Home பாலியல் ஆண்களின் பாலியல் செய்பாடு பாதிக்க காரணம்

ஆண்களின் பாலியல் செய்பாடு பாதிக்க காரணம்

107

பாலியல் தகவல்:எந்த ஆணுக்குத்தான் படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்ற ஆசை இருக்காது? ஆண்கள் பருவ வயதில் அதிக முக்கியதுவம் செலுத்துவது தங்கள் ஆண்மையை அதிகரிப்பதில்தான். அதற்காவே உண்பது, உடற்பயிற்சிகள் செய்வது என ஆண்மையை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அதேசமயம் தங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா என்ற சந்தேகம் எப்பொழுதும் அவர்கள் மனதில் உருத்திக் கொண்டிருக்கும்.

உங்கள் ஆண்மையை அதிகரிப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ அதே அளவு ஆண்மையை பாதிக்கும் காரணங்களை தெரிந்து வைத்துக்கொள்வதிலும் செலுத்த வேண்டும். ஆண்மை குறைவு என்பது உணவுகளால் மட்டும் ஏற்படுவதல்ல சில சமயம் நம்மை சுற்றியுள்ள சிக்கல்களாலும் ஏற்படக்கூடியது. அந்த காரணங்களை கண்டறிந்து ஆரமபத்திலியே சரிசெய்வது உங்கள் இல்லற வாழ்க்கையை பாதுகாக்கும்.

குறைவான டெஸ்டோஸ்டிரோன் டெஸ்டோஸ்டிரோன் என்பது உங்கள் பாலியல் உணர்ச்சிகளை தூண்டக்கூடிய ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் குறையும்போது ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயது, தூக்கமின்மை, அதிக மதுப்பழக்கம், உடல் எடை என டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை பாதிக்கும் பல காரணிகள் உள்ளது. இயற்கை வைத்திய முறைகளை கொண்டு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க முயலுங்கள், செயற்கை முறையில் அதிகரிக்க செய்ய முயற்சி செய்தால் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

மனஅழுத்தம் ஆண்மைக்குறைவு ஏற்பட முக்கியமான காரணம் மனஅழுத்தம் மற்றும் உளவியல் தொடர்பான பிரச்சினைகள் ஆகும். அதிக மனஅழுத்தம் உங்கள் தாம்பத்ய வாழ்க்கை அஸ்தமனமாக போவதற்கான அபாய அறிகுறி ஆகும். ஒரு ஆணுக்கு விறைப்பு தன்மையில் பிரச்சினையோ அல்லது ஆண்மைக்குறைவு ஏற்ப்பட்டாலோ அவர் மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். இப்படி திடீரென விறைப்பு பிரச்சினை ஏற்பட்டால் அது மேற்கொண்டு தாம்பத்யத்தில் ஈடுபட முடியாத அளவிற்கு ஒரு பயத்தை மனதில் ஏற்படுத்திவிடும்.

தூக்கமின்மை தூக்கமின்மையும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும். தூக்கமின்மையால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியில் குறைபாடு, தாம்பத்யத்தில் நாட்டமின்மை, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் தூக்கமின்மையை ஏற்படுத்தும். இந்த பிரச்சினையை சரி செய்ய பல வழிகள் உள்ளது, உங்களுக்கு தெரியுமா தூங்குவதற்கு முன் உடலுறவில் ஈடுபடுவது அற்புதமான தூக்கத்தை கொடுக்கும்.

மருந்துகள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் உங்களுக்கு ஆண்மைக்குறைவை ஏற்படுத்தலாம். மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், கீமோதெரபி, புரோஸ்டேட் புற்றுநோய்ககான மருந்துகள் ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்பு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீங்கள் சாப்பிடும் மருந்துகள் மூலம் உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவர் உங்கள் மருந்துகளை மாற்றலாம் அல்லது வீரியம் குறைவான மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

மதுப்பழக்கம் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். எப்போதாவது சிறிது மது அருந்துவது ஒருவேளை உங்களின் செக்ஸ் மீதான ஆர்வத்தை அதிகரிக்கலாம். ஆனால் அதிகளவில் குடிப்பதோ அல்லது தினமும் குடிப்பதோ நிச்சயம் உங்கள் இல்லற வாழ்க்கையை பாதிக்கும். மது அருந்துவது உங்கள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பை பெருமளவில் பாதிக்கும். உங்கள் தாம்பத்யம் இனிக்க வேண்டுமென்றால் மதுஅருந்துவதை நிறுத்துங்கள். உங்களுக்கு மது முக்கியமா அல்லது தாம்பத்யம் முக்கியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

உடல் எடை அதிக உடல் எடை உங்கள் தாம்பத்ய ஆசையை பல வழிகளில் சிதைக்க கூடியது. நீங்கள் நினைக்கும் நிலைகளில் உடலுறவு கொள்ள நிச்சயமாக அதிக உடல் எடை பாதகமாக இருக்கும். உடல் எடை உங்கள் ஆற்றலை குறைப்பதோடு உங்கள் தன்னம்பிக்கையையும் குறைக்கும். அதிக உடல் கொழுப்பு உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்து விறைப்பு செயலிழப்பு பிரச்சினைகள்களை உருவாக்குகிறது. மற்ற எந்த காரணத்திற்காகவும் உடல் எடையை குறைக்கா விட்டாலும் உங்களின் தாம்பத்ய ஆசைகளுக்காகவாவது உடல் எடையை அவசியம் குறைக்க வேண்டும். உங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக பேச ஒரு நல்ல நண்பனை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை வாழ்க்கையில் வெற்றி பெற மட்டுமில்லை தாம்பத்ய வாழ்க்கையில்வெற்றி பெறவும் தன்னம்பிக்கை மிகவும் அவசியமானது. உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய செயல்களை செய்யுங்கள். உடற்பயிற்சி உங்கள் சுயமதிப்பை அதிகரிக்க சிறந்த வழி. உங்களது மறந்து விடாதீர்கள் நம்பிக்கைதான் உங்கள் தாம்பத்யத்தின் வெற்றி.