Home ஆண்கள் ஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா ? இதுதான் அறிகுறி

ஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா ? இதுதான் அறிகுறி

937

நவ நாகரிக உலகில் அறிவியலில் வளர்ச்சி விண்ணை எட்டி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அறிவியலில் வளர்ச்சி நம்மை ஆட்டி படைக்க மறுபக்கம் இவற்றின் தாக்கத்தால் நாம் அதிகம் பாதிப்படையவும் செய்கின்றோம். அந்த வகையில் இதில் மலட்டு தன்மை பிரச்சினையும் அடங்கும்

பெண்களை போன்றே ஆண்களும் மலட்டு தன்மை பிரச்சினையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். சிலருக்கு இதற்கான அறிகுறிகள் என்ன என்று கூட தெரியாமல் தன் துணை மீது பழி போடுவதும் உண்டு. ஆண்கள் மலட்டு தன்மை உடையவர்கள் என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகளை இப்போது காண்போம்

புள்ளி விவரம்..! மலட்டு தன்மையை பற்றி எல்லா வித காலகட்டத்திலும் பல வகையான புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 15 முதல் 20 சதவீத தம்பதியினர் இந்த மலட்டு தன்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இது உலக மக்கள் தொகையில் சற்றே அதிகமானதாகும்

ஏன் இந்த நிலை..? பல ஆண்களுக்கு மலட்டு தன்மை பிரச்சினை இருப்பது கூட தெரியாது. சீரற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், பரம்பரை ரீதியான நோய்கள், விறைப்பு தன்மை, விந்தணு குறைபாடு போன்றவை மலட்டு தன்மைக்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். மேலும், இது போன்ற பிரச்சினை தங்கள் உடலில் இருப்பது ஆரம்ப நிலையில் பலருக்கும் தெரியாது.

விரைகளில் வலியா..? ஆண்களின் அந்தரங்க உறுப்புகளில் வலி இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இது பல வித ஆபத்துக்களை தரவல்லது. குறிப்பாக ஆண்களின் விரைகளில் அடிக்கடி வலி ஏற்படுகிறதென்றால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். இது மலட்டு தன்மைக்கான அறிகுறியாகும்.

விந்து வெளியேறவில்லையா..? தம்பதிகளின் தாம்பத்தியத்தின் முக்கிய பங்கே இந்த விந்தணு தான். ஆணின் விந்தணு பெண்ணின் கரு முட்டைக்குள் செல்லவில்லை என்றால் குழந்தை பேறு கிட்டாது. உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்தும் விந்தணு வெளியேறவில்லை என்றால், மலட்டு தன்மைக்கான அறிகுறியாகும்.

விறைப்பு தன்மையா..? இன்றைய காலகட்டத்தில் 20-25% தம்பதியினர் குழந்தையை பெற இயலவில்லை என்றால் அதற்கு முதன்மை காரணமாக இந்த விறைப்பு தன்மை பிரச்சினை உள்ளது. இது ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது. மன அழுத்தம், தயக்கம், பயம், குற்ற உணர்வு ஆகிய காரணத்தால் 10-15% பேர் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இது மலட்டு தன்மையான அறிகுறியாகும்.

ஆணுறுப்பின் அளவு முக்கியம்..! ஆண்களின் அந்தரங்க உறுப்பு தாம்பத்தியத்தில் ஈடுபாடு போது சிறியதாகவே இருந்தால் உடலுறவில் ஈடுபடுவது மிக கடினமாகும். ஆண்களின் பிறப்புறுப்பு சிறியதாக இருப்பதும் மலட்டு தன்மைக்கான அறிகுறியென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினை சற்றே மோசமானதாகும்.

உடலுறவில் நாட்டம் இல்லையா..? தனது இணையுடன் இணையும் போது, அதில் எந்த வித விருப்பமும் ஈடுபாடும் இல்லையென்றால் உங்களுக்கு மலட்டு தன்மை இருக்கிறது என்று அர்த்தம். இதே நிலை தொடர்ந்தால் இதன் தாக்கம் அதிகமாகி விட்டது என்பதை குறிக்கிறது.

ஆணுறுப்பு வீக்கம் அடைதல் பல ஆண்கள் இந்த அறிகுறியை கண்டு கொள்வதே இல்லை. ஆண்களின் அந்தரங்க உறுப்பில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டால் அதனை கவனிக்காமல் இருக்க வேண்டாம். இது போன்ற அறிகுறி மலட்டு தன்மையை குறிக்கிறது. இந்த நிலை பல நாட்கள் நீடித்தால் புற்றுநோய் போன்ற வேறு ஏதேனும் நோயாக கூட இருக்கலாம்.

முடி வளர்ச்சி இல்லையா..? உடலில் முடிகள் வளராமலும், அந்தரங்க பகுதிகளில் முடி வளராமலும் இருந்தால் அது மலட்டு தன்மைக்கான அறிகுறியாம். ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரானின் உற்பத்தி குறைவாகவோ அல்லது தடைபட்டு இருந்தால் இப்படி ஏற்பட கூடும்.

ஆரோக்கிமற்ற விந்தணு விந்தணுவின் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். தனது துணையுடன் சேரும் போது விந்தணு ஆரோக்கியமாக இருந்தால் தான் நீண்ட நாட்கள் அவர்களின் உடலில் அது உயிர் வாழ இயலும். இல்லையெனில், விரைவாகவே இறந்து விடும். எனவே, நீங்கள் உட்கொள்ளும் உணவும், உங்களின் அன்றாட பழக்க வழக்கமும் மிக இன்றியமையாததாகும்.

எப்படிப்பட்ட தாம்பத்தியம்..? உங்களின் துணையுடன் தாம்பத்யத்திய உறவு வைத்து கொள்ளும் போது, இருவரும் இன்பமாக இல்லையென்றால் உங்களின் வாழ்வு முழுமை பெறாது. பலருக்கு இதுக்கூட குழந்தை பிறப்பை தள்ளி போட வாய்ப்புகளாக அமைகிறது. எனவே, மேற்சொன்ன அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுங்கள் நன்பர்களே.

Previous articleநீங்கள் டேட்டிங் போது முதல் முறையின் போது நடந்த அனுபவங்கள்
Next articleஆண்கள் பெண்களின் அந்தரங்க உறுப்பு பற்றிய அறியவேண்டிய தகவல்