Home ஜல்சா நிர்வாண உணவகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: வெளியான காரணம்

நிர்வாண உணவகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: வெளியான காரணம்

424

ஜல்சா செய்திகள்:நிர்வாணவிரும்பிகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திறக்கப்பட்டிருந்த உணவகம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த உணவகத்தில் குறைந்தளவு வாடிக்கையாளர்களே வருகை தருவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸின் 12 ஆம் வட்டாரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் O’Naturel எனும் நிர்வாணப்பிரியர்களுக்கான உணவகம் திறக்கபப்ட்டது.

இரவு உணவு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து உணவு அருந்தவேண்டும்.

இந்நிலையில், ஆரம்பத்தில் அதிகளவான வாடிக்கையாளர்களை கவர்ந்திருந்த போதும், தற்போது மிக குறைவான அளவு வாடிக்கையாளர்கள் வருகையால் இந்த உணவகம் மூடப்பட உள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சனிக்கிழமையுடன் இந்த உணவகம் மூடப்பட உள்ளது. மைக் மற்றும் ஸ்டெபேன் எனும் 42 வயது இரட்டையர் இணைந்து இந்த உணவகத்தை முதல் முதலாக பிரான்சில் திறந்திருந்தார்கள்.

பிரான்ஸ் நாட்டில் நிர்வாணப்பிரியர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 460 இடங்களை விடவும் O’Naturel மிகவும் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.