Home ஆண்கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடா?

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடா?

49

சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது. இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முதன்மையான இயற்கை பொருளாக விளங்குகிறது. இது விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்தி வாய்ந்த உணவாக விளங்குகிறது. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்கள் வளமையாக உள்ள இந்த பழம் இயற்கையான முறையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்கும்.

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டு பிரச்சனையை பொறுத்த வரை, அதற்கு தீர்வை அளிக்கும் அதிசயத்தை தருகிறது டார்க் சாக்லெட். டார்க் சாக்லெட்டில் இரத்த சுற்றோட்டத்தை மேம்படுத்தும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. மேலும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இது உதவுகிறது.

தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால போதும், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மனநிலையை தூண்டி விடும்.

ஆண்களின் விந்தணு எண்ணிக்கைகளை அதிகரிக்க உதவும் உணவுகளில் மற்றொன்று தான் கடல் சிப்பிகள். பாதிப்படைந்த விந்தணுக்களுக்கு உதவிடும் கடல் சிப்பிகள்.

இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற்பத்தியில் விரைக்கு உதவிடும் அர்கனைன். திடமான விறைப்பிற்கும் கூட வால்நட் உதவுகிறது. இது போக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.

இதற்காக தானே நாம் காத்து கொண்டிருந்தோம்; ஆம், பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ள ஆரோக்கியமான பழமாக வியாழ்ந்குகிறது வெண்ணெய்ப்பழம். ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் மற்றும் வெள்ளத்தை போல் கனிமங்கள் வளமையாக அதில் அடங்கியுள்ளதால், விந்தணு இயக்கத்தை ஊக்குவிக்கும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான மிகச் சிறந்த இயற்கை சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.

அஸ்பாரகஸ் என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது இது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.