Home ஆண்கள் மது அதிகம் குடித்தால் விறைப்புத்தன்மை இருக்காது! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

மது அதிகம் குடித்தால் விறைப்புத்தன்மை இருக்காது! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

88

படுக்கை அறையில் உங்கள் துணையை திருப்திபடுத்துவது என்பது வாழ்வின் முக்கியமான அங்கம். ஆனால் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பல வகையில் ஆண்களுக்கு செக்ஸ் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆணுறுப்பு விறைப்புத்தன்மை குறைந்து காணப்பட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மது அருந்துவது முக்கிய காரணம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். அதிக அளவிற்கு மது அருந்துவதால் ஆல்கஹால் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்னைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

குறைந்த அளவிற்கு மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது என்றாலும், வாரத்திற்கு 14 யூனிட்டிற்கு மேல் மது அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் கேடானது. வயது ஆக ஆக மது அதிகம் குடிப்பது ஆண்மை பிரச்னையில் கொண்டு போய் சேர்க்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் விறைப்புத்தன்மையை பெறும். ஆனால் மது அருந்துவதால் ஆணுறுப்புக்கான ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. அதே போன்று அதிகம் குடிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்