Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதில் இதை பண்ணுங்க

பெண்களின் முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதில் இதை பண்ணுங்க

104

பெண்கள் அழகு குறிப்பு:பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு ஒரு கட்டத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பாக சரும அரிப்புகளை அதிகப்படுத்தி, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும்.

ஆகவே சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள். இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துங்கள். சரி, இப்போது அந்த இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு, வெள்ளை மிளகு மற்றும் சூடத்தை ஒன்றாக சேர்த்து பொடி செய்து, அதில் சிறு துளி மண்ணெண்ணெய் சேர்த்து கலந்து, கால்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்தால், கால்களில் உள்ள முடியானது உதிர்ந்துவிடும்.

சருமத்தில் வளரும் முடியின் நிறத்தை ப்ரௌன் நிறத்தில் மாற்ற, இரவில் படுக்கும் முன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 மாதத்திற்கு, வாரத்தில் 3-4 முறை செய்து வர வேண்டும்.

தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும். எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்திய பின், சருமத்திற்கு எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து கொண்டால், அது சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்