Home ஆண்கள் ஆண்மை பெருக ஆண்களின்ஆரோகியமான உயிரணு பெற இந்த தகவல் உதவும்

ஆண்களின்ஆரோகியமான உயிரணு பெற இந்த தகவல் உதவும்

316

ஆண்மை பெருக்கம்:நமது சந்ததியினர் ஆரோக்கியமானவர்களாக உருவாக தரமான உயிரணுவும், கருமுட்டையும் இணைவது அவசியம். உயிர் உருவாவதற்குக் காரணமான விந்தணுக்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலையடையச் செய்கிறது. ஆண் மலடு அதிகமாவதால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே செயற்கை கருத்தரித்தல் மைய மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன.

விந்தணு உற்பத்தி குறைவதால் மனித இனம் உருவாவதில் சிக்கல் ஏற்படுகிறது. பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். விந்தணுக்கள் உற்பத்தி குறைவதற்கு மாறி வரும் உணவுப்பழக்கமும், லேப்டாப், வைஃபை போன்றவைகளை மடியில் வைத்து அதிகம் உபயோகிப்பதும் காரணம் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைய தாறுமாறான உணவுப்பழக்கம், உடைகளை இறுக்கிப் பிடிக்கும் உடைகளை அணிவது. வேலைப்பளு, மனஅழுத்தம் போன்றவையும் விந்தணு உற்பத்தியை பாதிக்கின்றன.

1.லேப்டாப் உலகம் திருமணமான தம்பதியர் தாம்பத்ய உறவு கொள்ளும் போது ஆணிடம் இருந்து வெளியேறும் கோடிக்கணக்கான விந்தணுக்கள் பெண்ணின் கருப்பைக்குள் நீந்தி செல்கின்றன. இதில் எந்த உயிரணு பெண்ணின் கருமுட்டையை சென்று அடைகிறதோ அதுவே உயிராக உருவாகிறது. கரு முட்டையை துளைத்துக்கொண்டு உள்ளே செல்லும் விந்தணு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். ஆனால் லேப்டாப் அதிகம் உபயோகிக்கும் ஆண்களுக்கு வெப்பச்சூட்டில் உயிரணுக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு டிஎன்ஏக்களும் பாதிக்கப்படுகிறதாம். இதனால் குழந்தை பாக்கியமே பாதிக்கும் சூழ்நிலை உருவாகிறது. powered by Rubicon Project மடியில் வைத்து கொஞ்சவேண்டிய மனைவிக்கு பதிலாக லேப்டாப்பை வைத்து வேலை செய்வதால் மழலை செல்வம் மடியில் தவழ முடியாமல் போய்விடுகிறது என்பதுதான் வேதனை. விந்தணு உற்பத்தியை தடுப்பவை, உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

2.வெப்பத்தின் பாதிப்பு குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே குறை கூறுவதில் பிரயோஜனமில்லை. ஆணிடமும் குறையிருக்கலாம். விந்தணு எனப்படும் சுக்கிலம் சரியாக பலமாக இல்லாவிட்டால் நிலம் நன்றாக இருந்தாலும் விழும் விதை சரியாக இல்லாவிட்டால் அது முளைக்காது. இன்றைக்கு லேப்டாப்பும், செல்போனும் கையுமாகவே அலையும் சூழ்நிலை உருவாகி வருகிறது. லேப்டாப்பினை மடியில் வைத்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக உபயோகிக்கும் ஆண்களின் இடுப்புப் பகுதியில் வெப்பம் தாக்குகிறது. இது விரைகளின் வெப்பநிலையை 3 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக்குகிறதாம். இதுவே விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது.

3.விந்தணுக்களின் எண்ணிக்கை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

4.விந்தின் வேகம் தாம்பத்ய உறவின் போது உயிரணுக்கள் வெளியேறும்போது அதில் கிட்டத்தட்ட 100 மில்லியன் உயிரணுக்கள் வெளியேறுகிறது. கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிக தரமுள்ளதாக இருக்கிறது. விந்தின் வடிவம் தலைப்பகுதி, வால் சரியாக இருந்தால் மட்டுமே அது கருவுறுதலை உறுதி செய்யும். ஆரோக்கியமற்ற விந்துக்கள் கருமுட்டையை சென்றடையாது. வேகமாக நீந்திச்செல்லும் விந்துக்கள் மட்டுமே கருமுட்டையை சென்று சேரும்.

5.சத்தான உணவுகள் தக்காளியில் உள்ள லைகோபின் விந்தணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தினசரி உணவில் தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள் விந்தணுக்கள் தரமானவையாக, ஆரோக்கியமானவையாக இருக்கும். அதே போல லைக்கோபின் சத்து நிறைந்த திராட்சை, தர்பூசணி, சிவப்பு கொய்யா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிவப்பு முட்டைக்கோஸ், துளசி ஆகியவையும் சாப்பிடலாம்.

6.பாதாம் பால் பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடியது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு பாலில் கலந்து சாப்பிடுவது விந்தணுவை பலம்பெறச் செய்யும். புதிதாக திருமணமான தம்பதியினருக்கு பாதாம் பருப்பு கலந்த பால் கொடுப்பது இதனால்தான். கேரட்டை வாரத்துக்கு மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது ஆண் மலட்டுத்தன்மை போக்கி ஆரோக்கியமான விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்.

7.வெள்ளைப்பூண்டு இந்திய சமையலில் வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். விரத நாட்களில் இதனை தவிர்த்து விடுகின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களைச் சாப்பிடுவது விந்தணுவின் ஆரோக்கியத்துக்கு உதவும். பூண்டு பாலியல் ஹார்மோன்களை ஊக்கப்படுத்தும், இதில் உள்ள அலிசின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது விந்தணுவுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும். இதில் இருக்கும் செலினியம் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், விந்தணுவின் சீரான இயக்கத்துக்கு உதவுவது.

8.ஆரோக்கியமான உறக்கம் இரவு பகல் பார்க்காமல் உழைக்க இன்றைய இளைய தலைமுறையினர் தயாராகிவிட்டனர். இதுவும் ஆண் மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது. ஒரு ஆய்வின்படி, தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனபெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திற்குமட்டுமல்ல, இனப்பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது. ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.

9.விந்தணு உற்பத்தி அதிகரிக்க இயற்கை மூலிகையான அஸ்வகந்தா விந்துவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியது. ஆய்வுகளின் படி இது விந்தணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து உபயோகித்து வரும்போது விந்தணு உற்பத்தி மட்டுமின்றி அவற்றின் தரமும் உயரும். லேப்டாப்பை உங்கள் மடியில் வைத்து உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். வைஃபை இயக்கத்தில் உள்ள லேப்டாப்பை மடியில் இருக்கும்போது அதிக ரேடியோ அலைகளால் விந்தணுக்கள் வெகுவாக பாதிக்கப்படும். அதேபோல உங்கள் செல்போனையும் பேண்ட் பக்கத்திற்குள் வைப்பதை தவிருங்கள்.

10.குளிர்ந்த நீர் குளியல் புகைப்பழக்கத்தை தவிர்த்தல் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது உங்களுடைய உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க கூடும். மேலும் அளவாக மது அருந்துவது, சத்தான உணவுகளை சாப்பிட்டு எடையை சீராக பராமரிப்பது, இறுக்கமான உடைகளை அணியாமல் இருப்பது போன்றவை உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்கும். விந்தணுக்களைப் பொறுத்த வரையில் சூடான நீரை காட்டிலும், குளிர்ந்த நீர் குளியல் அதிக நன்மையை வழங்கக்கூடியது. குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை ஏற்படுத்துவதோடு விந்தணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Previous articleகாதல் உறவின்போது சங்கடமான சந்தர்ப்பங்கள்
Next articleவயது கூடிய பெண்ணை உறவுக்கு அழைப்பதால் உண்டாகும் தீமைகள்