Home பெண்கள் தாய்மை நலம் மனைவி டயர்ட் ஆனால் என்ன செய்வாள் என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா?

மனைவி டயர்ட் ஆனால் என்ன செய்வாள் என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா?

126

திருமணம் ஆனவுடனேயே ஆண்கள் மன்னிப்பு கேட்க கற்றுக் கொள்ள வேண்டும்,எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லணும் இல்லன்னா எப்பவும் இரண்டு பேருக்குள்ள சண்ட வந்துட்டேயிருக்கும் என்ற ஏகப்பட்ட பில்டப்புகளை பார்த்திருக்கிறோம். உண்மையில் நிலைமை அப்படித் தான் இருக்கிறதா?

வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணமானாலும் சரி,இருவரும் மனப்பூர்வமாக காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சரி, திருமண வாழ்க்கையில் இணைந்த சொற்ப நாட்களிலேயே இருவருக்குமிடையிலான சண்டைகள் ஆரம்பித்து விடும்.திருமணம் முடித்தவர்கள் ஏன் எல்லாருமே அச்சு பிசகாமல் ஏன் அப்படியே சொல்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அந்தப் பிரச்சனையை விரிவாக விவரிக்கும் ஓர் கதை.

இதனை திருமணம் முடித்தவர்கள் மட்டும் படிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. காதலிப்பவர்கள்,சிங்கில் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

முன் கதை :

பேரு…… பேங்க்ல மேனேஜர். பேங்க்ல மட்டும் தாங்க மேனேஜர் ஆனா என் வொய்ஃபுக்கு ப்யூன். ரெண்டு பேருமே லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா லவ் பண்றப்ப இருந்த அதே ரொமான்ஸ் இப்பவும் இருக்குதான்னா கண்டிப்பா இல்லன்னு தான் சொல்வேன்.அவளும் வொர்க் பண்றா, ஷீ இஸ் எ ஃப்ரோபஷனல் கதக் டான்சர்.

எங்க கதைக்கு போறதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேரோட கேரக்டரயும் முன் கதையையும் கொஞ்சம் சொல்லிடறேன்.

போட்டி :

அது நேசனல் கல்ச்சுரல்ஸ் மீட். தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மாவட்டங்கள்ல இருந்தும் நிறைய காலேஜ் ஸ்டூண்டஸ் அந்த ஈவன்ட்டுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாங்க.

சும்மா சொல்லக்கூடாதுங்க அந்த நாட்கள் எல்லாம் சொர்கம். ஸ்டூடண்ட்ஸ் ஒவ்வொருதரும் எவ்ளோ திறமைகள தன்னுள்ள வச்சிட்டு சுத்திட்டு இருக்காங்கன்றத நேர்லயே பாத்தது அன்னக்கி தான்.

மூணு நாள் நடந்த போட்டியில எங்க காலேஜுக்கும் அவ படிக்கிற காலேஜுக்கும் தான் செம்ம போட்டி. ஸ்போர்ட்ஸ்ல நாங்க ஜெயிச்சுட்டோம்.

ஆனா ரொம்ப வித்யாசமில்ல ரெண்டு பாயிண்ட் வித்யாசத்துல தான் நாங்க ஜெயிச்சது. இந்த கல்ச்சுரல்ஸ்ல கிடைக்கிற பாயிண்ட்ஸ வச்சு தான் ஓவரால் சாம்பியன் யாருன்றதே தெரியும்.

அதனால இதுல எங்க ரெண்டு காலேஜுக்கு இடையில பயங்கர போட்டி.

செக்கரெட்ரி :

ஸ்போர்ட்ஸ் டீம் செக்கரெட்ரின்றனால அங்க நிறைய ஆக்டிவிட்டீஸ்ல கலந்துக்க வேண்டிய நிலைமை. அத விட நம்ம காலேஜுக்கு பேரு வாங்கிக் கொடுக்கணும்ன்ற இக்கட்டான நிலமையும். இன்னும் நல்லா நியாபகம் இருக்கு. அன்னக்கி ரெண்டாவது மாடில இருந்து போன் சார்ஜ் போட்றதுக்காக கீழ போயிட்டுயிருந்தேன். அப்போ என்னோட ஜூனியர் கால் பண்ணான்.

அண்ணா நியூ பில்டிங் ஆடிட்டோரியம் வாங்க… சீக்கிரம்

ஏண்டா என்னாச்சு ?? எவனாவது மண்டைய உடச்சுட்டானா? சண்ட போட்றாய்ங்களா?

இல்லன்னா….. இங்க டேன்ஸ் ஃப்யூஷன் போட்டி நடக்குது ஃப்ர்ஸ்ட் லெவல் ஒரு பொண்ணு ஆடினா இங்க எல்லாரும் எழுந்து நின்னு க்ளாப்ஸ்…. நம்ம பசங்களும் விசிலடிச்சு சில்லறைய வீசுறாங்க ஜட்ஜஸ் எல்லாரும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் எனகென்னவோ இதுல நம்ம விழுந்துருவோம்ன்னு என்று முடிப்பதற்குள்

வாயக்கழுவுடா பரதேசி…. செலக்ட் பண்ணிட்டாங்களா?

இல்லன்னா செக்கண்ட் லெவல் இருக்கு அதுல செலக்ட் ஆனா தான் ஃபைனலுக்கு நுழைய முடியும் அதுல ஜெயிக்கிறவங்க தான் வின்னர்.

இரு வர்றேன்.

முதன் முதலாக :
ஏற்கனவே எங்க ரெண்டு காலேஜுக்கும் இடையில ரெண்டு பாயிண்ட்ஸ் தான் லீடிங் இவன் சொல்றதப் பாத்தா இதுல நம்ம காலேஜ் பேரு புட்டுக்கும் போலயே என்று பயந்து கொண்டே அந்த ஆடிட்டோரியத்திற்கு சென்றேன். கூட்டம் அலைமோதியது மேடையில் மட்டும் ஃபோக்கஸ் லைட் வெளிச்சத்தில் ஆட்டக்காரர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் பேசிய அந்த ஜூனியரை கண்டுபிடித்து அருகில் போய் நின்றேன்.

எந்த க்ரூப்டா ஆடினாங்க?

க்ரூப் எல்லாம் இல்லனா சிங்கில்… தனியா ஒரு பொண்ணு ஆடினா

சிங்கிலா என்ற ஆச்சரியத்துடன் யார்றா? என்று கேட்டேன்

எங்களுக்கு வலது பக்க மூளையில் இருந்த ஒரு கூட்டத்தை காண்பித்து அவளை அடையாளம் காண்பித்தான்.

முகம் :

பின்னாலிருந்து ஒரு பக்க முகம் பார்க்கவே அவ்வளவு லட்சணமாக இருந்தாள். கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்… அவள் மீது காதலில் விழ ஆரம்பித்த நொடி அதிலிருந்து தான் துவங்கியிருக்க வேண்டும்.

எப்படியாவது அவள் முகத்தை பார்த்திட வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருக்க ஃப்ரஸ்ட் லெவல் வெற்றியாளர்களை அறிவிக்க நடுவர்கள் மேடையேறினர். அவர்கள் மைக்கை பிடித்ததுமே கூட்டத்திலிருந்து ஆங்காங்கே இவள் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படியே பூரிப்புடன் மகிழ்ச்சி பொங்க அங்கும் இங்கும் திரும்பினாள் அப்படியே எங்கள் பக்கம் திரும்பும் போது அவளது தரிசனம் கிடைத்தது.

அவளுடன் சேர்ந்து இருபது பேர் வரையில் அடுத்தக்கட்ட போட்டிக்கு தேர்வாகியிருந்தார்கள்.

மேடையில் :

இரண்டாம் கட்ட போட்டி சூடு பிடித்தது.நான்கு போட்டியாளர்களைக் கடந்து ஐந்தாவது போட்டியாளராக களமிறக்கப்பட்டாள். அவள் பெயரை உச்சரித்ததுமே அரங்கமே கை தட்டி ஆர்ப்பரித்தது….

அவள் பெயரைக் கத்தியது எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை மேடையில் அவள் நிற்க முழுத் தரிசனமும் கிடைத்தது.

வெள்ளை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தால் ஷாலை எதோ மாதிரியாக முன்பக்கமும் பின்பக்கமும் சேர்த்துக் கட்டியிருந்தாள்.

பாரம்பரியமும் நவீனமும் என்று நடத்தப்பட்ட அந்த போட்டியில் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது அவள் தான். பரதம்,கதக்,மோகினியாட்டம்,ஜாஸ்,ஃப்ரீ ஸ்டைல் என கலந்து கட்டினாள்.

அவளது அசைவுகளுக்கு உயிருட்டும் விதத்தில் இசை கச்சிதமாக பொருந்தியது. கடைசியில் முடிக்கும் தருவாயில் இடது கால் கட்டை விரலில் தன்னுடைய கால் விரல்கள் முழு எடையையும் தாங்கிப் பிடிக்க, பின்பக்கமாக தலைக்குப்புற கவிழ்ந்து நடனமாடியது எழுந்து நின்று கைதட்ட வைத்தது.

அவள் முடித்து எங்களை பார்த்து வணங்கும் போது எல்லாருமே கத்தி ஒன்ஸ்மோர் என்றார்கள்

சாம்பியன் :

அண்ணா நீங்களுமா? என்று ஒரு விஷ ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தான் என் ஜுனியர்.இறுதிப்போட்டியில் அவளால் அவளது கல்லூரி வென்றது ஓவரால் சாம்பியனை அவர்கள் தட்டிச் சென்றார்கள்.

எல்லா மாணவர்களும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.அவளிடம் சென்றேன். எதேனும் பொறுப்பில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்த நாள் அது.

நான் இந்த காலேஜ் ஸ்போர்ட்ஸ் செக்கரட்ரி உங்க டான்ஸ் செம்மையா இருந்துச்சு… எங்க எச்.ஓ.டி உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு டிப்பார்ட்மெண்ட்ல இருக்காரு… என்று நிறுத்தினேன்

யார் அந்த எச்.ஒ.டி? :

எனக்கு நன்றி சொல்லிவிட்டு நண்பர்களிடத்தில் விடைப்பெற்றாள் என்னோடு வர ஆயுத்தமானாள். கிரவுண்ட் வழியாக இருவரும் நடந்து சென்றோம்.

என்னை சரியாக கணித்திருப்பார் போல நான் வேறு கல்லூரி பெண்ணுடன் நடந்து செல்வதைப் பார்த்த என் பி டி மாஸ்டர்

டேய் நாளைக்கு ப்ராக்டிஸ் வந்திடுவல்ல….

பக்கா சார் காலைல ஏழு மணிக்கு ஷார்ப்.

இப்ப எங்க போற…

ஹெச். ஓ.டி கூப்டாரு சார்.

பி.டி.க்கே இப்படியென்றால் என் நண்பர்களுக்கு மூக்கு வியர்க்காதா? வந்து விட்டார்கள்

மச்சான் நாளைக்கு மட்டும் நீ ப்ராக்டிக்கல் சப்மிட் பண்ணலைன்னா அரியர் தானாம் மேம் சொல்ல சொன்னாங்கடா…

சரிசரி வச்சிடலாம்….

எங்கடா போற?

எச்.ஓ.டி கூப்டாரு….

நம்ம தல இன்னக்கி வரவேயில்லயே…… டிப்பார்ட்மெண்ட்ல ஆளேயிருக்க மாட்டாங்க இந்நேரத்துக்கு எல்லாம் கிளம்பியிருப்பாங்க..

அவன் சொன்னதைக்கேட்டு ஒரு நிமிடம் ஜெர்க் ஆனாலும் லூசு நம்ம எச்.ஒ.டின்னு சொன்னேனா? என்று சமாளித்து வைத்தேன்.

கொடுமை என்னவென்றால் யார் அந்த எச்.ஒ.டி என்று எனக்கும் தெரியவில்லை என்பது தான்.

காதல் டூ கல்யாணம் :

மற்றவை எல்லாம் வழக்கமானது தான் நான் ப்ரப்போஸ் செய்தேன்.முதலில் மறுத்தாள் பத்து நாட்களில் ஓகே. சொன்னாள் காதலித்தோம்.

வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகே திருமணம் என்ற வைராக்கியத்துடன் இருவருமே வேலைக்கிடைத்த பிறகு திருமணம் செய்து கொண்டோம்.

இப்போது சென்னையில் வசித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது எங்கள் வாழ்க்கை எப்படித் தெரியுமா இருக்கிறது? திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என இருவேறு காலங்களாக பிரிக்கலாம் அந்த அளவுக்கு வித்யாசத்தை உணர்கிறோம்.

அதற்காக அவள் மீதான காதல் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல காதல் இருக்கிறது தான் ஆனால் ப்ராக்டிக்கல் வாழ்க்கை என்று வரும் போது தான் இந்தப் பிரச்சனை.

மகனே வேண்டாம் :

ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் நின்றுகொண்டிருந்த என்னிடம் கங்கிராட்ஸ் பையன் பொறந்திருக்கான் என்று சொல்லும் போதே விக்கித்து நின்றேன். அடேய் மகனே நீயும் என்னைப் போல சிரமப்படப்போகிறாயே…. கடவுளே எனக்கு ஒரு பெண் குழந்தையை அனுப்பி வைத்திருக்க கூடாதா என்ற கோபம் வேறு.

தற்போது முதலாம் வகுப்பு படிக்கிறான். ரேஸ் துவங்கிவிட்டது… பள்ளி,கல்லூரி என்று சட்டென நாட்கள் ஓடிடும் பிறகு திருமணம் தான்.

தினமும் அவனை பள்ளியில் விடுவது என் வேலை அழைத்து வருவது அவளது வேலை. மாலையில் அவளுக்கு சீக்கிரமே முடிந்திடும் எனக்கு இரவாகிடும்.

Previous articleகணவர்களின் இந்த செயல்கள் தான் மனைவியரை அதிகம் வலி உணர செய்கிறதாம்!
Next articleநீங்கள் செக்ஸுவலி அட்டாச்சுடு என்பதை இந்த அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்!