Home சமையல் குறிப்புகள் சுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

சுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

78

சமையல் மந்திரம்:நீங்கள் எளிதாக நண்டு வறுவல் செய்யலாம்.இனி நீங்கள் ஓட்டல் போக தேவை இல்லை. உங்கள் வீட்டிலேயே சமைத்து சுவையாக உண்ணலாம்.

நண்டு வறுவல்(Crab Curry) செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

நண்டு வறுவல் செய்ய தேவையானவை :

நண்டுகள்(மீடியமானது) – 6

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க தேவையானவை :

இஞ்சி – சிறுதுண்டு,

சின்ன வெங்காயம் – 10 ,

காய்ந்த மிளகாய் – 10 ,

சீரகம் – 1 டீஸ்பூன்,

பூண்டு பல்- 5 ,

தனியா – 2 டீஸ்பூன்

செய்முறை :

* ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை சேர்க்கவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். மெல்லிய தீயில் சிறிது நேரம் அப்டியே வைக்கவும். நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கிப் விடவும். இப்போது சுவையான நண்டு வறுவல் ரெடி.