள்ள தொடர்பைச் சொன்னார். நாங்கள் அந்த ஊரில் இருந்த, நான்கு வருடங்களில், இரண்டு வருடங்கள் அவர்கள் கணவன், மனைவியாய் வாழ்ந்து ள்ளனர்.
இரண்டாவது குழந்தை, என் கணவருக்கு பிறந்ததாக அவளே சொன்னாள். இவருடைய குணத்திற்கும், அவளுடைய குணத் திற்கும் என்றுமே பொருந்தாது; அந்த அளவிற்கு குணம் . ஆனால், எப்படி இந்த தவறு நடந்தது என்று, எனக்குப் புரிய வில்லை.
அவள் ஒரு நாள், வெறும் மஞ்சள் கயிற்றைக் கட்ட சொன் னாளாம்; இவரும் கட்டியிருக்கிறார். ஆனால், இரண்டு கயிறு இருக்கக் கூடாது என்பதால், கழட்டி விட்டாளாம். “சூழ்நிலை என்னை தவறு செய்ய வைத்துவிட்டது. அதை விட முடியாமல், இரண்டு வருடங்கள் வாழ்ந்து விட்டோம். ஆனால், அது ஒரு விபத்து தான். உனக்கு துரோகம் செய்து, ஏமாற்ற வேண்டுமென நான் நினைக்கவில்லை.
“இந்த விஷயம் உனக்கு தெரிந்து, நீ படும் துயரத்தையும், கண் ணீரையும் உனக்கு கொடுக்க விரும்பவில்லை. உனக்கு தெரி வதற்கு முன், விலகி விட வேண்டுமென்று தான், நான் இதை உன்னிடம் மறைத்து விட்டேன்.

“அதனால், அவள் தந்த பரிசுகள் மற்றும் அவள் எழுதிய, 20 – 30 கடிதங்கள் எல்லாவற்றையும், அவளிடம் கொடுத்து விட்டு,”எல்லாவற்றையும் மறந்து விடுவோம்…’ என்று சொல்லி, பிரிந்து விட்டோம்; பிரிந்து, ஒன்றரை வருடங்கள் ஆகின்றன…’ என்று கூறினார்.
“இப்போது, அவளுடன் எந்த தொடர்போ, போனில் பேசுவதோ கிடையாது…’ எனக் கூறினார்.
ஆனால், இவர்களுக்குள் இப்படி ஒரு உறவு இருக்கும் என, என் னால் இதுவரை நம்ப முடியவில்லை; அந்த அளவிற்கு நடந்து கொ ண்டனர். என் கணவர் என் மீதும், குழந்தைகள் மீதும் பிரியமாய் இருப்பார்.
“இதை காரணம் காட்டி, என்னை பிரிந்து விடாதே…. வேண்டு மானால் என் அம்மாவிடமும், எல்லாரிடமும் நான் செய்த தவறைக் கூறி, மன்னிப்பு கேட்கிறேன்…’ என, அத்தையிடம் சொல்லப் போனார்; ஆனால், நான் தடுத்து விட்டேன்.

மற்ற குழந்தைகளை விட, இவர் மேல் நம்பிக்கையும், பாசமும் வைத்திருப்பார் அத்தை. அதனால், அவர்களிடம் இந்த அசிங்கத்தை சொல்லி, என்னுடைய வேதனையை அவர்கள் தலைமேல் சுமந்த நான் விரும்பவில்லை. மேலும், அவள் மீது, என் அத்தை மதிப்பு வைத்திருக்கிறார்; அதையும், நான் கெடுக்க விரும்பவில்லை.

கடிதத்தைப் படித்த மறுநாளே, நான், அவளுக்கு போன் செய்து, “ஏன் இருவரும் இப்படி எனக்கு துரோகம் செய்தீர்கள்?’ என கேட்டேன். அதற்கு அவள், “நான் ஒரு தவறும் செய்யவில்லை; உன் கணவர் தான் என்னை கட்டாயப்படுத்தி தவறு செய்தார்…’ எனக் கூறி, போனை வைத்து விட்டாள்.
அம்மா… ஒரு ஆண் எப்படி இரண்டு வருடங்களாக கட்டாயப்படுத்தி தவறு செய்ய முடியும்? அப்படி அவர் மீது மட்டும் தவறு இருந்தால், முதல் தடவை அவர் தவறாக நடக்கும் போதே என்னிடம் சொல்லி இருக்கலாம் அல்லது அவரை வீட்டிற்குள் விடாமல் விரட்டி இருக்கலாம். ஆனால், அவள் அப்படி எதுவும் செய்யவில்லை.
இந்த, 10 வருடம் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர், என் மீது வைத்த பாசம் எல்லாமே பொய்யாகிவிட்டதோ என கலங்கு கிறேன்.

அம்மா… என் கணவர் மீது உயிரையே வைத்திருக்கிறேன். அவர் செய்த துரோகத்திற்காக, நான், அவர் மேல் வைத்த என் உண்மையான பாசத்தை, என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. அவரை விட்டு விலகி இருக்க என்னால் முடியாது.
நான், இந்த விஷயத்தை எப்படி மறப்பது என தெரியவில்லை.
அம்மா… இப்போதும் என் கணவர் என் மீதும், குழந்தைகள் மீதும் பாசமாய், பிரியமாய் உள்ளார். நடந்த தவறை மறக்க நினைக்கிறார்; நானும், இதை மறக்க நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. முதலில் உன் கணவனை எடை போ டுவோம். உன் காதல் கணவன், திருமணத்திற்குப் பின், உன்னை படிக்க வைக்கிறான். குடும்ப அங்கத்தினரை ஆழமாய் நேசிக்கும் அம்மாபிள்ளை அவன். எந்த தீய பழக்கவழக்கங்களும் இல்லா திருக்கிறான். தன் தவறு வெளிப்பட்ட போது, தவறை ஒப்புக் கொண்டு, தாயிடம் மன்னிப்பு கேட்க போயிருக்கிறான். எல்லா வற்றுக்கும் மேலாக கெட்ட கனவாய் நினைத்து, உன்னுடன் புது வாழ்க்கை வாழ விரும்புகிறான்.
அவன் செய்த தவறு என்ன?

ஒரே தெருவிலோ, ஒரே காலனியிலோ வசிப்போர், அண்டை வீடுகளுடனான நட்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரேயடியாக, ஒருவர் மேல், ஒருவர் விழுந்து புரளக் கூடாது. ஐந்து வயது மகளுக்கும், எதிர்வீட்டு எட்டு வயது சிறுவனுக்கும் திருமணம் பேசி, எதிர்கால சம்பந்தி ஆகக் கூடாது. இரு வீடு, ஒரு வாசல் என்றைக்குமே ஆபத்து தான்.
மொத்தத் தவறும், எதிர்வீட்டு பெண்மணி மீது தான். தன்னுடைய கணவனுடனான தாம்பத்யத்தில் அதிருப்தி கொண்ட அந்த பெண், தகுந்த இரைக்காக சுவர் பல்லி போல் காத்திருந்திருக்கிறாள். உன் கணவன் கிடைத்ததும், நாக்கை நீட்டி, சுருட்டி விழுங்கி இருக்கிறாள். கிடைத்த கள்ள உறவை நிரந்தரமாக்க, உன் கணவன் மூலமாக, தனக்கு இரண்டாம் தாலி கட்டிக் கொண்டிருக்கிறாள்.
உன் கணவர், கட்டாயப்படுத்தி தவறு செய்தார் என, அப்பெண் கூறுவது, அப்பட்டமான பொய்.
“நீ உன் குடும்பத்தை விட்டு வா… நான், என் குடும்பத்தை விட்டு வருகிறேன். இருவரும் ஓடிப்போய் புது வாழ்வு வாழ்வோம்…’ என்று கூறியிருக்கக் கூடும் அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி. அதனால் தான், உன் கணவர் அவளை பிரிந்திருக்கிறார்.

திருந்தி வந்தவர், இனி தவறு செய்ய மாட்டார் என நம்புவோம். ஆகவே, நீ அவருடன் மகிழ்ச்சியாய் வாழு. கெட்ட நிகழ்வுகளை மறக்க மனப்பயிற்சி மேற்கொள். உன் கணவர், பக்கத்து வீட்டு பெண்மணிக்கு துரோகம் செய்யவில்லை; உனக்குதான் துரோகம் செய்திருக்கிறார். நீ அவரை மன்னித்த பிறகு, கடவுள் அவரை எப்படி தண்டிப்பார்? மன்னிக் கவே செய்வார்.
சினிமாக்களும், சீரியல்களும் பார்த்து, பார்த்து சின்ன விஷய ங்களுக்கு பெரிதாய் அலட்டிக் கொள்கிறாய். உன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, உன்னால், 24 மணி நேரம் கூட நிம்மதியாய் வாழ முடியாது.
கரையோர முதலைகள் அலை, அலையாய் படையெடுக்கும். ஷேக்ஸ் பியரின் ஷைலக் போல் தொடை மாமிசம் கேட்கும்… தேவையா?

உன் அன்பு, அரவணைப்பால், கணவனை வசப்படுத்து. வருட த்திற்கு இருமுறை எங்காவது மினி சுற்றுலா சென்று வாருங்கள். சொந்த வீடு கட்ட திட்டமிடுங்கள். வாடகை வீடுகளில் குடியி ருக்கும் போது, அண்டை அயலாருடன் மத்திமமாய் பழகுங்கள். நடந்ததை எக்கால கட்டத்திலும் கணவரிடம் சொல்லிக் காட் டாதே. “என் கணவர் மிகவும் நல்லவர்…’ எனக் கூறி, அவரை பழுக்க காய்ச்சிய இரும்பின் மீது நிற்க செய்யாதே. கோவி லுக்குச் சென்று குலதெய்வத்தை கும்பிட்டு வாருங்கள்.
இது வரை நீங்கள் இருவரும் வாழ்ந்த, 10 வருட வாழ்க்கையை விட, இனி, நீங்கள் வாழப் போகும், 40 வருட வாழ்க்கை மகா அர்த்த முள்ளதாய் இருக்கும் என யூகிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

Previous articleஉடலுறவில் ஈடுபடும் போது மனைவியுடன் செய்ய வேண்டியவை, கூடாதவை!!
Next articleபெண்களின் செக்ஸ் இன்பத்தின் பார்வை