Home உறவு-காதல் உன் பேரே தெரியாது…

உன் பேரே தெரியாது…

28

கணவன், மனைவிக்கு இடைப்பட்ட தூரத்தில் இருக்கும் ஒரு சொல் தான் ‘என்னங்க’ என்பது. கல்யாணம் ஆன புதிதில் இவ்வாறு அழைப்பது தவறு ஒன்றுமில்லை. இருபது வருடம் கழித்தும் அவ்வாறே நீங்கள் அழைத்தால், அது யார் தவறு? அதுவும் கிராமத்தில்… பொதுவாக ஒரு சில பெற்றோரை, தன் பிள்ளைகள் “வாங்க, போங்க” என அழைத்து பேசுவதை பார்த்து இருப்பீர்கள். ஆனால், இந்த மரியாதை என்பது ஒருசில விதத்தில் 144 தடை உத்தரவை பிறப்பிக்கும் என்பதை தாங்கள் அறிவீர்களா?

அட ஆமாங்க, ஒருவேளை நீங்கள் யாரையோ காதலிக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். அப்போது உங்களுக்கு தடையாக இருப்பது உங்கள் தாய் தந்தை மீது வைத்திருக்கும் பாசம் தான். அந்த பாசம் தொடர்ந்தால் பரவாயில்லை. ஒருவேளை சொல்லாமல் பிரிவில் முடிந்தால் அதுவும் நம் பெற்றோருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் தானே.

எப்போதும் அன்பு இருக்கும் இடத்தில்தான் அதிக உரிமையும், பாசமும் இருக்கும். உங்கள் பெற்றோரிடம் எதையுமே மனம் திறந்து பேசும் ஒரு நபராக இருந்தால் இந்த மரியாதை என்பது கடைசிவரைக்கும் மனதில் மட்டுமே இருந்தால் போதும்.

கணவன், மனைவி வாழ்க்கையும் இப்படித்தான். “டா” அல்லது “டீ” போட்டு கூப்பிடுவதால் ஒருபோதும் மரியாதை என்பது குறைந்துவிடுவதல்ல. சொல்லப்போனால், இந்த செல்ல வார்த்தைகள் தான் உங்கள் அந்தரங்க வாழ்வையும், அழகிய வாழ்வையும் புரிதலுடன் வழி நடத்தும். அதனால் தான் லவ் மேரேஜை காட்டிலும், அரேன்ஜ் மேரேஜில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள வெகுநாட்கள் ஆகிறது.

லவ் மேரேஜ் என்றால், வாங்க… போங்க என்பது நாளடைவில் வாடா…போடாவாக மாற, செல்லம், புஜ்ஜிம்மா, என கொஞ்சி பேசி இறுதியில் திருமணம் என வரும்போது ஒரு சிலர் அதை அழகாக கையாண்டு திருமணத்திற்கு பிறகும் கொஞ்சி விளையாடுகின்றனர். அரேன்ஜ் மேரேஜும் சுகம் தான். ஒருவருக்கொருவர் புரிந்து நடக்க, என்ன பிடிக்கும் என்பதை தெரிந்தும் வாழ்க்கையில் பயணம் செய்வதால்…

இந்த நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தடுமாறத்தான் சந்தேகம் என்பது இருவர் மனதிலும் பிறக்கிறது. இது மிக கொடிய நோய். ஒருவரை ஒருவர் புரிந்து சந்தேகமற்று வாழ்ந்தால், காதல் திருமணத்தை விட பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது என்றுமே நீங்கா அழகுடன் வாழ்வில் அரங்கேறும் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.