Home ஆண்கள் ஆண்களே ஆணுறுப்பு மொத்தமே 4 டிசைன் தானாம்

ஆண்களே ஆணுறுப்பு மொத்தமே 4 டிசைன் தானாம்

937

ஆண்களின் அந்தரங்கம்:அந்தரங்க இடங்களைப் பற்றி பேசுவற்கு எல்லோருமே கூச்சப்படுவதுண்டு. இதில் ஆண்கள் கொஞ்சம் விதிவிலக்காக இருக்கலாம். ஆண்கள் தங்களுடைய நெருங்கிய நண்பர்களுடன் தங்களுடைய அந்தரங்க உறுப்பைப் பற்றியும் அந்தரங்க விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்வதுண்டு.

சில ஆண்கள் வெளிப்படையாகவே தங்களுடைய ஆண்மையின் பராக்கிரமம் பற்றி பேசுவதுண்டு. ஏனெனில் நம்முடைய சமூகத்தில் ஆண் அந்தரங்க விஷயத்தைப் பற்றி பேசினாலோ பராக்கிரமசாலியாக நடந்துகொண்டாலோ அது நம்முடைய சமுதாயம் அவர்களுக்கு வழங்கும் பெருமை.

ஆனால் அந்தரங்க விஷயத்தில் எவ்வளவு திடமாக செயல்படும் ஆணாக இருந்தாலும் அவர்களைப் பற்றியும் அவர்களுடைய அந்தரங்க இடங்கள் பற்றியும் எல்லாமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில விஷயங்கள் வேறு யாராவது சொன்னாலோ அல்லது படித்தாலோ தான் ஓ! அப்படியா! என்று வாயைப் பிளந்து கேட்பதுண்டு. அதுபோன்ற ஒரு விஷயம் தான் இதுவும்.

ஆண்களின் அந்தரங்க உறுப்பைப் பற்றி ஆண்கள் பெரிதாக கண்டுகொள்ளாத விஷயங்களில் ஒன்று அதனுடைய வடிவமைப்பு தான். பெண்ணுறுப்பைப் பற்றிச் சொல்லும்போது, எல்லா பெண்களுக்குமே பெண்ணுறுப்பு ஒரேமாதிரி இருப்பதில்லை. கிளிட்டோரஸ் கூட ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசமாகவே இருக்கிறது என்று சொல்வதுண்டு.

ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில், ஆணுறுப்பு நான்கு வகை தான். அந்த நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றாகத்தான் எல்லா ஆண்களுக்கும் இருக்கிறது. அந்த நான்கு என்னென்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா?…

நிச்சயம் தெரிந்துகொள்ளலாம். இதைப் படித்தவுடன் அட ஆமாப்பா! என்பீர்கள்.

1. பெரிய தலைப்பகுதியை உடையது. தலைக்கணம் பிடித்தது போல தலைப்பகுதி பெரியதாகவும் தடிமனாகவும் இருக்கும். அப்படியே அடிப்பகுதிக்கு வர வர தடிமன் குறைந்துகொண்டே போகும். தலைப்பகுதி பருமனாக மட்டுமில்லாமல் மற்றவர்களைவிட சற்று நீளமாகவும் இருக்கும். உதாரணமாக, கேரட்டைப் போல தலைப்பகுதி பருத்ததாகவும் கீழ்ப்பகுதி மெல்லியதாகவும் இருக்கும்.

2. தலைப்பகுதி சற்று பருமனாக இருந்தாலும் அது ஆரம்பித்த இடத்திலேயே முடிந்துபோகும் அளவுக்கு தலைப்பகுதியின் நீளம் குறைவாக இருக்கும். ஒட்டுமொத்த உறுப்பின் அளவும் சேர்த்தே சற்று சிறியதாகவும் கிட்டதட்ட தலைப்பகுதிக்கும் அடிப்பகுதிக்கு பெரிய அளவு வித்தியாசமில்லாமல் தோன்றும். உதாரணமாக மிளகாயைச் சொல்லலாம். மிளகாயைப் போல சிறிது பருமனான குறைந்த நீளமுடையதாக இருக்கும்.

3. மூனறாவது வகையில் தலைப்பகுதி, நுனிப்பகுதியைவிட, அதாவது மொட்டுப் பகுதியைவிட சற்று சிறியதாகவும் தலைப்பகுதி லேசாக கர்வ் (curve)போன்று மிகச்சிறிய அளவில் வளைந்து காணப்படும்.
உதாரணமாக கத்தரிக்காயைப் போல் என்று சொல்லலாம். கத்திரிக்காயின் தலைப்பகுதியைவிட மொட்டுப் பகுதி பருத்தது போல் இருக்கும். அதுதான் மூன்றாவது ரகம்.

4. இந்த நான்காம் வகையில், ஆணுறுப்பின் மையப்பகுதி லேசாக வளைந்திருக்கும். 30 – 69 டிகிரி அளவில் வளைந்த தன்மையோடு இருக்கும். வெள்ளரிக்காயைப் போன்று வடிவமைப்பு கொண்டிருக்கும். இந்தவகை ஆண்குறி உள்ளவர்களுக்கு பெரோணி என்னும் நோய் (ஆண்குறியின் தோல்ப்பகுதியில் சிராய்ப்பு, உள்காயம் போன்றவை) அறிகுறி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் இந்த அமைப்பில் ஆண்குறி உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.