Home பாலியல் ஆண்களே உங்களுக்கு அந்த உறவில் மட்டும்தான் அதிக விருப்பமா ?

ஆண்களே உங்களுக்கு அந்த உறவில் மட்டும்தான் அதிக விருப்பமா ?

46

உடலுறவில் ஆர்வம் உள்ள ஆண்களுக்கு மட்டும்…!தாம்பத்யம் என்ற வார்த்தையே மிக அழகான ஒன்றுதான்..ஆனால் அதில் காமம் இருக்காது காதல் இருக்கும்..ஆனால் உடலுறவு என்ற வார்த்தை நேரடியாகவே காமத்தை பற்றி விவரிக்க கூடியதாக உள்ளது

ஆண் பெண் உடலுறவு குறித்த முக்கிய விஷயம்….

ஆண்கள் உடலுறவில் அதிக ஆர்வம் காட்ட முக்கிய காரணம் ஹார்மோன்

டோபமைன் மற்றும் நார் எபிநெப்ரின்,கட்டிப்புடி ஹார்மோன் எனும் ஆக்ஸிடோசின் போன்றவை உடல் ரீதியான மகிழ்ச்சிக்கான உள்ளார்ந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி பாலியல் இன்பத்தை ஈர்க்கும். டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவை அதற்கு தூண்டுதலாக அமையும்.

ஆண்கள் அதிக பாலியல் உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதற்கு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான்

ஒரு சாதாரண ஆணின் உடல், ஒரு பெண்ணின் உடலை விட 20 மடங்கு அதிகமாக இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

பெண்களை பற்றி ஆண்கள் கவனத்திற்கு…

பெண்கள் ஆண்களை போன்று எப்போதும் உடலுறவு விரும்புவதில்லை

தன்னை நேசித்து, அன்பாக பழகி,நேர்மையாக நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு பெண் அந்த நபரிடம் காதல் வயப்பட்டு,அந்த ஆண் நபரை தன் காதலனாக ஏற்க முன் வருகிறார்.

நம்பிக்கையான உண்மையான காதலை உணர்ந்த பின்னரே ஒரு பெண் உடலுறவிற்கு ஓகே சொல்கிறார்

அனால் ஆண்களுக்கு அது அப்படி கிடையாது…உடலுறவு என்றாலே எப்போதும் தயார் என்ற நிலையில் தான் இருப்பார்கள்.ஆண்களை பொறுத்தவரை உடல் பசி எப்போது தீர்கிறதோ அப்போது தான்,அந்த பெண் தன்னை காதலிக்கிறாள் என நம்பதோன்றுகிறது.

அதாவது காதலை ஒரு கருவியாக பயன்படுத்தி பெண் உடலை அடையும் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்

அந்த உடல்தேவை பூர்த்தியாகும் வரை அவர்கள் எவ்வித அன்பையும்,காதலையும் புரிந்து கொள்வதில்லை.

பெண்களை பொறுத்தவரை தன் மனதில் இடம் பிடிக்காத எவரையும் தன்னோடு உறவு கொள்ள அனுமதிப்பதில்லை.ஆனால் ஆண்களை பொறுத்தவரை எந்த பெண் தன்னுடன் உறவில் ஈடுபடுகிறார்களோ அப்போது தான் உடல் பசியும் காதலும் கிடைகிறது என நம்புகிறார்கள்

இதில் இன்னொரு விஷயம் என்ன வென்றால், உறவில் ஈடுபட்ட பெண்ணை அந்த நேரத்தில் மட்டும் தான் அதிக கொஞ்சலும் பாசமும்….சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு முறை உறவில் ஈடுபட பெண் சம்மதித்து விட்டால் அடுத்த தேடுதல் வேட்டையில் ஈடுபட முயற்சிப்பது ஆண்கள் தான் ..

பெண்களை பொறுத்தவரை, தம் மனதில் இடம் பிடித்த நபரை காதலனாக ஏற்றுக் கொண்டு,அந்த நபரை நம்பி திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கையோடு ஈடுபடுகிறாள்….

ஆண்களை பொறுத்தவரை உறவில் ஈடுபடும் வரை தான் காதல்..பின்னர் அதுக்கு மேலே என்ன இருக்கிறது என ஈசியாக எடுத்துக்கொள்வார்கள்.

எனவே பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் புரித்துக் கொள்ள வேண்டும்.

அதே வேளையில் பெண்கள் தன் தன்னுடைய தேர்ந்தெடுக்கும் போது நல்ல மரபணு கொண்ட ஆண்களை தேர்வு செய்வது நல்லது. அது அந்த பெண்ணை சார்ந்தது மட்டுமில்லை..அந்த பெண்ணால் ஒரு சந்ததி கிடைக்கப்போகிறது..அந்த சந்ததி மிகவும் திறமையாகவும் , வலுவானதாகவும் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான்

ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது.இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எவருமில்லர்.ஆனால், இருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள்.இதில் சிலர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால்தான், இருவருக்குள்ளும் இணக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்.

பெண் என்பவள் உடலளவிலும் மனதளவிலும் இணைந்து அவனை தனது வாழ்க்கையாக எண்ணி வேறு ஓர் ஆண்மகனை மனதில் நினைக்கக்கூட மறுக்கிறாள் என்பதை ஆண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.