Home பாலியல் நாப்கின் பயன்படுத்தும் போது பெண்கள் செய்யும் தவறுகள்!

நாப்கின் பயன்படுத்தும் போது பெண்கள் செய்யும் தவறுகள்!

27

பெரும்பாலும் இப்போது மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணமாக இருப்பது சானிட்டரி நாப்கின் தான். இதை பயன்படுத்துவதும், அப்புறப்படுத்துவதும் எளிது. பொதுவாக நாப்கினை எப்படி பொறுத்த வேண்டும், நாப்கின் பயன்படுத்தும் போதும் அப்புறப்படுத்தும் போதும் பெண்கள் எவற்றில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு காண்போம்…

பயன்படுத்தும் முறை | ஸ்டெப் #1 சரியாக பேக்கை பிரித்து மடித்து வைத்துள்ள நாப்கினை பிரிக்க வேண்டும். நாப்கின் வைக்க ஏதுவான இடத்தில் அமர்ந்து, உள்ளாடையை முட்டி வரை தளர்த்தி அமரவும்.

பயன்படுத்தும் முறை | ஸ்டெப் #2 ஒட்டும் வகையில் ஸ்ட்ரிப் தரப்பட்டிருக்கும். அதை பின்னாடி இருந்து பிரிக்க வேண்டும். விங்க்ஸ் இருக்கும் நாப்கினில் மூன்று ஸ்ட்ரிப் இருக்கும். அதில் ஒன்று முக்கியமானது. மற்ற இரண்டு விங்க்ஸ்-ல் இருக்கும்.

பயன்படுத்தும் முறை | ஸ்டெப் #3 கவட்டை மற்றும் உள்ளடைக்கு நடுவே சரியாக நாப்கினை வைத்து பிரஸ் செய்ய வேண்டும். பிறகு விங்க்ஸ்-களை உள்ளாடையின் வெளிப்புறத்தில் இருப்பக்கமும் சரியாக ஃபோல்ட் செய்து வைக்க வேண்டும். முக்கியமாக அகலாமான பகுதி உள்ளாடையின் முன்புறம் அமையும் படி நாப்கினை பொறுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை | ஸ்டெப் #4 பிறகு சரியாக நாப்கின் உள்ளாடையில் பொருந்தியுள்ளதா என்பதை சரிபார்த்து சரியாக உடுத்திக் கொள்ளுங்கள். அசௌகரியமான நிலையில் நாப்கின் வைக்க வேண்டாம். இது உங்களுக்கு தான் சிரமத்தை அளிக்கும்.

பயன்படுத்தும் முறை | ஸ்டெப் #5 மாதவிடாயின் முதல் இரண்டு நாட்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை சரிபார்த்து கொள்ள வேண்டும். அதிக இரத்தபோக்கு ஆகியிருந்தால் உடனே மாற்றி விடுங்கள். இரத்தப் போக்குடன் உள்ள நாப்கினை அதிக நேரம் வைத்திருப்பதால் கூட தொற்று உண்டாகலாம்.

பயன்படுத்தும் முறை | ஸ்டெப் #6 நாப்கின் பயன்படுத்திய பிறகு சரியாக அதை மடித்து அப்புறப்படுத்த மறக்க வேண்டாம்.