Home ஆரோக்கியம் மெனோபாஸ்-க்கு முன்பும் பிறகும் கவனிக்க வேண்டியவை

மெனோபாஸ்-க்கு முன்பும் பிறகும் கவனிக்க வேண்டியவை

29

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சாதரணமாக ஏற்படும் மெனோபாஸ்-க்கு முன்பும், அதன் பிறகும் சில விஷயங்கள் கவனிக்க வேண்டியவை.

பெண் பூப்பெய்திய மாதம் முதலே, மாத விலக்கு வாடிக்கையாக மாதம்தோறும் வரும். அப்படி மாதம்தோறும் தவறாமல் வந்துகொண்டிருந்த மாதவிலக்கு சில பெண்களுக்கு திடீரென்று நின்றுவிடும். சிலருக்கு மூன்று நாள், இரண்டு நாள், ஒரு நாள் என்று படிப்படியாகக் குறைந்து நின்றுவிடும். இன்னும் சிலருக்கோ, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து, அப்படியே நின்றுவிடும்.

அப்படியான மாதவிலக்கில், ரத்தப்போக்கு வழக்கம்போல சாதாரணமாகவே இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இந்தப் பிரச்னை, பின்னாளில் கருப்பை புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.

மெனோபாஸ்-க்கு முன்பு:

உடற்பருமனே எல்லாப் பிரச்னைகளுக்கும் மூலகாரணம். எனவே, முப்பதுகளிலேயே உங்கள் உடல்பருமனை விரட்டுங்கள். இதுதான் நீங்கள் கவனமாக இருக்கவேண்டிய முதல் விஷயம். நீரிழிவு அல்லது ரத்தக்கொதிப்பு இருந்தால்அதை முதலில் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

இதை சரியாக வைத்திருந்தால், மெனோபாஸுக்குப் பிறகான காலத்தையும் உடல் உபாதைகள் இல்லாமல் சந்தோஷமாக கழிக்கலாம்.

மெனோபாஸ்-க்கு பிறகு:

* மெனோபாஸ் சமயத்தில், கால்சியம் சத்து உடம்பில் அதிகளவு குறையும். அதனால், பால், கேழ்வரகு இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* இரும்புச்சத்தும் குறையும் என்பதால், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தினமும் சாப்பிடுங்கள்.

* காய்கறிகள் நிறையச் சாப்பிடுங்கள்.

* நீரிழிவு இல்லையென்றால் எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். நீரிழிவு இருந்தால், கொய்யா, வெள்ளரிக்காய் மட்டும் போதும்.