Home பாலியல் மாதவிடாய் காலங்களில் உதிரம் பழுப்பு நிறத்தில் வெளியேறுகிறதா? – உஷார்…!

மாதவிடாய் காலங்களில் உதிரம் பழுப்பு நிறத்தில் வெளியேறுகிறதா? – உஷார்…!

21

பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உதிரம் பழுப்பு நிறத்தில் வெளியேறினால், அது நோயை குறிக்கும் எனவே, உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.

ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும் 5-12 சிட்டிகை வரை அளவிலான ரத்தம் கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

மாதவிடாயின் போது சில பெண்களுக்கு வெளியாகும் ரத்தத்தின் நிறம் மாறுபடலாம்.

இதில், சுத்த சிவப்பு நிற ரத்தப்போக்கு மட்டுமே ஆரோக்கியத்தை குறிக்கும்.

ஆனால், சிலருக்கு பழுப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் நோய்களுக்கான அறிகுறி. பழுப்பு நிற ரத்தப்போக்கு எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பதை காணலாம்.

சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும்போது, ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டு பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறலாம்.

கருச்சிதைவின்போதும் பழுப்பு நிற ரத்தப்போக்கு ஏற்படலாம். பழுப்பு நிறத்தில் கட்டி கட்டியாக திசுக்களுடன் வெளியேறினால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை குறிக்கும்.

சில நேரங்களில் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் தோன்றி இருக்கும்போது கூட பழுப்பு நிறத்தில் ரத்தப்போக்கு உண்டாகும்.

மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் தான் முக்கிய பங்காற்றுகிறது. இதன் சமநிலையின்மையால் கருப்பையின் உள்ளடுக்குகள் தடித்து அதிகமாக ரத்தபோக்கு ஏற்படும்.