Home பெண்கள் தாய்மை நலம் Mother Care கர்ப்பமாக இருக்கும்போது எவ்வளவு எடை இருக்க வேண்டும்?…

Mother Care கர்ப்பமாக இருக்கும்போது எவ்வளவு எடை இருக்க வேண்டும்?…

29

கர்ப்பக் காலத்தில் பெண்களின் எடை குறைவாக இருந்தாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட எடைக்கும் அதிகமாக இருந்தாலும் அது தாய் மற்றும் குழந்தைக்கு இருவரையும் சேர்ந்தே பாதிக்கும்.

கருவில் வளரும் குழந்தைக்கு கலோரிகள் மிகவும் அவசியம் என்பதால், கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

கர்ப்பக் காலத்தில், அதற்கு முன்பு இருந்ததைவிட 12 முதல் 16 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.

பெண்களின் உடல் எடையானது, கர்ப்பக் காலத்தில் அதிகமாக இருந்தால், அதை குறைப்பதற்கு முயற்சிக்காமல், சத்தான உணவுப் பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

குறைந்த உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்பக் காலத்தில் 13 முதல் 18 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.

அதிக உடல் எடைக் கொண்ட பெண்கள் கர்ப்பக் காலத்தில் 7 முதல் 11 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.

முதல்முறை கர்ப்பம் அடைந்த பெண்களாக இருந்தால் முதல் மூன்று மாதங்களில், 1 முதல் 2 கி.கி வரை அதிகரிக்க வேண்டும். பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இரட்டைக் குழந்தை வயிற்றுக்குள் சுமக்கும் கர்ப்பிணி பெண்களின் உடல் எடையானது, 16 முதல் 20 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.