Home சமையல் குறிப்புகள் மணக்க மணக்க மதுரை மட்டன் குழம்பு

மணக்க மணக்க மதுரை மட்டன் குழம்பு

43

மட்டன் குழம்பு என்றால்,மதுரை மட்டன் குழப்பு தான் அனைவரும் முதல் தேர்வும். காரம், சுவை, வாசனை அனைவரையும் ஈர்க்கும். இந்த மட்டன் குழம்பை எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை:

எலும்புடன் ஆட்டுக்கறி -1/2 kg
தக்காளி பெரியது -2
சின்ன வெங்காயம் _50 கிராம்
கசகசா _2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -2 டேபிள்ஸ்பூன்
குழம்பு மசாலா பொடி -2 குழிக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி -சிறிது
தேங்காய் -1/2 மூடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கசகசா ,சீரகம் இரண்டையும் அம்மியில் அரைக்கவும்.அம்மியில அரைத்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

நன்றாக அரைத்ததும் 5 சின்ன வெங்காயத்தை அதனுடன் தட்டி எடுக்கவும்.கறியை நன்றாகக் கழுவி அரைத்த மசாலா ,தக்காளி ,இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு போட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்.

கறி நன்றாக வெந்ததும் வாணலியில் நல்லஎண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும் .அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்ற வேண்டும் .அதிகம் கொதிக்க விடக்கூடாது .எண்ணெய் தெளிந்து மேலே மிதந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கமகமன்னு மதுரை மட்டன் குழம்பு ரெடி!