Home ஆண்கள் அண்மை பிரச்சனையால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள்

அண்மை பிரச்சனையால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள்

82

குழந்தை வரம்:கருவுறாமை பிரச்சனை பலரது வாழ்க்கையை சோகத்திற்குள்ளாக்குகிறது. இதில் இருந்து மீண்டு வருவது சற்று சிரமானது தான். இந்த கருவுறாமை கணவன் மனைவி உறவுக்குள் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் இருக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு நேர்மறையாக செயல்படுவார்கள். மற்றும் சிலர் எதிர்மறையான நடவடிக்கைகளை எடுத்துவிடுவார்கள். மொத்தத்தில் கருவுறாமை உறவுகளுக்குள் என்னென்ன மாறுதல்களை உண்டாக்குகிறது என்பது பற்றி காணலாம்.

காதல் அதிகரிக்கிறது
கணவன் மனைவி உறவிற்குள் கருவுறாமை பிரச்சனை வரும் போது ஒரு சிலர் இனிமேல் உனக்கு நான், எனக்கு நீ என்று வாழத்தொடங்கிவிடுகின்றனர். அவர்களது சோகத்தை மறக்க ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு செலுத்துகின்றனர்.

விவாகரத்திற்கு அடிப்படை
சிலர் கருவுறாமை பிரச்சனையை அடிப்படையாக கொண்டு விவாகரத்து செய்ய முன்வருகின்றனர். இது முற்றிலும் தவறான செயல். குழந்தை இல்லை என்பதற்காக ஒருவரை ஒதுக்குவது கூடாது.

நம்பிக்கை
ஒரு சிலர் குழந்தையின்மை அவர்களுக்குள் நம்பிக்கையை அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளனர். மருத்துவர் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொன்ன பின்னரும் கூட அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும், இது அவர்களது இறை நம்பிக்கை, காதல் ஆகியவற்றை அதிகரிக்க செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கையை கைவிடமால் இருப்பது சிறந்தது. பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு கூட குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

பேச்சு
கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்டாலே அளவில்லாத ஆனந்தம் வீட்டில் குடி கொள்ளும். எங்களுக்கு குழந்தை பெற வாய்ப்புகள் குறைவு என்று தெரிந்தவுடன் முன்பை விட இருவரும் மனம்விட்டு பேசிக்கொள்கிறோம் என சில தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

நேர்மையான வாழ்க்கை
குழந்தையின்மை எதிர்மறை மாற்றங்களை தான் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் குழந்தையின்மைக்கு பின்னர் பலர் தனது துணைக்காக நேர்மையான வாழ்க்கையை வாழ்கிறார்களாம்.