Home பாலியல் அந்த ஃபீலிங் அடிக்கடி வருதா?

அந்த ஃபீலிங் அடிக்கடி வருதா?

23

காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒருமாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது .

ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க துணையுடன் இணையும் போது அவர்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் செயல்பாடுகளும், பாலுணர்வும் ஏற்படுவது இயல்பானதுதான். அது அளவாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் அதுவே அளவு மீறி போகும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன. எந்த நேரத்திலும் பாலியல் எண்ணங்கள் தலை தூக்குகிறதா? அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

காம உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினமானது என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காம உணர்வுகளை தடுக்க தடுக்க பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது.

உணவுக்கும் நமக்கு எழும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவார்கள். எனவே செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் முருங்கை கீரை, முருங்கைக் காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் பாலியல் உணர்வை குறைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற எண்ணங்களை கட்டுப்படுத்தலாமாம். சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம்.

காமம் நிலையானது அல்ல என்பதை மனதளவில் உணர வேண்டும். காம உணர்வுகள் தலைதூக்கும் வகையில் அந்த எண்ணத்தை திருப்பும் செயல்களை செய்யலாம். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. தியானம் செய்ய இயலாதவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்
மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம், மனதை லயிக்கச் செய்யும் புத்தகம் படிக்கலாம். இந்த எண்ணம் தவறானது. இதனால் யாரும் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று எண்ணாமல் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இதனை பேசி விளக்கம் பெறலாம்.

பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும். பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.