Home பாலியல் மாதவிலக்கு

மாதவிலக்கு

86

இந்தியாவில் சராசரியாக 13.5 வயதில், அமெரிக்க நாட்டில் சராசரியாக 12.5 வயதிலும் , ஐரோப்பாவில் சராசரியாக 13 வயதிலும் பெண்கள் பூபெய்தி விடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம் . ஒரு பெண் பூபெய்தும் பருவம் குடும்பம்,இனம், பொருளாதார நிலை, ஊட்டசத்து , சூழ்நிலை ,ஆரோகியம் ஆகிய பல்வேறு காரணங்களால் மாறுபடுகிறது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேலை நாடுகளில் ஒரு பெண் பூபெய்துவதட்கான சராசரி வயது 17 -ஆக இருந்தது. ஆனால் இப்போது சத்துணவு, நல்லரோகியம் சூழ்நிலை ஆகிய காரணங்களால் பூபெய்தும் வயது 13 ஆக குறைந்துவிட்டது .

மாதவிலக்கு ஆரம்ப காலத்தில் ஒழுங்கான கால அளவில் இருகாது. சில பெண்களுக்கு முதல் மாதவிலக்கு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.வேறு சிலருக்கோ அதிக நாட்கள் இருக்கலாம். முதல் மாதவிலகிட்கு பின்னரும். ஒரு சிலருக்கு மாதத்துக்கு ஒரு முறை என ஒழுங்கான இராது. மாதத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் கூட வரலாம். வேறு சுலருக்கோ இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வரும்.

பூபெய்தியவுடன் ஒரு மாதத்திற்கு இருமுறை என்று மாதவிலக்கு தோன்றினாலும் சரி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்று தோன்றினாலும் சரி அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மாதவிலக்கு மாதத்துக்கு ஒரு முறை என ஒழுங்கான சுழற்சிக்கு வந்துவிடும்.

28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு தோன்றுவதுதான் இயற்கை , ஆயினும் சில பெண்களுக்கு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை எனவும், சில பெண்களுக்கு 5அல்லது 6 வாரங்களுக்கு ஒரு முறை எனவும் மாதவிள்ளகு வருவதோடு தொடர்ந்து அப்படியே அமையும்.

பெண்ணுக்கு பெண் மாதவிலக்கு தோன்றும் நாட்களில் மாறுபாடுகள் இருபது போல உதிரபோக்கு காணப்படுகின்ற நாட்களிலும் மாறுதல்கள் இருக்கும்.சாதரணமாக மூன்று நாட்களுக்கு மேல் ஐந்து நாட்கள் வரை ரத்தபோக்கு காணப்படும்.சிலருக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கலாம்.சிலருக்கு ஏழு நாட்கள் கூட இருக்கலாம்.

நாளொன்றுக்கு வெளியேறும் ரத்த அளவு சராசரி 35 மில்லி லிட்டர் முதல் 45 லிட்டர் வரை இருக்கும். ஒரு சில பெண்களுக்கு நாளொன்றுக்கு 5 மில்லி லிட்டேர்ரே இருக்கும்.மற்றும் சிலருக்கோ 60 முதல் 80 மில்லி லிட்டர் வரை ஒரே நாளில் உதிரபோக்கு அதிகமாக காணப்படும். அவுதிரபோகினால் நாளொன்றுக்கு 0.8 முதல் 0.7 மில்லி கிராம் இரும்பு சத்து தினமும் வெளியேறி விடுகிறது.

மாதவிலக்கின் பொது 80 சதவிகிதம் பேருக்கு சிறிய அளவிலேனும் சில உடல் நிலா அசவ்கரியங்கள் ஏற்படுவதுண்டு. தலைவலி , அசதி, அடிவயிற்று வலி, குறுக்கு வலி, அடிவயிறு கனத்து தெரிதல், சோம்பல் , மார்பகங்கள் கனத்திருத்தல் , மலச்சிக்கல் பேதி, முகபறு என பல்வேறு பிரச்சனைகள் தோன்றலாம்.

மாதவிலகை உடலியல் நிகழ்ச்சியாக கொண்டு, அன்றாட வாழ்விற்கு அதனை தடையாக எண்ணாத மனபோக்கு உள்ளவர்களிடம் அதிகமாக உடல் தொந்தரவுகள் தெரிவதில்லை. அனால் மாத விளக்கை ஒரு தொல்லையாக கருதுகின்ற மனோபாவம் உள்ள பெண்களிடம் தான் மேலே சொன்ன பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றது.மாதவிலக்கான நாட்களில் “தீட்டு என்கிற பெயர்களில் பெண்களை ஒதுக்கி வைக்கிற பழக்கம் இன்றைக்கும் சில குடும்பங்களில் காணப்படுகின்றது. சாதரணமாகவே அந்த மூன்று நாட்களில் ஏற்படும் உடல் மாற்றங்களில்னால் ஸோர்வு ,எரிச்சல் போன்ற மன பதிப்புகளும் பெண்கள் ஆளாகிஇருப்பர்கள் .தீட்டு என்று அவர்களை ஒதிக்கி வைக்கும் போது அவர்களின் மனசொர்வும் உளைச்சலும் இன்னும் அதிகமாகிறது.அதன் விளைவாக அவர்களின் ஆளுமையும் பாதிப்படைகிறது.

எனவே மேற்சொன்ன பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.மதவிலகான நாட்களில் எப்பொழுதும் போல் இயல்பாக இருக்கிற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அன்றாட வேலைகள், விளையாட்டு போன்ற அணைத்து விசியங்களிலும் பெண்கள் ஈடுபட வேண்டும்.