Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முகத்தில் வளரும் அரும்பு மீசையை மறையச் செய்யும் இயற்கை வைத்திய குறிப்புகள்!!

பெண்களின் முகத்தில் வளரும் அரும்பு மீசையை மறையச் செய்யும் இயற்கை வைத்திய குறிப்புகள்!!

26

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா?

வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள்.

ஆம், எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.

சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும்.

அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும்.

ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காயப்படும்.

ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன

குப்பை மேனி :
குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

* இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

* தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

கடலை மாவு மற்றும் தயிர் :
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

உருளைக் கிழங்கு :
உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.

வாழைப்பழம் :
வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

எலுமிச்சை :
எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

Previous articleஉடலுறவுக்கான பொசிஷன்கள்
Next articleமாதவிடாய் நாட்களில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்?