Home பாலியல் நீங்கள் அதிக உணர்ச்சி அடைபவரா?இதை மறக்காமல் படியுங்க

நீங்கள் அதிக உணர்ச்சி அடைபவரா?இதை மறக்காமல் படியுங்க

296

பாலியல் உணர்ச்சி:உணர்ச்சிகள் எனும் போது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்ச்சிகள் ஆளுக்காள் வேறுபட்டு காணப்படும். சிலர் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். மேலும் சிலர் அவ்வளவு உணர்ச்சி வசப்பட மாட்டார்கள்.

இவ்வாறிருக்க, அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் காதலிக்க ஆரம்பித்து விட்டால் அவர்களின் துணை சில விடயங்கள் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும்.

அது என்ன என்று கேட்கின்றீர்களா?

01. இப்படிப்பட்டவர்கள் ஏனையோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதிகளவு சிந்திப்பவர்களாக இருப்பார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களின் போது அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். சிறு விடயங்களும் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்களை நோகடிக்காத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.

02. அதிக உணர்ச்சி வசப்படுபவர்கள் பொதுவாக தனிமையையே அதிகளவில் விரும்புவார்கள். தனிமையை உபயோகித்தே அவர்கள் தங்களுக்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்கின்றார்கள். கூட்டத்தில் இருக்க நேரிட்டால் அது அவர்களை ஒருவித கூச்சத்திற்கு உள்ளாக்கிவிடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கே உரிய முறையில் அவர்களை வலிமைப்படுத்திக் கொள்ள நாம் வாய்ப்பளிக்க வேண்டும்.

03. அதிகளவில் உணர்ச்சிவசப் படுபவர்கள் இலகுவில் ஏனையோரின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருப்பர். அவர்களிடம் எமது உணர்ச்சிகளை மறைப்பதென்பது முடியாத காரியமாகும். முகபாவங்களை வைத்துக் கூட ஏனையோரின் உணர்ச்சிகளை துல்லியமாக புரிந்து கொள்ளும் வல்லமை இவர்களுக்கு உண்டு. எனவே ஒளிவுமறைவு என்பது இங்கே கிடையாது என்று தான் கூற வேண்டும்.

04. ரொமேன்டிக் விடயங்களில் அதிக உணர்ச்சி வசப்படுபவர்கள் எப்போதும் மிகுந்த அவதானத்துடனும் கவனமாகவும் இருப்பார்கள். ஒருவரை நம்பி விட்டால் அவர்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாக எப்போதும் உண்மையானவர்களாகவே இருப்பார்கள். அதனால் அவர்களது உணர்வுகளை பாதிக்காதவாறு நடந்து கொள்வது முக்கியம்.

05. அதிக உணர்ச்சி வசப்படுபவர்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் விழித்திருப்பார்கள். தூக்கமின்மை என்பது இவர்களுக்கு பழகிப் போனதொன்று. அதனால் இப்படிப்பட்டவர்களை காதலிக்கும் போது இரவு நேர தூக்கத்தை அர்ப்பணிக்க வேண்டி ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

06. அதிக கூட்டம் கூடும் பகுதிகளில் கூடியிருப்பதை இவர்கள் விரும்ப மாட்டார்கள். அமைதியாக நேரம் செலவழிக்கக் கூடிய பகுதிகளில் இருக்கவே இவர்கள் விரும்புவார்கள்.
07.அதிக சிந்தனை மற்றும் குழப்பம் என்பன இவர்களோடேயே ஒட்டிப் பிறந்த குணங்களாகும். எனவே இப்படிப் பட்டவர்களை மாற்ற நினைப்பதென்பது இயலாத காரியமாகும். ஆரம்பத்தில் இவர்களுடன் ஒத்துப் போதல் என்பது கடினமாகக் காணப்பட்டாலும் இவர்களுடன் ஒன்றிப் போய்விட்டால் இவர்களைப் போல் சிறந்தவர்கள் யாருமே இல்லை என்று தான் கூற முடியும்.

08.இவர்கள் வாய் தர்க்கத்திற்கோ அல்லது சண்டைக்குச் செல்வதையோ விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவை ஒருவரை எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை இவர்கள் நன்குணர்வார்கள். ஆகவே எந்த வம்புக்கும் இவர்கள் தலை போடமாட்டார்கள். சமாதானமாக பிரச்சினையை தீர்ப்பதையே விரும்புவார்கள். எனினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது. இவர்கள் பொறுமை இழக்கும் பட்சத்தில் அதுவேறு விதமான பிரச்சிளைகளை கொண்டு வரும்.

09.இவர்களின் உணர்ச்சி வசப்படக் கூடிய தன்மையை வைத்து நாம் அவர்களை எடை போடக் கூடாது. அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொள்வதே சிறந்தது.

10.இப்படிப் பட்டவர்கள் வேண்டுமென்றே மற்றயவர்களை காயப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ மாட்டார்கள். ஆழத்தை அறிய முடியாத அளவு அன்பு செலுத்துவபர்களே இவர்களாவர்.

11. இவர்கள் ஒருவரிடம் பழகும் போது ஆரம்பத்தில் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் ஒருவரை பிடித்துப் போய்விட்டால் அவர்களிடம் பேசுவதை நிறுத்த மாட்டார்கள் என்று தான் கூற முடியும். இவர்களின் மனம் மற்றும் இதயம் என்பன எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே இவர்கள் மனம் விட்டு கதைக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவு இருக்காது என்பதே உண்மை