Home பாலியல் தாம்பத்யத்தில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் நோய்கள்

தாம்பத்யத்தில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் நோய்கள்

51

மனிதர்களின் உடல் என்பது மிகவும் சிக்கலான கணிப்பொறி போன்றது. கணிப்பொறியில் எவ்வாறு ஒரு இடத்தில் ஏற்படும் பாதிப்பு வேறொரு இடத்தில் எதிரொலிக்கிறதோ அதேபோல நம் உடலிலும் ஒரு மூலையில் ஏற்படும் பாதிப்பு வேறொரு இடத்தில் எதிரொலிக்கும். இந்த தொடர்வினையால் அதிகம் பாதிக்கப்படுவது தாம்பத்ய வாழ்க்கைதான். இதில் முக்கியமான ஒரு தொடர்வினை சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பு தாம்பத்யத்தை பாதிப்பதுதான்.

நீங்கள் படித்தது உண்மைதான். சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்புகள் உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான தாம்பத்யம் என்பது உடளவிலும், மனதளவிலும் சரியாக இருக்கும்போது மட்டுமே கிடைக்கும். சிறுநீரக பிரச்சினைகள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரகங்கள் சிறுநீரகங்கள் நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிக முக்கியமான ஒரு உடலுறுப்பு ஆகும். நமது இரத்தத்தை சுத்திகரிப்பதோடு, உடலுக்கு தேவையான உப்பு மற்றும் நீர்சத்துக்களை சமப்படுத்துகிறது மேலும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. உங்கள் சிறுநீரகம் பாதிப்படைந்துவிட்டால் நம் இரத்தம் சுத்திகரிக்கப்படாது எனவே உடலில் நச்சுக்கள் அதிகரிக்கும். உங்கள் சிறுநீரகம் பாதிப்படைந்துவிட்டதன் அறிகுறி வாந்தி, மயக்கம், கணுக்கால் வீக்கம் போன்றவை. சிறுநீரக பாதிப்புகள் உங்கள் உடலின் மொத்த செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். அதில் முக்கிமான ஒன்றுதான் பாலியல் செயல்திறன் குறைவு.

பாலியல் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? பாலியல் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலில் உள்ள பல பாகங்களின் ஆரோக்கியத்தை பொறுத்து அமைகிறது. மேலே கூறியது போல பாலியல் ஆரோக்கியம் என்பது உடல் வளர்ச்சி, மனாவளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளை பொறுத்துதான் அமைகிறது. எனவே சிறுநீரகம் பாதிப்படைந்து இருக்கும்போது அது உங்களின் பாலியல் செயல்திறனை பாதிக்கும்.

CKD எப்படி உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்? CKD என்பது கிரோனிக் கிட்னி டிசீஸ் என்பதன் சுருக்கம் ஆகும். இந்த நோய் ஆண், பெண் என இருவரின் பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது. இந்த நோய் ஆண்களுக்கு வந்தால் ஏற்படும் பாலியல் பாதிப்புகள்: பாலியல் இயக்கம் குறைவு, நிராகரிப்பு பயம், விறைப்புத்தண்மை அடைவது மாறும் அதை தொடர்வதில் சிக்கல், விந்து வெளியேறுவதில் பிரச்சினைகள், விந்து உற்பத்தியில் சிக்கல் என பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே உங்களின் பாலியல் வாழ்க்கையே சிதைந்துவிடும்.

உடலுறவால் ஏற்படும் சோர்வு பொதுவாகவே உடலுறவில் ஈடுபட்டவுடன் உடலில் ஒருவித சோர்வு தொற்றிக்கொள்ளும். அதிலும் CKD தாக்கினால் உடல் அதிக சோர்வடைய தொடங்கும். CKD தாக்கினால் இரத்த சுத்திகரிப்பு நின்றுவிடுவதால் உடலில் நச்சுப்பொருட்கள் சேர தொடங்கும். இந்த நச்சுப்பொருட்கள் உங்களை எளிதில் சோர்வாகவும், மந்தமாகவும் உணரச்செய்யும். மருத்துவ பரிசோதனையில் உங்கள் உடலில் CKD முற்றிய நிலையில் இருந்தால் மருத்துவர்கள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கான சிறப்பு உணவுகளை சாப்பிட பரிந்துரைப்பார்கள். இவை உங்களை சோர்விலிருந்து சிறிது பாதுகாக்க உதவும்.

பாலியல் ஆர்வம் பாலியல் ஆசைக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் வேதிப்பொருட்களை உடலின் எண்டோகிரைன் அமைப்பு உற்பத்தி செய்கிறது. இது உங்களின் பாலியல் செயல்திறனில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த எண்டோகிரைன் அமைப்பு சிறுநீரகத்தின் ஒரு பகுதியாகும். எனவே சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பு இந்த ஹார்மோன் செயல்பாட்டை தடுக்கிறது. ஆதலால் உங்கள் பாலியல் ஆசையும். செயல்திறனும் தானாக குறையும்.

பயம் மற்றும் கவலை CKD ஆல் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆண்களுக்கு பயம், மனஅழுத்தம், கவலை போன்றவை அதிகமாக இருக்கும். இவை சாதாரணமானதாக தெரியலாம் ஆனால் இது உங்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் குறிப்பாக பாலியல் விஷயத்தில். உங்களின் கவலை இரண்டு வாரங்களுக்கு மேலும் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் கூறுங்கள்.

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் CKD ஆண்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகளை போல பெண்களிடையேயும் பல பாலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். பாலியல் ஆசைகள் குறைதல், உடலுறவின் போது வழி, தூண்டப்படுதலில் சிக்கல், சீரற்ற மாதவிடாய், உச்சக்கட்டம் ஏற்படாமல் இருத்தல், கருவுறுதலில் பிரச்சினை. CKD உங்கள் பாலியல் வாழைக்காயை மட்டும் பாதிக்காது உங்கள் மீதான உங்களுடைய எண்ணம், மற்றவர்கள் உடனான தொடர்புகள் என அனைத்தையும் பாதிக்கும். மேலும் சிறுநீரக பிரச்சினைகள் சருமத்தில் அரிப்பு, எடையில் மாற்றம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

கருவுறுதல் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு கருவுறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவேதான் மருத்துவர்கள் கருவுற விரும்பும் ஒரு வருடத்திற்கு முன்பே கிட்னி மாற்று சிகிச்சை செய்துகொள்ள பரிந்துரைக்கிறாரக்ள். சிறுநீரக பிரச்சினை இருக்கும்போது கர்ப்பமடையும் பெண்களுக்கு பெரும்பாலும் கருச்சிதைவு, குறைப்பிரசவம் அல்லது எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இன்று மாற்றியுள்ள பழக்கவழக்கங்களால் பெரும்பாலும் இளைஞர்களுக்கு கூட இந்த CKD ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக பருவ வயதில் இருப்பவர்கள் இதற்கான அறிகுறிகள் எதாவது தெரிந்தால் உடனடியாக தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் பருவ வயதில் CKD பாதிப்பு அவர்களை உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் தவறான முடிவுக்கு செல்லவும்கூடும். எனவே பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொளவது அவசியம்.