Home சூடான செய்திகள் இந்த 4 விஷயத்தில், மனைவிய கண்டு நீங்க பயந்ததுண்டா?

இந்த 4 விஷயத்தில், மனைவிய கண்டு நீங்க பயந்ததுண்டா?

26

உடல் ஹார்மோன் சமநிலை இழக்கும் போதும், கணவன் மனைவி உறவு உணர்வு சமநிலை இழக்கும் போதும் அதனதன் ஆரோக்கியம் சீர்குலைந்து போகிறது. கணவன் – மனைவி இடையில் விட்டுக்கொடுத்து போகும் எண்ணம் தான் இருக்க வேண்டுமே தவிர, விட்டால் போதுமடா சாமி என்ற எண்ணம் பிறக்க கூடாது.

கொடூரமான எண்ணம்! மனைவியிடம் கொடூரமான எண்ணம் வெளிப்படும் போதுதான் ஆண்கள் அதிகம் அச்சம் கொள்கின்றனர். இதை தனிமனித இயல்பு கோளாறு என்றும் குறிப்பிடுகின்றனர். இது போன்ற நிலைப்பாடு மனைவி மத்தியில் வெளிப்படும் போதும் கணவன்மார்கள் அச்சம் கொள்கின்றனர். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

அடுத்த பிரச்சனை! மனைவி அதிகளவில் பிரச்சனைகள் கூறும் போது அவர்கள் மீது அச்சம் ஏற்படுகிறது. அது ஆரோக்கியம், பொது என எந்த வகையாக கூட இருக்கலாம். ஆண்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்சனயை வெளிகூறி அழமாட்டார்கள். இதுசார்ந்த அச்சத்தை ஆண்கள் நண்பர்களிடம் கூட பகிர்ந்துக் கொள்வது இல்லையாம்.

ஆத்திரம்! கணவன் – மனைவியில் யார் ஒருவர் அதிகமாக ஆதிரமடைகிறார்களோ, மற்றொருவர் அதிக மன அழுத்தம், பதட்டம் கொள்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இவர்களது உடலில் கூட அதிக கெமிக்கல் மாற்றங்கள் உண்டாகின்றன என கூறப்படுகிறது.

மாட்டிக்கொள்வது! சில சமயங்களில் கணவன் அல்லது மனைவி உறவு பிரிந்துவிடக் கூடாது, பெயர் கெட்டுவிடும் என்பதற்காக விருப்பமில்லாத உறவில் இணைந்திருப்பார்கள். இதனால் அந்த உறவில் தொடர்ந்து இருக்கும் துணைக்கு மன அழுத்தம், மன சோர்வு, பதட்டம் போன்ற தாக்கங்கள் பக்கவிளைவுகளாக ஏற்படுகின்றன.

காரணம் தேடுங்கள்.. உங்கள் உறவில் ஏற்படும் அச்சம் அல்லது உண்டாகும் சண்டைகள் எதனால் உண்டாகிறது என்பதை அறிந்துக் கொள்ள முதலில் அந்த காரணத்தை கண்டறிய வேண்டும். இது அறிந்துக் கொண்டாலே பாதி பிரச்சனை தீர்வுக்கு வந்துவிடும்.

உதவி! உங்களால் முடியவில்லையா? உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் உதவி நாடுங்கள். இல்லையேல் சிறந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் உடல் மட்டுமல்ல, மனதும் ஆரோக்கியமாக இருந்தால் தான் உறவும், வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்.